பயண காதலர்களுக்கு சொர்க்கமாக இருக்கும் பொதுபோக்குவரத்து - எந்தெந்த நகரங்களில் தெரியுமா?

பொது போக்குவரத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்ததும் ஒரு பதற்றம் வருவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உலகில் சில நகரங்கள் சிறந்த பொது போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றன.
The cities with the best public transportation in the world
The cities with the best public transportation in the worldTwitter
Published on

கோடி ரூபாய் கொடுக்காத சந்தோசத்தை ட்ராவல் நமக்கு கொடுக்கிறது என்று பயண காதலர்கள் சொல்லி வருகின்றனர்.

ஒரு இடத்திற்கு சென்று, அங்கு இருக்கும் இடங்களை பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அந்த அளவிற்கு குறிப்பிட்ட இடத்தை அடைய மேற்கொள்ளும் பயணம் மீதான காதலும் அதிகரித்து வருகிறது.

பயணத்தின் போது நாம் பார்க்கும் இயற்கை எழில், நீர் வீழ்ச்சி, மலை, காடு என அடுக்கிக்கொண்டே போகலாம்.

பயண காதலர்களும் பொதுப்போக்குவரத்தை தான் தேர்வு செய்கின்றனர். அங்குள்ள உள்ளூர் மக்களுடன் பேசிக்கொண்டே பயணம் செய்யவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அங்கு வசிக்கும் மக்கள் குறித்தும், அவர்களின் உணவு கலாச்சாரம் குறித்தும் தெரிந்துக்கொள்ள முடியும்.

அப்படி பொது போக்குவரத்தில் செல்ல வேண்டும் என்று நினைத்ததும் ஒரு பதற்றம் வருவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் உலகில் சில நகரங்கள் சிறந்த பொது போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றன.

டைம் அவுட் என்ற உலகளாவிய நகர வழிகாட்டிகளின் வெளியீட்டாளர் உலகெங்கிலும் உள்ள 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் 20,000 க்கும் மேற்பட்ட நகரவாசிகளை ஆய்வு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்த அப்பட்டியலில் டாப் 10 இடங்களை தான் இப்போது பார்க்க போகிறோம்.

பெர்லின்

வசதியான, பாதுகாப்பான பயணத்தை இங்கு இருக்கும் பொது போக்குவரத்து வழங்குகிறது. 97 சதவீத பெர்லினர்கள் தங்கள் நகரத்தின் போக்குவரத்து நெட்வொர்க்கை பாராட்டிடுகின்றனர்.

குறிப்பாக நிலத்தடி U-Bahn போக்குவரத்து, காலை முதல் இரவு வரை மக்களை ஏற்றிச்செல்கிறது. ஒன்பது வழித்தடங்களில் உள்ள 175 நிலையங்கள் இணைக்கும் இது ஒரு பிரம்மாண்ட நெட்ஒர்க் ஆக உள்ளது.

The cities with the best public transportation in the world
1 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? இந்திய ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுக்கும் நாடுகள் தெரியுமா?

ப்ராக்

ஐரோப்பாவின் மிக அழகான நகரங்களில் ஒன்றான ப்ராக் சிறந்த பொது போக்குவரத்து அமைப்பைக் கொண்டுள்ளது.

உள்ளூர்வாசிகளில் 96 சதவீதம் பேர், பொதுப் போக்குவரத்து மூலம் தங்கள் நகரத்தை எளிதாகச் சுற்றி வர முடியும் என்று கூறியுள்ளனர்.

மேலும் இது வசதியானது மட்டுமல்ல, அழகாகவும் இருக்கிறது என்று தெரிவித்திருக்கின்றனர்.

டோக்யோ

டோக்கியோவின் பொதுப் போக்குவரத்து அற்புதமாகப் பராமரிக்கப்பட்டு, ஜப்பானியர் அல்லாதவர்கள் கூட எளிதாக பயன்படுத்தும்படி உள்ளது. அத்துடன் உள்ளூர்வாசிகளில் , 94 சதவீதம் பேர் இதை விரும்புகின்றனர்.

கோபன்ஹேகன்

டேனிஷ் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பொதுப் போக்குவரத்து என்பது இரயில்கள், பேருந்துகள் மற்றும் வாட்டர்பஸ்கள் ஆகியன அடங்கும்.

