அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!

எல்லா அரசர்களும் எதோ ஒரு காரணத்துக்காக போற்றிப்புகழப்படுகின்றனர். சிலர் கொடைத்தன்மைக்காக சிலர் வீரத்துக்காக. ஆனால் சிலரோ தங்களது மோசமான ஆட்சிக்காகவும் மிருகத்தனமான படையெடுப்புக்காகவும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றனர்.
அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!
அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!Representational

இந்த உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசர்களின் பேரரசின் கை ஓங்கியிருக்கிறது.

எல்லா அரசர்களும் எதோ ஒரு காரணத்துக்காக போற்றிப்புகழப்படுகின்றனர்.

சிலர் கொடைத்தன்மைக்காக சிலர் வீரத்துக்காக. ஆனால் சிலரோ தங்களது மோசமான ஆட்சிக்காகவும் மிருகத்தனமான படையெடுப்புக்காகவும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றனர்.

அப்படிப்பட்ட 5 அரசர்களைத் தான் இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

1. அட்டிலா தி ஹன்

ஐரோப்பியாவின் மிகப் பெரிய பேரரசாக இருந்த ஹன்னிக் பேரரசை கி.பி.434 முதல் 553ம் ஆண்டு வரை ஆண்ட மன்னர் அட்டிலா.

"கடவுளின் சாட்டை" என இவரை அழைக்கும் அளவு மக்களுக்கும் மற்ற பேரரசுகளுக்கும் தொல்லை தருபவராக விளங்கினார் அட்டிலா.

தனது மூத்த சகோதரனான பிளெடாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார் அட்டிலா.

இவரது பேரரசை ஜெர்மனிக் கடந்து ரஷ்யா வரை விரிவுபடுத்த விரும்பினார்.

ஹன்னிக் வீரர்கள் ஐரோப்பிய நாடோடிகள் ஆவர்.

இவர்கள் இரத்தவெறியுடன் கத்தியபடி எதிரியைத் தாக்குவதற்காக பிரபலமாக இருந்தனர்.

அட்டிலாவும் அவரது வீரர்களும் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். அட்டிலா சிறந்த இராணுவ தளபதியும் கூட.

அந்த காலத்து அரசர்கள் அனைவருக்குமே அட்டிலா படை எடுத்து வரக்கூடுமோ என்ற அச்சம் இருந்தது. ரோமானியப் பேரரசே அட்டிலா படையெடுக்காமல் இருக்க கப்பம் கட்டிவந்தார்.

அட்டிலா இயல்பிலேயே மிகவும் கொடூரமானவர். தந்திரமானவரும் கூட.

கலிகுலா

ரோமானிய அரசர் கலிகுலா கி.பி 37 - 41 வரை மொத்தமாகவே 4 ஆண்டுகள் தான் ஆட்சி செய்தார்.

ஆட்சிக்கு வந்த புதிதில் நாடுகடத்தப்பட்டவர்களை ரோமுக்கு திருப்பி அழைத்துவந்தார்.

மக்கள் விரும்பாத சில வரிகளை தளர்த்தினார். ஆனால் சில நாட்களிலே அவர் மிகவும் மோசமான அரசராக மாறத் தொடங்கினார்.

பாலியல் நோயான சிபில்ஸ், வலிப்பு மற்றும் மன நோய்களால் அவர் பாதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நோய்களே அவர் மிருகத்தனமாக நடந்துக்கொள்ள காரணம் என்கின்றனர்.

அவர் அரசியல் எதிரிகளை மிரட்டித் தற்கொலை செய்யச் சொல்வார், அரசு அதிகாரிகளை அவரது தேருக்கு முன்னால் பல மைல்கள் ஓட வைப்பார்.

ஒற்றர்களை உயிருடன் விலங்குகளுக்கு உணவளிப்பார்.

அரசு அதிகாரிகளின் மனைவிகள், மகள்களை பாலியல் வன்புணர்வு செய்வார். அவரது சொந்த சகோதரி ட்ருசில்லாவையும் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இவரது பைதியக்காரத்தனம் ஒரு கட்டத்தில் உச்சத்தை எட்டியது. அனைவரும் தன்னை கடவுளாக வழிபட வேண்டும் எனக் கூறினார்.

இறுதியில் இவரது பாதுகாப்பு படையில் இருந்த ஒரு வீரனே கலிகுலாவைக் கொலை செய்தார்.

