தைவானில் காலணி போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் கண்ணாடி தேவாலயம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. தைவானின் சியாயி கவுண்டியில் அமைந்துள்ள இந்த கண்ணாடி கட்டிடம் ஒரு சர்ச்.
சர்ச் என்றவுடன் இது ஒரு பிரார்த்தனை கூடம் என்று எண்ண வேண்டாம், இந்த தேவாலயம் வழக்கமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படாது. மாறாக திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஆலயத்திற்குள் காதலர்களுக்கான நாற்காலிகள், பிஸ்கட்கள் மற்றும் கேக்குகள் போன்ற என விஷயங்கள் இருக்குமாம்.
ஹை-ஹீல் ஷூ போன்ற வடிவில் இருக்கும் இந்த தேவாயலம் 320க்கும் மேற்பட்ட நிறமுள்ள கண்ணாடி பேனல்களால் ஆனது. இதனை உருவாக்க US$686,000 செலவாகியிருக்கிறது அதாவது இந்திய மதிப்பில் 5 கோடிக்கும் மேல்.
தைவானின் ஒரு முக்கிய சுற்றுலாப் பகுதியாக காலணி வடிவ கண்ணாடி தேவாலயம் மாறியிருக்கிறது. இந்த இடத்தையே ஒரு லவ் ஸ்பாட்டாக மாற்ற விரும்புவதாக இந்த கட்டிடத்தை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர்.
இந்த காலணி வடிவ கட்டிடத்திற்கு பின்னால் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கிறது.
1960 களில் வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட 24 வயது பெண் பிளாக்ஃபுட் நோயால் பாதிக்கப்பட்டார். அவருடைய இரண்டு கால்களையும் துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணின் திருமணமும் நின்றது. அதன் பின்னர் திருமணமாகாமல், தன் வாழ்நாள் முழுவதையும் தேவாலயத்தில் அந்த பெண் கழித்ததாக கூறப்படுகிறது.
இந்த பெண்ணின் கதை கண்ணாடி தேவாலயத்தை கட்டுவதற்கு ஒரு உந்துதலாக இருந்தது. இது நோயால் பாதிக்கப்பட்ட காலத்தை நினைவூட்டுவது மட்டுமல்லாமல், பெண்கள் தங்கள் மகிழ்ச்சியான எதிர்காலத்தை நோக்கி நடக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக காலணி வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
தைவானில் இருக்கும் இந்த கண்ணாடி தேவாலயத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust