கெளதம் அதானி : சரிவோ சரிவு! அதீத விலை சரிவில் தொடரும் அதானி பங்குகள்

அதானி நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட்ஸ் 3.2 எட்டு சதவீதமும், ஏசிசி 0.82 சதவீதமும் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. என் டி டிவி மீடியா நிறுவனத்தின் பங்கு விலை 4.9 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.
அதானி
அதானிTwitter
Published on

அதானி குழுமத்தைச் சேர்ந்த பங்குகள் இன்று காலை முதல் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை 9.5 சதவீதம் சரிந்து இருக்கிறது.

இதற்கு, அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பல்வேறு முதலீட்டாளர்களும் அப்பங்கை விற்றுவிட்டு வந்த வரையிலான லாபத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையில், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்று காலை 1,597 ரூபாய்க்கு வர்த்தகமாகத் தொடங்கி 1433 ரூபாய் வரை சரிந்தது. இது கடந்த வெள்ளிக்கிழமை மாலை வர்த்தக நேர முடிவில் இருந்த விலையை விட 9.5 சதவீதம் சரிவு. அதன் பிறகு சற்றே வெளியேற்றும் கண்டு சுமார் 1480 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

அதானி
அதானிTwitter

அதானி டோட்டல் கேஸ், அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி, அதானி வில்மர்… போன்ற மற்ற அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் 5 சதவீதம் சரிந்து இருக்கிறது. அதானி ட்ரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை 10% சரிந்து இருக்கிறது.

அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன் நிறுவன பங்கு விலை மட்டுமே சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் சுமார் 0.5% விலை உயர்ந்து 501 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

அதானி நிறுவனத்தோடு தொடர்புடைய மற்ற நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட்ஸ் 3.2 எட்டு சதவீதமும், ஏசிசி 0.82 சதவீதமும் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. என் டி டிவி மீடியா நிறுவனத்தின் பங்கு விலை 4.9 சதவீதம் சரிந்து வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமப் பங்குகளின் விலை சரிந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். அந்நிறுவன ஆராய்ச்சி அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

அதானி குழுமம் மோசடி செய்கிறதா? : ஹிண்டன்பெர்க் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவைதான் Explained

கௌதம் அதானி
கௌதம் அதானிtwitter

ஹிண்டன்பெர்க் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரங்களற்றவை, தவறானவை என அதானி தரப்பிலிருந்து சுமார் 400 பக்கங்களுக்கு மேல் எழுத்துப்பூர்வமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஹிண்டன்பெர்க் நிறுவனமோ தாங்கள் எழுப்பிய 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் பங்குகளின் விலை எதிர்காலத்தில் கடும் வீழ்ச்சி காணும் என ஷார்ட் பொசிஷன் எடுத்திருக்கிறது ஹிண்டன்பெர்க்.

அதானி குழும பங்குகளின் விலை அதீத தடுமாற்றத்தோடு வர்த்தகமாகி வருவதை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை இந்திய பங்குச் சந்தைகளை நெறிமுறைப்படுத்தும் செபி அமைப்பு, இந்திய பங்குச் சந்தையின் மீதான உண்மைத்தன்மையை பாதுகாக்க செபி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என திருவாய் மலர்ந்து இருக்கிறது.

அதானி
ஹிண்டன்பெர்க்: அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றம் சாட்டிய நேதன் ஆண்டர்சன் யார்?
RBI
RBITwitter

மேலும் எந்த ஒரு தனிப்பட்ட பங்குகளும் அதீத விலை மாற்றத்தோடு வர்த்தகமாகாமல் இருக்க போதிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகள் இருப்பதாகவும் கூறியுள்ளது.

இந்திய வங்கித் துறை நிலையாகவும், எந்த ஒரு சூழலையும் கடந்து வரக்கூடிய வலிமையோடும் இருப்பதாக இந்தியாவின் வங்கி அமைப்பை நிர்வகிக்கும் ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை கூறியது. மேலும் வங்கிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது ஆர்பிஐ.

அதானி குழுமப் பங்குகளின் விலை சரிவு ஒட்டுமொத்த சென்செக்ஸ் குறியீடு மற்றும் நிஃப்டி குறியீட்டையும் கீழே இழுத்துக் கொண்டு இருக்கிறது. சென்செக்ஸ் 439 புள்ளிகளும், நிஃப்டி 140 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன

அதானி
அதானி குழுமம் : 100 பில்லியன் டாலருக்கு மேல் சந்தை மதிப்பை இழந்த அதானி - அடுத்து என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com