ஒரு டிக்கெட் மூலம் அனைத்திலும் நீங்கள் பயணம் செய்யலாம். 93 சதவீத உள்ளூர்வாசிகள் இதனை பயன்படுத்தி மகிழ்கின்றனர்.

ஸ்டாக்ஹோம்

ஸ்காண்டி வடிவமைப்பு கொண்ட ஸ்டாக்ஹோமின் மெட்ரோ ஸ்டைலாக உள்ளது. இது உலகின் மிக நீளமான கலைக்கூடம் என்றே அழைக்கப்படுகிறது. ஸ்டாக்ஹோமில் உள்ள பொதுப் போக்குவரத்தில் டிராம்கள், பேருந்துகள் மற்றும் படகுகள் ஆகியவை அடங்கும், மேலும் 93 சதவீத உள்ளூர் மக்களைக் கவர்ந்துள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பொது போக்குவரத்தை பொறுத்தவரை, MyTransport.SG செயலியானது சிங்கப்பூர் டூரிஸ்ட் பாஸ் பணம் செலுத்துவதைக் கவனித்துக்கொள்கிறது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள அனைத்து முக்கிய இடங்களும் ஒரு நிலையத்திலிருந்து சிறிது தூரத்திலேயே செல்லலாம்.

92 சதவீத உள்ளூர்வாசிகள் இதனை பயன்படுத்தி மகிழ்கின்றனர்.

The cities with the best public transportation in the world
சிங்கப்பூர் : இங்கு chewing gum தடை - ஏன் தெரியுமா?

ஹாங்காங்

ஹாங்காங் நெட்வொர்க் மிகவும் விரிவானது, குறைந்த பட்சம், 75 சதவீத மக்கள் ஒவ்வொரு மெட்ரோ நிலையத்திலிருந்தும் ஒரு கிலோமீட்டருக்குள் பயணிக்கின்றனர்.

அதனால் இந்த மெட்ரோ நிலையங்களை 15 நிமிடங்களுக்கும் குறைவான நடைபயணத்தில் அடைய முடிகிறது. 92 சதவீத ஹாங்காங்கர்கள் தங்கள் நகரத்தின் போக்குவரத்து முறையைப் பாராட்டியுள்ளனர்.

தைபே

தைவானின் தலைநகரான தைபே, உலகின் அதிக மக்கள் வாழக்கூடிய நகரங்களில் ஒன்றாகும்.

அதற்கு ஒரு முக்கிய காரணம், அதன் அற்புதமான பொது போக்குவரத்து அமைப்பும் தான். தைபே மெட்ரோ உலகின் பரபரப்பான லைட்-ரயில் அமைப்புகளில் ஒன்றாகும். தைபே ஆசியாவின் மிக எளிதாக பயணிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. 92 சதவீத உள்ளூர்வாசிகள் தங்கள் நகரத்தின் போக்குவரத்து முறையைப் பாராட்டியுள்ளனர்.

ஷாங்காய்

ஸ்டேஷன்களின் எண்ணிக்கையில் நியூயார்க்கிற்கு அடுத்தபடியாக, ஷாங்காயின் மெட்ரோ தான் உலகின் மிகப்பெரியது.

சிறப்பு என்னவென்றால், சீனாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரம் அதன் ரயில்களை எப்போதும் சரியான நேரத்தில் இயக்குகிறது.

91 பேர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி நகரத்தைக் கடப்பது எளிது என்று கூறியுள்ளனர்.

The cities with the best public transportation in the world
மும்பை டு பெங்களூரு: இந்தியாவின் 5 பணக்கார நகரங்கள் இவைதான்- சென்னைக்கு இடமிருக்கிறதா?

மும்பை

இந்த பட்டியலில் மும்பை 19 வது இடத்தைப் பிடித்தது. 81 சதவீத உள்ளூர்வாசிகள் பொதுப் போக்குவரத்து மூலம் மும்பையைக் கடப்பது எளிது என்று தெரிவித்துள்ளனர்.

அதிக வசதிகள் இல்லாவிட்டாலும் மக்கள் நகரத்தை கடக்க இதை தான் பயன்படுத்துகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com