இவான்

இவான் IV வாசிலியேவிச் என்ற பெயரில் பிறந்த இந்த அரசர் இவான் தி டெரிபிள் என்று அழைக்கப்படுபவராக மாறினார்.

1533ம் ஆண்டு மாஸ்கோவின் இளவரசராக பதவியேற்ற இவர், 1547ல் அரசரானார்.

1560ம் ஆண்டு அவரது மனைவி திடீரென உயிரிழந்தார். இதனால் அவரது தெளிவான மனம் கலங்கி உடைந்தது.

மனைவியின் மறைவுக்கு எதிரிகள் விஷம் கொடுத்தது தான் காரணம் என நம்பினார்.

இதனால் சித்தபிரமை ஏற்பட்டதைப் போல நடந்துகொண்டவர், அரசியல் போட்டியாளராக கருதிய எல்லாரையும் சித்திரவதை செய்து கொன்றார்.

அவரது பாதுகாப்புக்காக "Oprichniki" என்ற அமைப்பை உருவாக்கினார். அவர்கள் பாதிரியார்களைக் கொன்றனர். தேவாலயங்களை சூறையாடினர்.

அரசு அதிகாரிகள் உயிருடன் எரிக்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர்.

வியாபாரிகளிடம் இருந்து சரக்குகள் பறிக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. ரஷ்யா மொத்தமும் அமைதியை இழந்தது.

இறுதியாக 1584ல் சதுரங்கம் ஆடும் போது வலிப்பு வந்து மறைந்தார் இவான்.

தைமூர்

தைமூர் ஒரு அரசராக பிறக்கவில்லை. ஒரு குற்றவாளியாகவே அவதரித்தார்.

தொடக்கத்தில் வழிப்போக்கர்கள் மற்றும் பயணிகளிடமிருந்து கொள்ளையடித்தார்.

அவர்களிடம் இருந்து விலங்குகள் மற்றும் சரக்குகளைப் பறித்தவர் விரைவிலேயே ஒரு கூலிப்படையை உருவாக்கினார்.

அவரது இளமைக் காலத்தில் அவரது வலது கை மற்றும் காலில் அம்புகள் பாய்ந்து கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தியபோதும் அவர் பிழைத்துக்கொண்டார்.

அவர் கைப்பற்ற நினைக்கும் நகரத்தில் எதிர்வரும் எவரையும் இரக்கமின்றி கொலை செய்து மண்டை ஓடுகளை பிரமிடுகளாக அடுக்கி அதன் மூலம் தனது கொடூரத்தை வெளிப்படுத்துவார்.

அவர் தற்கால ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் மத்திய ஆசியாவில் திமுரிட் பேரரசை நிறுவும் வரையில் 17 லட்சம் பேரை கொலை செய்திருக்கிறார்.

இது அன்றைய உலக மக்கள் தொகையில் 5 விழுக்காடு. மங்கோலிய அரசர் செங்கிஸ்கானுக்கு முன்னரே துருக்கி - மங்கோலிய கொடுங்கோல் ஆட்சியர் தைமூர் இருந்தது பலருக்கும் தெரியாது.

அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!
ஜெய்ப்பூர் மகாராஜா முதல் தாய்லாந்து இளவரசி வரை : உலக அளவில் வசீகரமான 11 அரச குடும்பத்தினர்

விளாட் தி இம்பேலர்

விளாட் 1431 இல் பிறந்த ருமேனிய இளவரசர்.

1448 மற்றும் 1496 ஆண்டுகளுக்கு இடையில் மூன்று தனித்தனி முறை ஆட்சியமைத்தார்.

இவரது ஆட்சிகாலத்தில் படையெடுத்து வரும் எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியதற்காக ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.

ஆனால் அதற்காக அவர் பயன்படுத்திய காட்டுமிராண்டித்தனம் தான் வரலாற்றில் அவரை கொடூர மன்னனாக முன்னிலைப்படுத்துகின்றன.

கடுமையான சித்திரவதைகளைச் செய்வதும் மரணதண்டனைகள் நிறைவேற்றுவதும் அவருக்கு விருப்பமானதாக இருந்தது.

இவரது நடத்தையை வைத்தே ட்ராகுலா பாத்திரம் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.

அட்டிலா முதல் தைமூர் வரை : செங்கிஸ்கானை விட கொடூரமான 5 அரசர்கள் - நடுங்க வைக்கும் கதைகள்!
ஹாரி முதல் எட்வர்ட் வரை - காதலுக்காக அரச பட்டத்தை துறந்த அரச குடும்பத்தினர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com