15 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் USB கேபிள் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த 15 வயது சிறுவன் செய்த விநோத முயற்சி ஒன்றின் விளைவாக, அவரது பிறப்புறுப்பில் USB கேபிள் ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அவர் பிறப்புறுப்பின் அளவை தெரிந்துகொள்ள முயற்சித்தபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
உறுப்பின் உள்ளே கேபிள் முடிச்சுகளும், சிக்கல்களுமாய் வெளியில் எடுக்கமுடியாத நிலையில் சிக்கிக்கொண்டது. இதனால், சிறுவன் சிறுநீர் கழிக்கும்போது ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சிறுவனின் தாய் அவனை மருத்துவர்களிடம் அழைத்து சென்றுள்ளார்.
காரணத்தை கேட்டபோது அமைதியாக இருந்த சிறுவன் தன் தாய் அறையை விட்டு வெளியேறிய பின்பே, தான் தெரிந்தே தான் பிறப்புறுப்புக்குள் கேபிளை விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளான். வீட்டில் தனியாக இருந்த போது, தன் பிறப்புறுப்பின் அளவை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்ததால் இவ்வாறு செய்ததாகவும் அவன் கூறியுள்ளான்.
சோதனைகள் மேற்கொண்ட மருத்துவர்கள், முதலில் அறுவை சிகிச்சை செய்யாமல் கேபிளை வெளியேற்ற முயற்ச்சித்தனர். ஆனால், முடிச்சுகள் அதிகம் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust