போவெக்லியா தீவு : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கும் மர்ம தேசத்தின் பின்னணி என்ன?

அங்கு என்னதான் உள்ளது என்பதை அறிய 1930 ஆண்டு அங்கு ஒரு மன நல மருத்துவமனையினை அரசாங்கம் அமைத்தது. ஆனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மர்மமான முறையில் இறந்தனர்.
The haunting of Italy's Poveglia Island
The haunting of Italy's Poveglia IslandTwitter

இந்த உலகம் விசித்திரமானது, அதோடு பல தெரியாத மர்ம முடிச்சுகளை தன் உள்ளே வைத்துள்ளது. தற்போது அறிவியல் வளர்ந்த நிலையிலும் சில இடங்கள் குறித்த மர்ம ரகசியங்கள் இன்றும் தீர்க்க முடியாதவையாக உள்ளன.

அந்த வரிசையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் தீவு இத்தாலியில் உள்ள போவெக்லியா தீவு. இதனை பேய்கள் அலையும் தீவாக கருதுகின்றனர். இங்கு பொதுமக்கள் செல்ல அரசு தடைவிதித்துள்ளது.

இத்தாலி அரசே பொதுமக்கள் செல்ல தடை விதிக்க காரணம் என்? வாருங்கள் தெரிந்துகொள்வோம் அலறும் மர்ம தேசத்தை!

இத்தாலியில் வெனிஸ் மற்றும் லிடோ இடையே அமைந்திருக்கிறது இந்த போவெக்லியா தீவு. வெனிஸ் நகரத்திலிருந்து வெறும் 16 கி.மீ தொலைவில்தான் இந்த தீவு அமைந்திருக்கிறது. இந்த தீவுக்கு சென்றவர்கள் இது வரை யாரும் உயிருடன் திரும்பவில்லை என கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டுக்கு முன்னதாக உலகம் முழுவதும் 'பிளேக்' நோய் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

அதே சமயம் அந்த தீவில் உள்ள பொதுமக்களுக்கும் பிளேக் நோய் அதிகமாக பரவதொடங்கியது. அந்த காலத்தில் அறிவியல் வளர்ச்சி தற்போது அளவுக்கு முன்னேறவில்லை. தொற்று பரவாமல் இருக்க மக்களை, உயிருடன் எரித்து கொன்றதாகவும் ஒரு தகவல் உள்ளது.

The haunting of Italy's Poveglia Island
இந்த இடங்களுக்கு சென்றால் உயிருக்கு உத்திரவாதம் இல்லையா? - உலகின் மர்மமான 4 இடங்கள்!

இந்த சம்பவம் நடந்து சில வருடங்களுக்கு பிறகு அந்த தீவில் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது , இரவில் அழு குரல் சத்தம் என பயங்கர சம்பவங்கள் நடந்துள்ளன .

அங்கு என்னதான் உள்ளது என்பதை அறிய 1930 ஆண்டு அங்கு ஒரு மன நல மருத்துவமனையினை அரசாங்கம் அமைத்தது. ஆனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மர்மமான முறையில் இறந்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக சில சம்பவங்கள் நடக்கவே 1960 களில் இந்த மருத்துவமனை மூடப்பட்டது .

தற்போது இந்த தீவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன இங்கு உள்ள மக்கள் கூறுவது பல வருடங்களுக்கு முன்பு உயிருடன் எரிக்கப்பட்ட ஒரு லட்சம் பேர் ஆவியாக சுற்றுவதாக கூறுகின்றனர்.

The haunting of Italy's Poveglia Island
அதிரப்பள்ளி முதல் நோகலிகை வரை: சுற்றுலா பயணிகளை மயக்கும் 7 இந்திய நீர்வீழ்ச்சிகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com