Google நிறுவனத்தின் பெயர் எழுத்துப்பிழையால் வந்ததா? - இதன் அர்த்தம் என்ன?

கூகோல் டாட் காம் என்ற பெயரில் டொமைன் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள இணையத்தில் தேடியபோது, கூகுள் என தவறுதலாக டைப் செய்த்தால் கூகுள் என்ற வார்த்தை வந்தது. 1997ஆம் ஆண்டு கூகுள் என்ற வார்த்தை பதிவும் செய்யப்பட்டது. சரி முன்னாள் பெயரின் கதைக்கு வருவோம்!
கூகுள் நிறுவனத்தின் முந்தைய பெயர் என்ன தெரியுமா? இணையத்தை கவர்ந்த Backstory
கூகுள் நிறுவனத்தின் முந்தைய பெயர் என்ன தெரியுமா? இணையத்தை கவர்ந்த BackstoryCanva
Published on

கூகுள் நிறுவனத்தின் பெயர் ஒரு சிறிய எழுத்துப்பிழையால் உருவானது என்பதை நாம் அறிவோம். ஆனால் கூகுள் என பெயரிடுவதற்கு முன் அந்நிறுவனத்துக்கு வேறொரு பெயர் இருந்தது என தெரியுமா?

அந்த பெயரை தற்போது கேட்டால் நாம் சிரித்துவிடுவோம். ஆனால் அந்த பெயருக்கு பின்னாலும் லாஜிக்கலான ஒரு அர்த்தம் இருந்தது தான்.

கூகோல் கூகுள் ஆன கதை

கூகுள் - Google என முதலில் எந்த வார்த்தையும் இவர்கள் முன்மொழியவில்லை. இவர்கள் வைக்க நினைத்த பெயர் கூகோல் - Googol.

கூகோல் என்றால் 1 என்ற எண்ணிற்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியங்களை போடுவதால் வரும் எண்ணை குறிப்பதாகும்.

கூகோல் என்ற வார்த்தையை ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஷான் ஆண்டர்சன் என்ற மாணவர் தான் பரிந்துரைத்துள்ளார். கூகோல்பிலெக்ஸ் - Googolplex என்ற வார்த்தையை அவர் கூறியபோது, அந்த வார்த்தை கூகோல் என சுருக்கப்பட்டது.

கூகோல் டாட் காம் என்ற பெயரில் டொமைன் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள ஆண்டர்சன் இணையத்தில் தேடியபோது, கூகுள் என தவறுதலாக டைப் செய்யவே, கூகுள் என்ற வார்த்தை வந்துள்ளது. 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி கூகுள் என்ற வார்த்தை பதிவும் செய்யப்பட்டது.

Google என்ற வார்த்தையே அதற்கு முன்னர் வரை கிடையாது.

சரி முன்னாள் பெயரின் கதைக்கு வருவோம்

கூகுள் நிறுவனத்தின் முந்தைய பெயர் என்ன தெரியுமா? இணையத்தை கவர்ந்த Backstory
கூகுள், காபி, ஒன் பை டூ - குழந்தைகளுக்கு விநோத பெயர் சூட்டும் ஒரு அடடே இந்திய கிராமம்!

Backrub

கூகுள் நிறுவனத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் பேக்ரப் - Backrub.

இந்த வார்த்தை, “ஒருவர் தங்கள் முதுகில் மசாஜ் செய்துகொள்வது அல்லது தேய்த்துக்கொள்வது” என்று பொருள்படுகிறது.

நமக்கு சற்று முகம் சுழிக்கும் வகையிலும், சிரிப்பூட்டும் வகையிலும் தான் இருக்கிறது இந்த வார்த்தையின் பொருள்.

ஆனால், நிஜமாகவே இது தான் கூகுளின் முந்தைய பெயராக இருந்தது.

Backrub என்ற பெயர் எப்படி வந்தது?

1996 ஆம் ஆண்டு கூகுளின் துணை நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கெய் ப்ரின் இந்த பெயரை வைத்தனர்.

காரணம், உருவாக்கப்பட்ட பிரோகிராம் இணையத்தின் back link-களை ஆராய்ந்து, வெப்சைட் எவ்வளவு முக்கியமானது என்பதையும், மற்ற எந்த தளங்களுடன் இணைந்திருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள உதவியது.

ஆனால், 1997ஆம் ஆண்டு வாக்கில் துணை நிறுவனர்கள் இருவருமே நிறுவனத்திற்கு வேறு பெயரை தேட பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர் என ஸ்டான்ஃபோர்ட் பல்கலையின் டேவிட் கோலர் என்பவர் கூறியுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் முந்தைய பெயர் என்ன தெரியுமா? இணையத்தை கவர்ந்த Backstory
கூகுள்: ஊழியர்களை தொடர்ந்து ரோபாட்களை லே ஆஃப் செய்யும் நிறுவனம் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com