உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?

தங்களது பாரம்பரிய உடைகளையும், பழக்கவழக்கங்களையும் இன்றும் பின்பற்றிவரும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடி மக்கள் இவர்கள் தான்.
உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?
உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?canva
Published on

உலகம் முழுவதும் பல விதமான பழங்குடியின மக்களும், அவர்களுக்கென்று தனித்துவமான பழக்க வழக்கங்களும் இருக்கின்றன.

ஒவ்வொன்றை பற்றியும் தெரிந்துகொள்ளும்போது, மனித வாழ்க்கையில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன என்பது நம்மை ஆச்சரியப்பட வைக்காமல் இல்லை.

அப்படி ஒன்று தான் இந்த முர்சி பழங்குடியினர் பின்பற்றும் உதட்டை துண்டிக்கும் வழக்கம்.

ஆப்பிரிக்காவின் எத்தியோபியாவில் இருக்கும் ஓமோ பள்ளத்தாக்கில் வாழ்ந்து வருகின்றனர் இந்த மக்கள். முர்சி டாட் ஆர்க் தளத்தின்படி சுமார் 10,000 முர்சி மக்கள் தற்போது இருக்கின்றனர்.

தங்களது பாரம்பரிய உடைகளையும், பழக்கவழக்கங்களையும் இன்றும் பின்பற்றிவரும் ஆப்பிரிக்காவின் கடைசி பழங்குடி மக்கள் இவர்கள் தான்.

இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் தங்கள் வாயில் பெரிய பெரிய மரத்தட்டு அல்லது வட்டுக்களை அணிந்திருப்பதை நாம் கவனிக்கலாம்.

இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது.

பெண் பிள்ளைகள் 15 அல்லது 16 வயதை அடைந்தவுடன், அவர்களது உதடுகள் வெட்டப்படுகின்றன. இந்த காயம் சரியாகும் வரை ஒரு ஈரமான பிளக் போன்ற சாதனம் உதட்டினை பற்றிக்கொள்கிறது. இது இந்த பெண்களின் உதடுகள் மூடாமல் இருக்க உதவுகிறது.

எவ்வளவு தூரத்திற்கு உதடுகள் நீள வேண்டும் என்பது அந்த பெண்ணின் சொந்த விருப்பம்.

அதன் பிறகு இந்த லிப் பேட் அல்லது மரத்தட்டுகளை அணிகின்றனர்.

அழகின் எடுத்துக்காட்டாகவும், ஒரு பெண் தன் கணவர் மீது கொண்டுள்ள விசுவாசத்தையும் இந்த வட்டுகள் குறிக்கிறது.

உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?
இரண்டாவது திருமணமா? அடுத்தவர் மனைவி தான் மணப்பெண்- வினோத வழக்கம் பின்பற்றும் பழங்குடியினர்

அவர்கள் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில், கணவருக்கு உணவு பரிமாறும்போது, பசுவிடம் இருந்து பால் கரக்கும் போது என்பது போன்ற நேரங்களில் இவர்கள் தங்கள் வட்டுகளை அணிகின்றனர்.

வட்டுகளை பெண்கள் அணியாவிட்டால், அவர்களது கணவர்கள் இந்த பெண்களுடன் தாம்பதிய உறவில் ஈடுபட மறுக்கிறார்கள்.

கணவன் இறந்துவிட்டால் இந்த வட்டுகளை பெண்கள் அவிழ்த்துவிடலாம்.

எத்தனை ஆண்டுகள் முன்னேறி இந்த சமூகம் சென்றுக்கொண்டிருந்தாலும், தங்களது இந்த வழக்கத்தை முர்சி பழங்குடியினர் இன்றும் பின்பற்றி தான் வருகின்றனர்.

உதடுகளை துண்டிக்கும் வினோத வழக்கம் - முர்சி பழங்குடி மக்கள் இதனை பின்பற்ற என்ன காரணம்?
Longwa: இந்திய-மியான்மர் எல்லையில் இரட்டை குடியுரிமை கொண்ட பழங்குடி கிராமம்!பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com