Silicon Valley Bank: அமெரிக்காவின் முன்னணி வங்கி மூடு விழா கண்டது எப்படி? Explained

சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிக்கையால், அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டு இருந்த வங்கி, ஏன் தடாலடியாக திவாலானது? அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? வாருங்கள் சுருக்கமாகப் பார்ப்போம்.
Silicon Valley Bank மூடு விழா கண்டது எப்படி?
Silicon Valley Bank மூடு விழா கண்டது எப்படி? ட்விட்டர்

அமெரிக்காவின் ஆகச் சிறந்த வங்கிகளில் ஒன்றாகக் கருதப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நிதி நெறிமுறையாளர்களால் மூடப்பட்டதாகச் செய்திகள் வெளியாயின. Federal Deposit Insurance Corporation (FDIC) என்கிற அமைப்பு இனி சிலிக்கான் வேலி வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 3 ஆம் தேதி சுமார் 284 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்த சிலிக்கான் வேலி வங்கியின் பங்கு விலை, கடந்த மார்ச் 10 ஆம் தேதி 106 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், போர்ப்ஸ் பத்திரிக்கையால், அமெரிக்காவின் சிறந்த வங்கிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டு இருந்த வங்கி, ஏன் தடாலடியாக திவாலானது? அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் என்ன? வாருங்கள் சுருக்கமாகப் பார்ப்போம்.

வங்கி இயக்கம்:

அடிப்படையில் ஒரு வங்கி என்பது, டெபாசித்தாரர்களிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை வட்டியாகக் கொடுக்கும். மறுபக்கம், டெபாசிட் பணத்தை அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும்.

கடன் கொடுக்கும் தொகையில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும், டெபாசிட் செய்தவர்களுக்கு கொடுக்கும் வட்டிக்கும் இடையிலான வேறுபாடு தான், ஒரு வங்கியின் முக்கிய லாபம்.

அபரீவித டெபாசிட் வளர்ச்சி:

சிலிக்கான் வேலி பேங்கில் கடந்த சில ஆண்டுகளில் டெபாசிட் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்தது. இது தான் பிரச்னையின் தொடக்கம். வெஞ்சர் கேப்பிட்டல் முதலாளிகள் அதிக அளவில் பணத்தைத் திரட்டி, அதை சிலிக்கான் வேலி பேங்கில் டெபாசிட்டாக முதலீடு செய்தனர்.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரையிலான காலத்தில் மட்டும், சிலிக்கான் வேலி பேங்கின் டெபாசிட் சுமார் 3 மடங்கு அதிகரித்து 198 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. ஆனால், அதே காலகட்டத்தில் அமெரிக்க வங்கித் துறையின் டெபாசிட் வளர்ச்சி சராசரியாக 37 சதவீதமாக இருந்தது.

Silicon Valley Bank மூடு விழா கண்டது எப்படி?
silicon valley bank: திவாலான வங்கி, சரியும் பொருளாதாரம் - என்ன சொல்கிறார் அதிபர் ஜோ பைடன்?

என்ன செய்யலாம்?

கிட்டத்தட்ட 36 மாதங்களுக்குள், வங்கியின் டெபாசிட் 3 மடங்கு அதிகரித்ததை எப்படி சமாளிப்பது? வெறுமனே கையில் பணத்தை வைத்திருந்தால் டெபாசிட்தாரர்களுக்கு வட்டிப் பணத்தை எப்படிக் கொடுக்க முடியும்? எனவே கையில் உள்ள டெபாசிட் பணத்தை, கடனாகக் கொடுக்க பெருமுயற்சி எடுத்தது.

ஆனால் பலன் கிடைக்கவில்லை. எனவே, டெபாசிட் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய தீர்மானித்தது சிலிக்கான் வேலி பேங்க்.

