துருக்கியில் வசிக்கும் உலாஸ் குடும்பத்தில் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இரு கால்களில் நடக்காமல் 4 கால்களால் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டபோது உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் குழப்பமடைந்தனர்.
2006 ஆம் ஆண்டில் பிபிசியின் "தி ஃபேமிலி தட் வாக்ஸ் ஆல் ஃபோர்ஸ்" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பிறகு, இந்த குடும்பம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் பரிணாம உளவியலாளரான பேராசிரியர் நிக்கோலஸ் ஹம்ப்ரே, அந்த குடும்பத்தை மேலும் ஆராயவும், சில குழந்தைகளின் வளர்ச்சி நான்கு வயதாகவே இருப்பதற்கான காரணங்களை கண்டறியவும் முடிவு செய்தார்.
அதன்படி உலாஸ் குடும்பத்தில் பிறந்த 18 குழந்தைகளில் 12 பேர் ஆரோக்கியமாக பிறந்தனர், ஆனால் ஆறு பேருக்கு 'தனித்துவமான ஊனம்' இருப்பதாக பேராசிரியர் ஹம்ப்ரி கண்டுபிடித்தார்.
அதாவது பாதிக்கப்பட்ட அந்த ஆறு குழந்தைகளின் சிறுமூளை அட்டாக்ஸியாவின் வடிவமாக உள்ளது. அவர்கள் இரண்டு கால்களை சமநிலைப்படுத்தி சாதரண மனிதர்கள் போல நடக்க சிக்கல்களைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் பிறக்கும் குழந்தைகள் ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் தவழும் நிலையிலேயே இருப்பதற்கு காரணமாக, அவர்களில் மரபணு சிம்பன்சிகளை ஒத்ததாக இருக்கலாம் எனக் கருதினார்.
மேலும் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எலும்புக்கூடுகள் மனிதர்களுக்கு வேறுபட்டது மற்றும் குரங்குகளைப் போன்றது என்பதை உணர்ந்தனர்.
ஆகவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பிசியோதெரபிஸ்ட் நியமிக்கப்பட்டனர். அங்கு உள்ள தோட்டத்தில் அவர்களுக்கு இரண்டு கால்களில் நடக்க பயிற்சி அளிக்க உதவினர்.சில மாதங்களுக்கு பிறகு தற்போது உலாஸ் குடும்பத்தின் இரண்டு குழந்தைகள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust