ரஷ்யா - உக்ரேன் இடையே போர்ச் சூழலுக்கான காரணம் என்ன? அமெரிக்கா தலையிடுவது ஏன்?

நேட்டோ படைகளும், பிரிட்டன், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்கு ஆதரவாக நிற்கின்றன. ஏன் இந்த பதற்றச் சூழல்? என்ன நடக்கிறது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்த கட்டுரை.
புதின்

புதின்

Twitter

ஐரோப்பிய நாடான உக்ரேனின் எல்லையில் சுமார் 1,00,000 பேர் கொண்ட தனது ராணுவப் படையை நிறுத்தி வைத்திருக்கிறது ரஷ்யா. இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரேன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா 8,500 பேர் கொண்ட அதிரடிப் படையைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக அறிவித்திருக்கிறது. நேட்டோ படைகளும், பிரிட்டன், ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனுக்கு ​ஆதரவாக நிற்கின்றன. ஏன் இந்த பதற்றச் சூழல்? என்ன நடக்கிறது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்த கட்டுரை.

1. ரஷ்யா - உக்ரேன் உறவு!

சோவியத் யூனியன் உருவாவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக ரஷ்ய பேரரசின் ஆட்சிக்குள் இருந்தது உக்ரேன். சோவியத் யூனியன் உருவானபோது அதில் ஐக்கியமான உக்ரேன், 1991-ம் ஆண்டு சோவியத் வீழ்ச்சியின் போது, சுதந்திரம் பெற்றது. பல நூற்றாண்டுகளாக ரஷ்ய ஆதிக்கத்திலிருந்த உக்ரேன் மக்களிடம், இயல்பாகவே ரஷ்யாவுக்கு எதிரான மனநிலை உருவாகியிருந்தது. அதனால், மேற்கத்திய நாடுகளுடன் உறவை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியது. இதை ரஷ்யா விரும்பவில்லை.

தன்னுடன் எல்லையைப் பகிரும் உக்ரேன், மேற்கத்திய நாடுகள் மற்றும் நேட்டோ படைகளுக்கு (அமெரிக்கா உள்பட 30 நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டுப்படை) வழி ஏற்படுத்தித் தருவதை ரஷ்யா விரும்பவில்லை. உக்ரேனை தனது கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என ரஷ்யா உறுதியாக இருந்தது.

உக்ரைன் கொடி

உக்ரைன் கொடி

Twitter

2. 2014 உக்ரேன் புரட்சி

2014-ம் ஆண்டு உக்ரேனின் அதிபராக இருந்தவர் விக்டர் யானுகோவிச். இவர் ரஷ்ய ஆதரவு நிலைபாடு கொண்டவர். ஐரோப்பிய யூனியனுடன் இணையும் வாய்ப்பை நிராகரித்தார். இதனால் உக்ரேனில் உள்நாட்டு எதிர்ப்பு எழுந்தது. கிளர்ச்சி வெடித்தது. அதிபர் யானுகோவிச் நாட்டை விட்டு தப்பித்து ரஷ்யாவில் அடைக்களமானார். உக்ரேனில் ரஷ்ய எதிர்ப்பு அரசின் ஆட்சி அமைந்தது. இதனை உக்ரேன் மக்கள், “ கண்ணியத்துக்கான புரட்சி" என்றே அழைக்கின்றனர்.

இந்த புரட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரேனிடமிருந்த ‘கிரிமியா’ தீபகற்பத்தை தனது படைகள் மற்றும் கிழக்கு உக்ரேனில் இருந்த கிளர்ச்சிப் படைகளின் உதவியோடு கைப்பற்றியது ரஷ்யா. கிரிமியா உக்ரேனோடு இருந்தாலும் அது ஒரு சுய ஆட்சி பெற்ற பகுதி. ரஷ்ய படைகள் கிரிமியாவை கைப்பற்றியதும், பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், மக்கள் பெரும்பாலும் ரஷ்யாவோடு இணையவே ஆதரவு தெரிவித்ததாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், அந்த வாக்கெடுப்பு செல்லாது என ரத்து செய்தது ஐநா சபை.

தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கிரிமியா இருந்தாலும், அந்த கைப்பற்றலை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. கிரிமியாவின் கைப்பற்றலுக்கு கிழக்கு உக்ரேனில் கிளர்ச்சி வெடிக்கிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கி ரஷ்யா உதவுதாக உக்ரேன் குற்றம்சாட்டியது.

லுஹான்ஸ்க், டோனெஸ்க் ஆகிய இரண்டு பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்தது. ரஷ்யா இதை பயன்படுத்தி உக்ரேன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை வழிநடத்தியது. விளைவாக உக்ரேனில் உள்நாட்டுப்போர் மூண்டது. ’டோன்பாஸ்’ போர் என்று அது அழைக்கப்பட்டது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் மோதல்களால் இதுவரை சுமார் 14,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்றுவரை கிழக்கு உக்ரேனின் லுஹான்ஸ்க், டோனெஸ்க் பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில், ரஷ்யாவின் ஆதரவோடுதான் இருக்கிறது.

ஜோபைடனுடன் புதின்

ஜோபைடனுடன் புதின்

Twitter

3. இப்போது என்ன பிரச்சனை

ரஷ்யாவுக்கு உக்ரேன் எவ்வளவு முக்கியம் என்பது கிரிமியா ஆக்கிரமிப்பு மற்றும் கிளர்ச்சிப் படைகளுக்கு ரஷ்யா தரும் ஆதரவின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். உலகின் மிகப்பெரும் நிலப்பரப்பு கொண்ட நாடு ரஷ்யா.

14 நாடுகள் ரஷ்யாவோடு எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் 5 நாடுகள் நேட்டோவில் இணைந்திருக்கின்றன. உக்ரேனும் நேட்டோ படைகளில் இணைய விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதுதான் ரஷ்யாவுக்கு பிரச்சனை.

புதின்

வட கொரியா வரலாறு : ஏன் இந்த சிறிய நாட்டை கண்டு அஞ்சுகிறது அமெரிக்கா? - பகுதி 2

நேட்டோவில் உக்ரேன் இணைந்தால், நேட்டோவின் ராணுவத்தளம் உக்ரேனில் அமையும். இதைப் பாதுகாப்பு பிரச்சனையாக பார்க்கிறது ரஷ்யா. 2021 மார்ச் மாதம் முதல், உக்ரேன் எல்லையில் ரஷ்யா தன்னுடைய படைகளை குவிக்கத் தொடங்கியது. இப்போது பிரச்னை மேலும் தீவிரமடைந்திருக்கிறது. சுமார் 1 லட்சம் பேர் கொண்ட படையை உக்ரேன் எல்லையில் நிலை நிறுத்தியிருக்கிறது ரஷ்யா. கருங்கடல் உள்பட பல கடல் பகுதிகளில் போர் கப்பல் ஒத்திகைகள் நடத்தி வருகிறது. கிரிமியா, கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் கிழக்கு உக்ரேன், உக்ரேன் மற்றும் ரஷ்யாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பெலாரஸ் ஆகிய 3 இடங்களில் ரஷ்யா தனது படைகளை நிறுத்தியிருக்கிறது.

NATO

NATO

Twitter

4. அமெரிக்கா பதிலடி!

ரஷ்யாவின் நடவடிக்கைகள் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரேனுக்குள் ரஷ்யா நுழைய முற்பட்டால், உக்ரேன் ராணுவம், நேட்டோ படைகளுக்கு ஆதரவாகக் களமிறங்க, 8500 பேர் கொண்ட படையைத் தயாராக வைத்திருக்கிறது அமெரிக்கா. அதிபர் ஜோ பைடன், ரஷ்யாவை நேரடியாக எச்சரித்திருக்கிறார். ரஷ்யா போரில் ஈடுபட்டால், மோசமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்திருக்கிறார். ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி தர அமெரிக்கா, நேட்டோ படைகள், உக்ரேன் படைகள் தயாராகி வருவதால் போர்ச் சூழல் உருவாகியிருக்கிறது.

புதின்

`நிலாவுக்கு அமெரிக்கா உண்மையில் சென்றதா? - நம்ப மறுக்கும் Americans

5. அடுத்து என்ன?

ஒருவேளை ரஷ்யா, உக்ரேனுக்குள் நுழைந்தால் உடனடி எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும். உக்ரேன் படைகள், அமெரிக்கப்படைகள், நேட்டோ படைகள் என மூன்றையும் ரஷ்யா எதிர்கொள்ள நேரிடும்.

ரஷ்யாவும் ராணுவ சக்தியில் சளைத்தது அல்ல. மேலும். பிரச்சனை நடக்கும் நிலப்பரப்பு ரஷ்ய ராணுவத்துக்கு பரிட்சியமானது. இது அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு இல்லாத ஒரு பிளஸ் பாயிண்ட்.

ரஷ்ய ராணுவம்

ரஷ்ய ராணுவம்

Twitter

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யா எதிர்கொள்ள வேண்டியிருக்கும். SWIFT எனப்படும் உலக அளவில் நாடுகளுக்கிடையிலான வங்கிப் பண பரிவர்தனை அமைப்பிலிருந்து ரஷ்யாவை நீக்கலாம். அப்படி நடந்தால் ரஷ்யா கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

புதின்

கியூபா Vs அமெரிக்கா : உலகின் பெரியண்ணனை வீழ்த்திய தீவு தேசத்தின் வரலாறு

மறுபுறம், ரஷ்யா உக்ரேனுக்குள் நுழைய முற்படாது என்றும் சர்வதேச பாதுகாப்புத்துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உக்ரேனை அச்சுறுத்துவதன் மூலமாக, சர்வதேச அளவில் நிபந்தனைகளை வைத்து, சில விஷயங்களை ரஷ்யா சாதிக்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

புதின்

கியூபா Vs அமெரிக்கா : ஃபிடல் காஸ்ட்ரோவை ஆதரித்த அமெரிக்கர்கள் | Cuba History 2

சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா - உக்ரேன் பிரச்சனை, போராக மாறினால் பெரும் உயிர்ச் சேதத்தையும், உலக அளவில் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண்பது ரஷ்யா, உக்ரேன் மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் நல்லது என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com