வங்கிகளிடம் இருக்கும் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சட்டத்துக்கு விரோதமான காரியம் அல்ல என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எந்தவொரு வங்கியும், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்யத் தீர்மானித்துவிட்டால், முதலீடு செய்யும் பணத்தை நீண்ட காலத்துக்கு, முதலீடுகள் முதிர்ச்சி அடையும் வரை வைத்திருக்கப் போகிறதா ("held-to-maturity" - HTM) அல்லது எப்போது வேண்டுமானாலும் விற்று பயணத்தைத் திரட்டும் வகையில் வைத்திருக்கப் போகிறதா ("available for sale" - AFS) என்பதை முடிவு செய்ய வேண்டும்.

சிலிக்கான் வேலி வங்கி ஒரு கணிசமான பகுதியை ஏ ஏப் எஸ் முதலீடுகளாகவும் (எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக்குவது), மற்றொரு கணிசமான தொகையை ஹெச் டி எம் (முதிர்ச்சி அடைந்த பின் பணத்தை வெளியே எடுக்கும் திட்டம்) முறையிலும் முதலீடு செய்தது.

2019 இறுதியில் வெறும் 13.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏ ஏப் எஸ் சொத்துக்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 27.3 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

Silicon Valley Bank மூடு விழா கண்டது எப்படி?
கொரோனா : இந்தியப் பொருளாதாரம் பாதிப்புகளிலிருந்து மீள 15 ஆண்டுகள் ஆகலாம் - RBI அறிக்கை

அதே போல, ஹெச் டி எம் சொத்துக்களும் 13.8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 98.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இந்த ஹெச் டி எம் முதலீடுகளில் பெரும்பாலான பணம் கருவூல சொத்துக்கள், அடமானப் பாத்திரங்களில் முதலீடு செய்திருந்தது சிலிக்கான் வேலி பேங்க்.

பொதுவாக இது போன்ற முதலீடுகள், வட்டி விகிதம் அதிகரித்தால், அதன் மதிப்பு சரியும். அதுதான் சிலிக்கான் வேலி வங்கியிலும் நடந்தது.

அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் தொடந்து உயர்த்தப்பட்டன. அவர்கள் முதலீடு செய்த பெரும்பாலான ஹெச் டி எம் சொத்துக்களின் மதிப்பு சரிந்தது.

Elon Musk : ஒரு நகரத்தை உருவாக்கும் எலான் மஸ்க் - யாருக்காக இது?

பணத்தைக் கொடு:

சிலிக்கான் வேலி வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருந்தவர்கள், மெல்ல தங்கள் டெபாசிட் பணத்தை வெளியே எடுக்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் டெபாசிட் பணத்தைத் திரும்பக் கேட்பவர்களின் எண்ணிக்கை தடாலடியாக அதிகரித்தது.

தொடக்கத்தில் நிலைமையைச் சமாளித்த வந்த சிலிக்கான் வேலி வங்கியால், ஒருகட்டத்தில் டெபாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்க, தன் முதலீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது.

அவர்களால் ஏ ஏப் எஸ் முதலீடுகளை விற்க முடியுமே தவிர, ஹெச் டி எம் முதலீடுகளை விற்க முடியாது. அப்படி விற்றால், அது கிட்டத்தட்ட சிலிக்கான் வேலி வங்கியின் பெரும்பாலான முதல் தொகையையும் காலி செய்துவிடும் அளவுக்கு அந்த முதலீடுகளின் மதிப்பு சரிந்திருந்தது.

எனவே, ஏ ஏப் எஸ் முதலீடுகளை சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தகோடு விற்று வெளியேறி பணத்தை திரட்டிக் கொண்டது. ஆனால், இந்த நஷ்டத்தைச் சரிகட்ட புதிய முதலீடுகளைத் திரட்ட முயன்று தோற்றுப் போனது சிலிக்கான் வேலி வங்கி.

Silicon Valley Bank மூடு விழா கண்டது எப்படி?
கெளதம் அதானி : சரிவோ சரிவு! அதீத விலை சரிவில் தொடரும் அதானி பங்குகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com