உலகின் பணக்கார நாடுகள் 2022 - முதலிடம் பிடித்தது இந்த நாடா ?

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற பழமொழி ஓரளவுக்கு மட்டுமே உண்மை. பணத்தின் பற்றாக்குறை ஏற்படுத்தும் மன அழுத்தம், மகிழ்ச்சியின்மை, மோசமான உடல் நலக்கேடு ஆகியவற்றின் பட்டியல் அதிகம்
Rich

Rich

Twitter

Published on

(கடந்தாண்டு வெளியான கட்டுரையின் மீள்பகிர்வு இது)

பணம் இருந்தால் நீங்கள் நினைத்ததை வாங்க முடியும். விடுமுறைகள், கச்சேரிகள், விளையாட்டு போட்டி டிக்கெட்டுகள், வெளியூர் பயணம், திரைப்படங்கள், பொழுதுபோக்கு பூங்கா பயணம், நண்பர்களுக்கு பரிசுகள் போன்றவை பணம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் அன்பு, நம்பிக்கை, நட்பு, அமைதி போன்றவற்றிற்கு பணம் இருந்தால் மட்டும் போதாது.

பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற பழமொழி ஓரளவுக்கு மட்டுமே உண்மை. பணத்தின் பற்றாக்குறை ஏற்படுத்தும் மன அழுத்தம், மகிழ்ச்சியின்மை, மோசமான உடல் நலக்கேடு ஆகியவற்றின் பட்டியல் அதிகம். ஒருவரின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட போதுமான பணத்தை வைத்திருப்பது அத்திவாசியமான ஒன்று.

Rich and Poor

Rich and Poor

Facebook

தேசிய செல்வத்தின் அளவீடாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி

உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டினதும் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) ஆராய்வதன் மூலம், செல்வத்தின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தலாம். பின்னர் அவற்றை ஒவ்வொரு நாடுகளோடும் ஒப்பிடலாம். எவ்வாறாயினும், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் வாழும் ஒருவர் சம்பாதிக்கும் சராசரி ஊதியத்துடன் ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை.

எடுத்துக்காட்டாக, 2019 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 65,279.50 டாலர் ஆக இருந்தது, ஆனால் அதன் சராசரி ஆண்டு ஊதியம் 51,916.27 டாலர் ஆகவும் அதன் சராசரி ஊதியம் 34,248.45 டாலர் ஆகவும் இருந்தது. பணக்கார நாடுகளில் கூட சில குடிமக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். மேலும் ஏழ்மையான நாடுகளில் கூட ஏராளமான பணக்காரர்கள் வசிக்கின்றனர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஆரோக்கியத்தின் அடையாளமாகும்.

Rich

உலகின் ஏழ்மையான 10 நாடுகள் இவைதான்!

Monaco

Monaco

Twitter

உலகின் முதல் 10 பணக்கார நாடுகள் (தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய நிலவரம் டாலரில் - உலக வங்கி)

1. மொனாக்கோ - $190,512
2. லிச்சென்ஸ்டீன் - $180,366
3. லக்சம்பர்க் - $115,873
4. சுவிட்சர்லாந்து - $87,097
5. மக்காவோ (சீனா SAR) - $86,117
6. அயர்லாந்து - $85,267
7. நார்வே - $67,389
8. அமெரிக்கா - $63,543
9. டென்மார்க் - $61,063
10. சிங்கப்பூர் - $59,797

பணக்கார நாடுகளை ஒப்பிடும் போது வளரும் நாடுகள் பின்தங்கியே உள்ளன. குறைவான உள்கட்டமைப்புகள், முதிர்ச்சியற்ற பொருளாதாரம் காரணமாக உலகளாவிய சந்தையில் போட்டியிட முடிவதில்லை. மேலும் இந்நாடுகளில் போர், வறுமை, நோய், அரசியல் அமைதியின்மை போன்றவை ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். வளரும் நாடுகள் உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இருப்பதற்கே இவையே காரணங்கள்.

Liechtenstein

Liechtenstein

Twitter

வரி சொர்க்கங்கள் மற்றும் மொத்த தேசிய வருமானம் (GNI)

GDP மதிப்புகள் சில நேரங்களில் சர்வதேச வணிக நடைமுறைகளால் திசைதிருப்பப்படலாம். எடுத்துக் காட்டாக அயர்லாந்து, லிச்சென்ஸ்டைன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் வெளிநாட்டு வணிக நிறுவனங்களுக்கு ஆதரவான வரிக் கொள்கைகளை கொண்டிருக்கின்றன. இவை வரியில்லா சொர்க்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் மொத்த தேசிய வருமானமானது உள்நாட்டில் இருந்து வருவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக வருகிறது.

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த வரி புகலிடங்களின் விளைவை ஈடுசெய்யும் முயற்சியில், பல பொருளாதார வல்லுநர்கள் ஒவ்வொரு நாட்டின் மொத்த தேசிய வருமானம் அல்லது GNI ஐயும் கண்காணிக்கின்றனர்.

இந்த கணக்கு GDP க்கு மிகவும் ஒத்ததாக உள்ளது. இது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பை அளவிடுகிறது-எனினும், இது வெளிநாட்டு வணிகங்கள் மூலம் நாட்டிற்குள் வரும் அல்லது வெளியே செல்லும் பணத்தை கூட்டுகிறது அல்லது குறைக்கிறது.

