பாலஸ்தீனம் கவிஞர் : போர் நிச்சயம் முடியும், ஆனால் விலை கொடுப்பது யார்? - தார்விஷின் கவிதை

போர்க்காட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு மஹ்மூத் தர்விஷின் இந்த பத்து வரிக் கவிதை சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. போரின் பயனின்மை குறித்தும், போரின் விலையை சுமக்கப் போகும் மக்களின் வலியையும் இந்த கவிதை கேள்வியாக எழுப்புகிறது.
War and Peace

War and Peace

Twitter

Published on

உக்ரைன் மீதான ரசியப் போரில் குண்டு வெடிப்பு காட்சிகள் மட்டுமல்ல வலி நிறைந்த உணர்ச்சி மிகுந்த வாழ்க்கைக் காட்சிகளும் காணக் கிடைக்கின்றன.

ஏஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தின் புகைப்படச் செய்தியாளர் உக்ரைனின் கீவ் மெட்ரோ நிலையத்தில் எடுத்த ஒரு புகைப்படம் வைரலானது. அதில் ஒரு இளைய காதல் ஜோடி கட்டிப்பிடித்தவாறு பல்வேறு உணர்ச்சிகளை அடக்கிய முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். இந்தப் புகைப்படத்த்தின் உணர்ச்சியை அழகான கவிதையாக பல ஆண்டுகளுக்கு முன்னரே தீட்டியிருக்கிறார் பாலஸ்தீனக் கவிஞர் மகமூத் தார்வீஷ். போர் நிச்சயம் முடியும் என்ற இந்த சிலவரிக் கவிதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

Newssense

மகமூத் தார்வீஷ்

மகமூத் தார்வீஷ்

Twitter

The war will end.
The leaders will shake hands.
The old woman will keep waiting for her martyred son.
That girl will wait for her beloved husband.
And those children will wait for their hero father.
I don’t know who sold our homeland
But I saw who paid the price.

அந்தக் கவிதையின மொழிபெயர்ப்பு

போர் நிச்சயம் முடியும்
தலைவர்கள் கைகுலுக்குவார்கள்

அந்த வயதான பெண்மணி தியாகியான தனது மகனுக்காக
காத்துக் கொண்டே இருப்பாள்.

தன் அன்பிற்குரிய கணவனுக்காக அந்த இளம்பெண் காத்திருப்பாள்

நாயகர்களான தமது அப்பாவிற்காக
அந்தக் குழந்தைகளும் காத்திருப்பார்கள்

நான் அறியவில்லை
யார் நமது தாய்மண்ணை விற்றார்கள்?

ஆனால் நான் பார்த்து விட்டேன்
விலை கொடுக்கப் போவது யார் என்று.

மகமூத் தார்வீஷ்

மகமூத் தார்வீஷ்

Twitter

போர்க்காட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு மஹ்மூத் தர்விஷின் இந்த பத்து வரிக் கவிதை சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. போரின் பயனின்மை குறித்தும், போரின் விலையை சுமக்கப் போகும் மக்களின் வலியையும் இந்த கவிதை கேள்வியாக எழுப்புகிறது.

பாலஸ்தீன நாட்டின் அல் பிர்வா கிராமத்தில் மார்ச் 13, 1941 இல் பிறந்த மஹ்மூத் தர்விஷ் அவரது காலத்தில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த கவிஞர்களில் ஒருவர். 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் போர் காரணமாக அவர் தனது ஏழு வயதில் லெபனானுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். அவரது சொந்த கிராமம் இஸ்ரேல் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது.

War

War

Twitter

பின்னர் அவரது குடும்பம் தாயகம் திரும்பி வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபா எனும் நகரத்தில் வசிக்கத் தொடங்கியது. எதுகை மோனை சந்தமின்றி நேரடியான வரிகளால் உணர்ச்சி பொங்க எழுதும் கவிதை பாணியை தர்வீஷ் உருவாக்கிக் கொண்டார். தனது முதல் கவிதைத் தொகுப்பான சிறகுகளற்ற பறவைகளை 19 ஆம் வயதில் வெளியிட்டார்.

அவரது கவிதைகளில் அடிக்கடி வரும் கருப்பொருள்கள் மூன்று. அவை, அவரது தாயகம், பெண்கள் மற்றும் போர். அவரது “நான் ஒரு அரேபியன்” எனும் கவிதை அவரை அரபுலகில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரலபமாக்கியது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து அவரது கவிதைகள் தாயக உணர்ச்சியால் எதிர்கொண்டதால் அவர் “எதிர்ப்புக் கவிஞர்” என்று அழைக்கப்படுகிறார்.

அவரது “அடையாள அட்டை” எனும் கவிதை ஒரு போராட்டப் பாடலாக பாலஸ்தீன மக்களிடையே மாறிய போது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 24 மட்டுமே.

Loss In War

Loss In War

Twitter

1973 ஆம் ஆண்டு முதல் அவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு தொடர்பில் இருந்தார். இதனால் அவர் தாயகத்தை விட்டு புலம் பெயருமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். பெய்ரூட்டிலும், பாரிஸிலும் அவர் மாறி மாறி 26 ஆண்டுகள் வசித்தார்.

பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியில் உள்ள நகரான ரமல்லாவில் அவர் 1996 முதல் குடியேற அனுமதிக்கப்பட்டார். தன் வாழ்நாளில் அவர் எட்டு கட்டுரைப் புத்தகங்களையும் 30 கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டார். 1981 ஆம் ஆண்டில் அல் கர்மெல் எனும் இலக்கிய பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராக செயல்பட்டார்.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அவருக்கு ஒரு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவர் காலமானார்.

War and Peace

Ukraine துறைமுக நகரை கைப்பற்றிய Russia படைகள் – அடுத்தது என்ன?

Loss in War

Loss in War

Twitter

அவர் மரித்தாலும் அவரது கவிதைகள் உயிர்த்தெழுந்து ஒவ்வொரு இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் போதும் பாலஸ்தீன மக்களிடையே போராட்டக் குரலாக இசைக்கின்றன. பாலஸ்தீனம் மட்டுமல்ல ஈராக் உள்ளிட்ட அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களை எதிர்த்தும் அவரது கவிதைகள் பேசப்பட்டன. தற்போது உக்ரேன் மீதான ரசிய ஆக்கிரமிப்பு போரின் போதும் அவரது கவிதை வைரலாகியது. காங்கிரஸ் தலைவர் சசி தரூர், வங்க நடிகை ஸ்வதிஸ்தா முகர்ஜி உட்பட பலர் தர்வீஷின் கவிதையை டிவிட் செய்திருக்கின்றனர்.

ஆமாம். போர் நிச்சயம் முடியும். விலை கொடுக்கப் போவது யார்? போர் இருக்கும் வரை தர்வீஷ் தனது கவிதையால் இந்த உலகை கேட்டுக் கொண்டே இருப்பார்.

War and Peace

Ukraine Russia War : Go and F**k yourself எனக் கூறிய உக்ரைன் வீரர்கள் மரணிக்கவில்லை

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com