உலகின் மிகச்சிறிய நாடு எங்கே இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? தனிமைப்படுத்தப்பட்ட நகரம் முதல் சிறிய தீவுகள் வரை பல சிறிய பகுதிகளை உலகம் அதனுள் அடக்கியுள்ளது
அவற்றில் சில உங்களை ஆச்சரியப்படுத்தலாம். உலகம் முழுவதும் பல தனித்துவமான நாடுகள் நிரம்பியிருந்தாலும், உலகின் மிகச்சிறிய நாடாக இருக்கும் வாட்டிகன் நகரம் குறித்து தான் இங்கே பார்க்க போகிறோம். இந்த நாட்டை வெறும் 1 மணி நேரத்திற்குள்ளேயே சுற்றி பார்த்து விடலாமாம்.
சுற்றுலாவிற்கு ஒரு ஊருக்கு போனாலே அந்த ஊரை சுற்றி முடிக்கவே குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும். எப்படி ஒரு நாட்டையே ஒரு மணி நேரத்தில் பார்க்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள். என்னென்ன இங்கு பேமஸ் என்று விரிவாக படிக்கலாம்.
வாட்டிகன் நகரம் இத்தாலியின் ரோம் நகரத்தால் சூழப்பட்டுள்ளது. இது வெறும் 0.17 சதுர மைல்கள் அல்லது 0.44 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது நிலப்பரப்பில் உலகின் மிகச்சிறிய நாடாக அமைகிறது.
எல்லாப்பக்கமும் இத்தாலி எல்லையைக்கொண்ட இந்த நாட்டை தான் ஒரு மணிநேரத்தில் சுற்றிப்பார்த்துவிடலாம். ஹோலி சீ என்றும் அழைக்கப்படும் இந்த நாடு கிறிஸ்த்துவ மதத்தின் முக்கியமான ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயத்தைக்கொண்டுள்ள நாடாகும்.
வாட்டிகன் நகரம் 800 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது உலகின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாகும்.
வாட்டிகன் நகரம் முழுவதையும் வெறும் 40 நிமிடங்களில் நடந்து கடந்து செல்ல முடியும்.
உலகின் மற்றொரு நாடான இத்தாலியால் முற்றிலும் சூழப்பட்ட ஒரே நாடு இதுதான்.
வாட்டிகன் நகரைச் சுற்றியுள்ள சுவர்கள் மற்றும் வாயில்கள் படையெடுப்பாளர்களிடமிருந்து நகரத்தைப் பாதுகாக்க 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன.
சிறை இல்லாத நாடாகவும் வாட்டிகன் நகரம் உள்ளது. மாறாக இங்கு குற்றம் செய்பவர்கள் இத்தாலி சிறைக்கு அனுபவிக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய தேவாலயங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும்.
வாட்டிகன் அருங்காட்சியகங்களுக்குள் அமைந்துள்ள சிஸ்டைன் சேப்பல் மற்றொரு முக்கியமான அடையாளமாகும். மைக்கேலேஞ்சலோவால் வரையப்பட்ட அற்புதமான ஓவியங்களுக்கு இந்த தேவாலயம் பிரபலமானது.
வாட்டிகன் நகரம் உலகில் பெரும் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் அடையாளங்கள் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust