தைவான் சுற்றுலா: ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?
தைவான் சுற்றுலா: ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?Twitter

தைவான் : ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?

தைவான் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு வரும் 5 லட்சம் பேருக்கு 165 டாலர்கள் (சுமார் 13,000 ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
Published on

கொரோனா பேரிடரால் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

உலகம் முழுவதும் சுற்றுலாவை தங்களது பிரதானமான வருவாயாக கொண்ட நாடுகள் பெரும் இன்னல்களைச் சந்தித்தன.

இப்போது ஒவ்வொரு நாடும் அதிகமான பயணிகளை ஈர்க்க புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் தைவான் நாடு ஒரு பலே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2023ம் ஆண்டில் 60 லட்சம் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க வேண்டும் என்பது தைவானின் லட்சியம்.

இதனை 2025ம் ஆண்டு ஒரு கோடியாக பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Taiwan
Taiwan
தைவான் சுற்றுலா: ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?
துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்

முதல்கட்டமாக இந்த ஆண்டு தைவான் நாட்டைச் சுற்றிப்பார்க்க வரும் நபர்களுக்கு ஒரு பரிசுத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

தைவான் நாட்டுக்கு சுற்றுலாவுக்கு வரும் 5 லட்சம் பேருக்கு 165 டாலர்கள் (சுமார் 13,000 ரூபாய்) வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

குழுவாக வரும் சுற்றுலாப்பயணிகளாக இருந்தால் குழுவுக்கு 658 டாலர்கள் வழங்கப்படும் என்றும் தைவான் கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தான் தைவான் கொரோனோ கட்டுப்பாடுகளைத் தாளர்த்தி சுற்றுலாவுக்கு தடையை நீக்கியது.

தைவான் சுற்றுலா: ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?
சீனா - தைவான் பிரச்னை: ஏன்...? எதனால்? - விரிவான விளக்கம்

அதுமுதல் 9 லட்சம் பயணிகள் தைவானை சுற்றிப்பார்த்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வியட்நாம், இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

மேலும் தென்கொரியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பியா மற்றும் பிற அமெரிக்க நாடுகளில் இருந்தும் பயணிகளை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.

இதற்கு இடையில் ஹாங்காங், விமானத்தில் வரும் 500000 சுற்றுலாப்பயணிகளுக்கு டிக்கெட் இலவசம் என அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் மார்ச் மாதத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வருகிறது.

தைவான் சுற்றுலா: ஊர் சுற்றுவதற்கு 13,000 ரூபாய் கொடுக்கும் நாடு- என்ன காரணம்?
ஹனிமூன் போறீங்களா? இந்த ஐந்து கடற்கரையை டிரை பண்ணுங்களேன்! | Travel

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com