"காலண்டர் கலவரங்கள்" : 11 நாட்களை இழந்த பிரிட்டன் - போராட்டம் வெடிக்க காரணம் என்ன?

இங்கிலாந்தின் எதிர்கட்சியினர் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். ‘Give Us Our Eleven Days Back!’ என்கிற பெயரில் எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி மக்கள் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்து ஒட்டுமொத்த இங்கிலாந்தையே கொந்தளிக்கச் செய்ததாக சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.
 Calendar Riots of 1752
Calendar Riots of 1752TWitter
Published on

வரலாற்றில் நடந்த பல சம்பவங்கள் குறித்து போலிச் செய்திகளும், புரட்டுகளும் நிறைய உலாவிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதோடு சில அதிர்ச்சிகரமான பயத்தைக் கிளப்பக் கூடிய விஷயங்களும், தவறான புரிதலைக் கொண்ட விஷயங்களும் இருக்கின்றன.

அப்படி,1752ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்காட்டியை மாற்றிய போது பல சம்பவங்களும் கட்டுக்கதைகளும் பொதுவெளியில் பரவின. இந்த பிரச்னைக்காக இங்கிலாந்து மக்கள் வீதியில் இறங்கி போராடியதாகவும் சில குறிப்புகள் இருக்கின்றன.

பிரச்னையின் பின்னணி என்ன?

1751ஆம் ஆண்டு வரை, பிரிட்டன் மற்றும் அதனுடைய பல்வேறு காலணி ஆதிக்க நாடுகளும் ஜூலியன் காலண்டரைப் பின்பற்றி வந்தன. ஆனால், மற்ற பல்வேறு நாடுகளும் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பே (1582ஆம் ஆண்டு) போப் 13ஆம் கிரிகோரி அறிமுகப்படுத்திய கிரிகோரியன் காலண்டர் முறையைப் பின்பற்றத் தொடங்கினர்.

கிமு 46ஆம் ஆண்டு வாக்கில் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்ட நாட்காட்டி முறைதான் ஜூலியன் காலண்டர். இதில் மார்ச் 25ஆம் தேதி (லேடி டே) புத்தாண்டு பிறப்பாகவும், டிசம்பர் 31ஆம் தேதி ஆண்டு நிறைவடைவதாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதில் சில அடிப்படை வானியல் கணிதத் தவறால், தொடர்ந்து பல பண்டிகைகளின் தேதி மாறிக் கொண்டே இருந்தன.

உதாரணத்துக்கு, மார்ச் 21ஆம் தேதி கொண்டாட வேண்டிய ஈஸ்டர் பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, இங்கிலாந்து 1752ஆம் ஆண்டு முதல் கிரிகோரியன் காலண்டர் முறையைக் கடைபிடிக்க புதிய சட்டத்தை நிறைவேற்றியது.

போப்பை வழி மொழிவதா?

15ஆம் நூற்றாண்டு வரை கத்தோலிக்க கொள்கைகளை செவ்வனே பின்பற்றி வந்த இங்கிலாந்து, சில பல அரசியல் காரணங்களால் 16ஆம் நூற்றாண்டின் கடைசி காலத்தில் இருந்து கத்தோலிக்க கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை அல்லது பெரிதாக மதிக்கவில்லை.

இங்கிலாந்தின் இறையாண்மையிலேயே கத்தோலிக்கத்துக்கு எதிரான தன்மை ஊறிப் போனது.

இப்படி ஒரு சுழலில், 18ஆம் நூற்றாண்டின் மத்தியில், ஒரு போப் (போப் 13ஆம் கிரிகோரி) அறிமுகப்படுத்திய நாட்காட்டி முறையை இங்கிலாந்து ஏற்றுக் கொள்வது, இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

11 நாட்களைத் திரும்பக் கொடு:

இந்த புதிய சட்டப்படி, 1752ஆம் ஆண்டு 11 நாட்கள் நீக்கப்பட்டன. 1752ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதிக்குப் பிறகு, செப்டம்பர் 14ஆம் தேதி என கணக்கிடப்பட்டது.