இது வரிப் புகலிடச் செயல்பாடுகளைக் கணக்கிட உதவுகிறது. மற்றும் ஒரு பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தின் ஒரு துல்லியமான அளவை வழங்குகிறது.

மேற்கண்ட முறையில் கணக்கிட்டால் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகளின் வரிசையும் அவற்றின் வருமானமும் மாறுபடும். அதை அட்லஸ் முறை என்கிறார்கள். இதை உலகவங்கியின் பார்வையில் டாலர் மதிப்பில் பார்ப்போம்.

லிச்சென்ஸ்டீன் - $116,440
சுவிட்சர்லாந்து - $84,310
நார்வே - $78,180
லக்சம்பர்க் - $73,500
அமெரிக்கா - $64,530
அயர்லாந்து - $64,150
டென்மார்க் - $63,070
ஐஸ்லாந்து - $62,420
கத்தார் - $56,210
சிங்கப்பூர் - $54,920

முன்னர் கண்ட பட்டியலோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நாடுகளின் வரிசையும் அவற்றின் வருமானமும் வேறுபடுவதைப் பார்க்கலாம்.

பெர்முடா

பெர்முடா

Facebook

அதே நேரம் மொத்த தேசிய வருமானம் அனைத்து சர்வதேச நிதி தொடர்புகளையும் முழுமையாக கணக்கில் கொள்ளவில்லை. இது இலாபத்தை மட்டும் சரியாக அளவிட உதவுகிறதே அன்றி அதன் மூலத்தை அல்ல. முதல் பட்டியலில் அவற்றின் எண்கள் மாறியிருந்தாலும் குறிப்பிடத்தக்க வரி இல்லா இடங்களான அயர்லாந்து, லிச்சென்ஸ்டைன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் இன்னும் முதல் பத்து இடங்களில்தான் உள்ளன. இந்நாடுகளைப் போல பல குட்டி நாடுகளும் உள்ளன.

பெர்முடா ($117,740), ஐல் ஆஃப் மேன் ($83,160), கேமன் தீவுகள் ($68,200), மற்றும் சேனல் தீவுகள் ($66,220) ஆகிய வரி இல்லா சொர்க்க நாடுகளைக் கணக்கிட்டால் இந்நாடுகளும்முதல் 10 இடங்களில் உள்ளன. இவை நான்கும் மிகச் சிறிய வரிப் புகலிடங்களாகும். இந்நாடுகளில் மக்கள் தொகை மிகவும் குறைவு. உலகெங்கிலும் உள்ள பணக்காரர்கள், முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைவரும் இங்கேதான் சட்டவிரோதமாக தமது பணத்தை சேமித்து வைக்கின்றனர். எனவே இத்தகைய சூழ்ச்சி காரணமாகவும் ஒரு நாட்டின் மொத்த தேசிய தனிநபர் உற்பத்தி வருமானம் கணிசமாக உயரும்.

Luxembourg

Luxembourg

Twitter

ஒவ்வொரு கண்டத்திலும் பணக்கார நாடு எது?

எடுத்துக்காட்டாக, மக்கள் வசிக்கும் ஆறு கண்டங்களில் ஒவ்வொன்றிலும் மிகவும் பணக்கார நாடுகளின் பட்டியல் (ஜிடிபி படி) இப்படி இருக்கும்:

பணக்கார ஐரோப்பிய நாடுகள் 2021: லக்சம்பர்க் ($118,001), அயர்லாந்து ($102,390), சுவிட்சர்லாந்து ($93,520)

பணக்கார ஆசிய நாடுகள் 2021: சிங்கப்பூர் ($97,057), கத்தார் ($61,790), இஸ்ரேல் ($49,840)

வட அமெரிக்காவில் உள்ள பணக்கார நாடுகள் 2021: அமெரிக்கா ($63,416), கனடா ($52,790), புவேர்ட்டோ ரிக்கோ ($34,140)

ஆஸ்திரேலியா/ஓசியானியா: ஆஸ்திரேலியா ($62,620), நியூசிலாந்து ($48,350), பலாவ் ($11,840)

தென் அமெரிக்காவில் உள்ள பணக்கார நாடுகள் 2021: உருகுவே ($16,970), சிலி ($16,800), அர்ஜென்டினா ($9,930)

பணக்கார ஆப்பிரிக்க நாடுகள் 2021: சீஷெல்ஸ் ($13,140), மொரிஷியஸ் ($8,680), எக்குவடோரியல் கினியா ($8,630)

கண்டங்களின் பணக்கார நாடுகள் என்று பார்த்தால் வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை விட ஐரோப்பிய பணக்கார நாடுகள் இரு மடங்கு அதிகம் வருமானத்தைக் கொண்டிருக்கின்றன. ஆனால் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைக் கணக்கில் கொண்டால் அவற்றின் வருமானம் பல மடங்கு குறைவு. எனில் இக்கண்டங்களின் மற்ற நாடுகளைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

Rich

செங்கிஸ்கான் கல்லறை : உலகை நடுங்க வைத்த ஒரு மர்ம வரலாறு - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com