பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா?

பயணிகள் குறைந்தது ஐந்து இரவுகள் அங்கு தங்கியிருக்கும் வரை பூட்டானின் தினசரி சுற்றுலாக் கட்டணங்களில் சிலவற்றைச் செலுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக தங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா?
பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா? Twitter
Published on

இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் மடங்கள், கோட்டைகள் என நாட்டின் அழகைக் காதலிக்காமல் இருக்க முடியாது.

கடந்த 2 ஆண்டுகளாக தொற்றுநோய்களால் சுற்றுலாத் துறை பெருமளவில் பாதித்துள்ளதால், பூட்டான் இந்த மாதம் முதல் 2024 இறுதி வரை நாட்டிற்கு வருகை தரும் பயணிகளை ஊக்குவிக்க சில சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது.

பூட்டானின் சுற்றுலாத் துறை ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் பயணிகள் குறைந்தது ஐந்து இரவுகள் அங்கு தங்கியிருக்கும் வரை பூட்டானின் தினசரி சுற்றுலாக் கட்டணங்களில் சிலவற்றைச் செலுத்துவதைத் தவிர்க்கலாம்.

மேலும் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக தங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின்படி, பூட்டானுக்கு வரும் பயணிகள் முதல் நான்கு நாட்களுக்கு கட்டணம் செலுத்தினால், கட்டணம் செலுத்தாமல் கூடுதலாக நான்கு நாட்கள் தங்கலாம் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல், முதல் ஏழு நாட்களுக்கு கட்டணம் செலுத்தும் பயணிகள் இரண்டாவது வாரத்தில் கட்டணம் செலுத்தாமல் கூடுதலாக ஏழு நாட்கள் தங்கலாம். அதே நேரத்தில் 12 நாட்களுக்கு செலுத்துபவர்கள் 18 நாட்களுக்கு அதைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பூட்டானின் குடிவரவுத் துறையானது பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறித்திருக்கிறது.

பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா?
இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் செல்லக்கூடிய வெளிநாட்டு இடங்கள் பற்றி தெரியுமா?

ஏற்கனவே பூட்டானுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் விசாவை ரத்து செய்துவிட்டு, புதிய விசாவிற்கு மீண்டும் விண்ணப்பிப்பதன் மூலம் புதிய சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, பூட்டானின் SDF (Standing Deposit Facility) மாறவில்லை. மேலும் ஒரு இரவுக்கு ஒரு பயணிக்கு $200 உள்ளது என்பதை அரசு அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய கட்டணச் சலுகைகள், 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.

ஒரு நாளைக்கு குறைந்தது $200 ( இந்திய மதிப்பில் ரூ. 16,489) செலவு செய்வது பூட்டானுக்குப் பயணிப்பவர்களுக்கு புதிதல்ல.

தொற்றுநோய்க்கு முன், சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் $200 முதல் $250 வரை செலவழிக்க வேண்டியிருந்தது, இது பெரும்பாலும் ஹோட்டல், உணவு மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் ஆகும்.

பூட்டான் : 4 நாட்களுக்கு பணம் செலுத்தினால் போதும்; சுற்றுலா பயணிகள் Free ஆக தங்கலாமா?
Vatican City : 1 மணி நேரம் போதுமா ஒரு நாட்டையே சுற்றி பார்க்க? சூப்பர் Tourist Spot

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com