ஆர்க்டிக், புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். ஆர்க்டிக் பகுதியானது ஆர்க்டிக் பெருங்கடல், கனடா, கிரீன்லாந்து, ரஷ்யா, அலாஸ்கா, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது.
ஆர்க்டிக் காலநிலை குளிர்காலம் மற்றும் குளிர்ந்த கோடை என வகைப்படுத்தப்படுகிறது. அதவாது கோடை காலத்திலும் குளிர்ந்த காலமே இருக்குமாம். மழைபொழிவு பெரும்பாலும் பனி வடிவத்தில் வருகிறது.
இந்த நிலையில் அடுத்த பத்து ஆண்டுகளில் ஆர்க்டிக் அதன் முதல் பனி இல்லாத கோடையைக் காணக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வு, ஆர்க்டிக் 2020 அல்லது 2030 களில் கோடையின் பிற்பகுதியில் பனி இல்லாமல் காணப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Nature Reviews Earth & Environment இதழில் வெளியிடப்பட்ட இந்த கண்டுபிடிப்புகள் தற்போதுள்ள காலநிலை தரவுகளின் பகுப்பாய்வில் வேரூன்றியுள்ளன. அதில் 'பனி இருக்காது' என்பதன் பொருள், முற்றிலும் இல்லாததைக் குறிக்கவில்லை, மாறாக ஆர்க்டிக் பெருங்கடலில் 1 மில்லியன் சதுர கிமீக்கும் குறைவான பனிக்கட்டி இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2035 மற்றும் 2067 க்கு இடையில் ஆர்க்டிக்கின் கோடை மாதம், ’பனி இல்லாத’ மாதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது மாதங்கள் வரை பனி இல்லாத நிலைமைகளை அனுபவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust