எகிப்து மம்மிகளின் மர்ம ரகசியங்கள் : தோன்றியது எப்படி? உலகை மிரட்டும் ஆதாரங்கள்

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டவை. அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
The origins of mummification in ancient Egypt
The origins of mummification in ancient EgyptTwitter
Published on

மம்மி (Mummy) என்பது காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கிறது. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் சில மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டவை. அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘மம்மி’ என்ற வார்த்தையின் தோற்றம் என்ன?

‘மம்மி’ என்ற சொல், குறிப்பிட்ட அல்லது இயற்கை காரணமாக அழுகாமல் இருக்கும் ஒரு நபர் அல்லது விலங்கின் உடலைக் குறிக்கிறது.

தி வேர்ல்ட் ஹிஸ்டரி என்சைக்ளோபீடியா இணையதளத்தின் படி “மம்மி என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் ‘முமியா’ என்பதிலிருந்தும் பாரசீக ‘மம்’ என்பதிலிருந்தும் வந்ததாக குறிப்பிடப்படுகிறது. இது ‘மெழுகு’ என்று பொருள்படும்.

நாட்டின் வறண்ட மணலில் சடலங்கள் எவ்வளவு நன்றாகப் பாதுகாக்கப்படுகின்றன என்பதன் மூலம் இறந்தவர்களை மம்மியாக்கும் யோசனை பரிந்துரைக்கப்பட்டிருக்கலாம். மம்மிஃபிகேஷன் என்பது காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கிறது.

இது வழக்கமாக இறந்த உடலில் இருந்து ஈரப்பதத்தை அகற்றுவதை குறிக்கிறது. சதை மற்றும் உறுப்புகளை உலர்த்துவதற்கு தார் மற்றும் பிசின் போன்ற இரசாயனங்கள் அல்லது இயற்கை பாதுகாப்புகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது.

எகிப்திய மம்மிகள்

கி.மு. 3500 க்கும் முற்பட்ட எகிப்திய மம்மிகள் அவை புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாக மம்மிக்களாக உருவாகின.

பண்டைய எகிப்தில் புதைக்கும் வழக்கங்கள் இல்லை. இறந்தவர்களின் உடல்கள் சாதாரண மண் குழிகளில் புதைக்கப்படும். சூடான, வறண்ட பாலைவன மண்ணானது இயற்கையாக இறந்தவர்களின் உடல்களில் இருக்கும் நீரை ஆவியாக்கி மம்மிக்களாக உருவாக்கிவிடும்.

இயற்கையாக சடலங்கள் பதப்படுத்தப்பட்டது போலானது எகிப்திய கலாச்சாரத்திலும், மதத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது

இருப்பினும், இப்போது ஐரோப்பா முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மனித எச்சங்களை விவரிக்க "மம்மி" என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன் என்று கேள்விக்குள்ளாக்குகின்றன.

ஒரு காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட சுற்றுச்சூழலின் காரணமாக இயற்கையாகவே மம்மிக்களாக உருவாகின. இதனால் இந்த பெயர் வந்திருக்கலாம்.

The origins of mummification in ancient Egypt
பூமியின் தகுதியை தாண்டி பெருகுகிறதா மனித இனம்? அறிவியல் சொல்வதென்ன?

எகிப்தியர்கள் ஏன் மம்மியை உருவாக்கினார்கள்?

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுவுலகிற்கு செல்வதாக நம்பிகின்றனர்.

அந்த உலகில் வாழ அவர்களுக்கு உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. இதனால் அரசர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டன.

மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பாதுகாக்கப்பட்டன. வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மம்மிஃபிகேஷன் வரலாறு

எகிப்தில் குறைந்த மழைப்பொழிவு மற்றும் வறண்ட மணல் மற்றும் காற்று இருந்ததால், வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் ஆரம்பகால மம்மிஃபிகேஷன் ஒரு தற்செயலான செயல்முறை என்று நம்பப்படுகிறது.

சடலம் பெரும்பாலும் களிமண் பானைகள் மற்றும் நகைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களுடன் ஒரு குழியில் வைக்கப்பட்டது. அதன் பின்னர் கிமு 2600 இல் திட்டமிட்டே இவை செய்யப்பட்டது. கிரேக்க-ரோமன் காலம் வரை தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

The origins of mummification in ancient Egypt
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com