குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?

"எந்த பெயரும் பெற்றோரை திருப்திப்படுத்துவதில்லை. வித்தியாசமான, புதிய பெயராக சூட்டினால் சில பெற்றோர்கள் பயந்தே விடுவார்கள். நான் முதலில் சொல்லும் பெயரை மறுக்கும் பெரும்பாலனவர்கள் இறுதியில் சாதாரண பெயரையே வைக்கின்றனர்"
குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?
குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?Canva
Published on

பெயர் வைப்பதை தொழிலாக வைத்திருக்கும் பெண், ஒரு பெயருக்கு 7 லட்சம் சம்பாதிக்கிறாரா?

பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு மிக சவாலான காரியமாகவே இருக்கும்.

சிலர் மாதக்கணக்காக சரியான பெயரை சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள்.

யார் குடுபத்தினரின் பெயரை வைப்பது? எந்த குல தெய்வத்தின் பெயரை வைப்பது, தமிழ் பெயரா? ஆங்கில பெயரா? சமஸ்கிருத பெயரா? என 1008 சிந்தனைகள் மனதுக்குள் ஓடும்.

பலரும் பெயர் வைக்க ஜோசியர்களையும், பெரியவர்களையும், மதகுருமார்களையும் சார்ந்திருப்பர்.

இப்போது குழந்தைகளுக்கு சரியான பெயரைச் சூட்டுவது ஒரு தொழிலாகவே மாறியிருக்கிறது. நியூ யார்கில் வசிக்கும் டெய்லர் ஏ. ஹம்ப்ரி (Taylor A. Humphrey) என்ற பெண் இதில் வல்லவராக இருக்கிறார்.

சாதாரணமாக குழந்தைக்கு சரியான பெயரை எடுத்துரைக்க 1500 அமெரிக்க டாலர்கள் வரை பணம் வாங்குகிறார் இந்தப் பெண். இந்திய ரூபாய் மதிப்பில் 1.2 லட்சம் ஆகும்.

இதுவே பணக்கார பெற்றோராக இருந்தால் 10,000 அமெரிக்க டாலர் வரை வாங்குகிறாராம். அதாவது 8.2 லட்சம்.

கடந்த ஆண்டு மட்டும் ஹம்ப்ரி 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பெயர் சூட்ட உதவி புரிந்துள்ளார்.

மிகவும் குறைந்த மதிப்புடைய சேவையான 1500 டாலருக்கு பெற்றோர்களிடம் போன்காலில் பேசி பெயர் வைக்கின்றனர்.

பெற்றோர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை அனுப்புகின்றனர். அவர்கள் குடும்பம், பரம்பரை மற்றும் முன்னோர்கள் குறித்து தகவல்களை தெரிந்துகொண்டு பழமையான குடும்ப பெயர்களை தேடிப்பிடிக்கின்றனர்.

10,000 டாலர் மதிப்புடைய சேவையைப் பெற்றால் குழந்தை மற்றும் அவர்கள் நிறுவன பிராண்டின் பெயர்கள் ஒன்றாக வரும்படியான பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இந்த தொழில் ஹம்ப்ரிக்கு இயல்பாபாகவே வந்திருக்கிறது.

2015ம் ஆண்டு தனது சமூக வலைத்தளத்தில் குழந்தைகள் பெயர்களையும் அதன் அர்த்தங்களையும் பதிவிடத் தொடங்கியிருக்கிறார்.

இது அவரது ஃபாலோவர்களை ஈர்த்திருக்கிறது. பலரும் புதிய பெயர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

2018ம் ஆண்டு முதல்முதலாக மற்றவர் குழந்தைக்கு பெயர் வைக்க உதவி செய்யத் தொடங்கியிருக்கிறார் ஹம்ப்ரி.

குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?
”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!

இதில் ஒரு பக்கம் பணம் சம்பாதித்தாலும் இந்த வேலை மிகவும் சவாலானதாக இருப்பதாக ஹம்ப்ரி தெரிவிக்கிறார்.

ஏனெனில் பெர்ஃபக்சனிஸ்டாக இருக்கும் பெற்றோர்களை திருப்திப்படுத்தவே முடிவதில்லையாம்.

"வித்தியாசமான, புதிய பெயராக சூட்டினால் சில பெற்றோர்கள் பயந்தே விடுவார்கள். நான் முதலில் சொல்லும் பெயரை மறுக்கும் பெரும்பாலனவர்கள் இறுதியில் சாதாரண பெயரையே வைக்கின்றனர்" எனக் கூறியிருக்கிறார்.

பெயர் வைப்பது மிக முக்கியமான திறமைதான். அதனால் தானே பணம் கொட்டுகிறது!

குழந்தைக்கு பெயர் வைக்க 8 லட்சம் ரூபாயா? புதுமையான தொழிலில் அசத்தும் பெண் - யார் இவர்?
ராகுல் காந்தி : "மன்னிப்பு கேட்கப்போவதில்லை, என் பெயர் சாவர்கர் அல்ல" - என்ன பேசினார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com