இதுவும் மக்களை கொதித்தெழச் செய்தது. இங்கிலாந்தின் எதிர்கட்சியினர் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தனர். ‘Give Us Our Eleven Days Back!’ என்கிற பெயரில் எதிர்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி மக்கள் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்து ஒட்டுமொத்த இங்கிலாந்தையே கொந்தளிக்கச் செய்ததாக சில வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

அப்போது படிக்காத இங்கிலாந்து பாமர மக்கள், உண்மையிலேயே இங்கிலாந்து அரசு, தங்களின் வாழ்விலிருந்து 11 நாட்களை திருடுவதாகக் கருதினர் என்கிறது ஹிஸ்டரி.கோ.யூகே வலைதளம்.

இப்படி இங்கிலாந்து கிரிகோரியன் காலண்டர் முறைக்கு மாறிய போது ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் பிரச்னைகள் The Calendar Riots of 1752 என்கிற பெயரில் பல பதிவுகள் இருக்கின்றன.

பொய் செய்திகள் மற்றும் தவறாக திசை திருப்பப்படக்கூடிய செய்திகள் 21ஆம் நூற்றாண்டில் மட்டுமே காணக் கிடைக்கும் விஷயம் அல்ல, அது 18ஆம் நூற்றாண்டில் இருந்தே நடைமுறையில் இருந்த ஒரு விஷயம் தான் என்பதை உணர்த்துகிறது இந்த காலண்டர் கலவரங்கள்.

 Calendar Riots of 1752
செளதி அரசர் முதல் இங்கிலாந்து ராணி வரை: உலக அரச குடும்பங்களின் சொத்துமதிப்பு இவ்வளவா?

ஆளுங்கட்சியின் பிரசாரம்:

அப்போதைய இங்கிலாந்தின் எதிர்கட்சியினர் 'எங்களின்11 நாட்களைத் திரும்பப் கொடு' என்கிற பிரசாரத்தை முன்னெடுத்த போது, அதை சமாளிக்க ‘The New Style The True Style’ என்கிற பிரசாரத்தை முன்னெடுத்தது ஆளுங்கட்சி.

ஆனால் இந்த மாற்றத்தால், வெகுஜன மக்களின் அன்றாட வாழ்வு மேம்படுவதற்கு பதில், பாதிக்கப்படும் என்று சாமானியர்கள் கருதினர், இல்லை எதிர்கட்சிகள் அப்படி ஒரு புரிதலை ஏற்படுத்தினர்.

கிரிகோரியன் காலண்டரை அறிமுகப்படுத்தியதால், பல புனிதர்களின் நாட்கள், பிறந்தநாட்கள் எல்லாம் மாறின.

 Calendar Riots of 1752
பிரிட்டன் : சரியும் இங்கிலாந்து பொருளாதாரம், வீழும் வல்லரசு - என்ன நடக்கிறது அங்கே?

அப்போது படிக்காத இங்கிலாந்து பாமர மக்கள், உண்மையிலேயே இங்கிலாந்து அரசு, தங்களின் வாழ்விலிருந்து 11 நாட்களை திருடுவதாகக் கருதினர் என்கிறது ஹிஸ்டரி.கோ.யூகே வலைதளம்.

இப்படி இங்கிலாந்து கிரிகோரியன் காலண்டர் முறைக்கு மாறிய போது ஏற்பட்ட கலவரங்கள் மற்றும் பிரச்னைகள் The Calendar Riots of 1752 என்கிற பெயரில் பல பதிவுகள் இருக்கின்றன.

பொய் செய்திகள் மற்றும் தவறாக திசை திருப்பப்படக்கூடிய செய்திகள் 21ஆம் நூற்றாண்டில் மட்டுமே காணக் கிடைக்கும் விஷயம் அல்ல, அது 18ஆம் நூற்றாண்டில் இருந்தே நடைமுறையில் இருந்த ஒரு விஷயம் தான் என்பதை உணர்த்துகிறது இந்த காலண்டர் கலவரங்கள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com