தவளை கரன்சி, தவளை பாலம் - தவளையை சின்னமாக கொண்ட ஒரு ஊர் - எங்கே இருக்கிறது?

அப்போது 1754ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் இரவு, ஒரு விநோத சத்ததால் இவர்கள் உறக்கத்திலிருந்து எழுப்பட்டனர். இந்தியர்கள் தான் தங்களை தாக்குவதற்காக படையெடுத்து வந்துவிட்டனர் என, ஆண்கள் அறிவாள், கத்தி, கம்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினர்.
கரன்சி முதல் பாலம் வரை - தவளையை சின்னமாக கொண்ட நகரம் - எங்கே? என்ன காரணம்?
கரன்சி முதல் பாலம் வரை - தவளையை சின்னமாக கொண்ட நகரம் - எங்கே? என்ன காரணம்?ட்விட்டர்
Published on

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் விண்டாம் என்ற சிறிய நகரம் அமைந்திருக்கிறது. இந்த நகரத்தை தவளைகளின் நகரம் எனலாம்.

கண்ணுக்கெட்டிய வரை இங்கு தென்படுவது தவளைகள் தான். அந்த ஊரின் பணத்தில் தொடங்கி அதிகாரப்பூர்வ நகர முத்திரை வரை தவளைகள் ஆட்கொண்டிருக்கிறது.

இந்த ஊர் மக்கள் தவளைகளை தங்களின் அடையாளமாக பார்க்கின்றனர்.

இதற்கு என்ன காரணம்?

கரன்சி முதல் பாலம் வரை - தவளையை சின்னமாக கொண்ட நகரம் - எங்கே? என்ன காரணம்?
"நல்லா சாப்பிடுங்க" குரங்குகளுக்கு விருந்து கொடுக்கும் தாய்லாந்து மக்கள் - ஏன் தெரியுமா?

இந்தியர்கள் மீது அச்சம்

விண்டாம் ஊர் மக்களுக்கு தவளைகள் மீதான இந்த காதல் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது. இவ்வூர் மக்கள் நிஜத்தில் விண்டாமை சேர்ந்தவர்கள் இல்லை.

இவர்கள் வேறொரு இடத்தில்ருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். இவர்களுக்கு இந்தியர்கள் தங்களை தாக்குவார்கள், கொன்றுவிடுவார்கள் என்ற அச்சம் இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி சில தகவல்கள் உலா வந்ததே தவிர இதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

இரவு முழுக்க ஒலித்த சத்தம்

அப்போது 1754ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாள் இரவு, ஒரு விநோத சத்ததால் இவர்கள் உறக்கத்திலிருந்து எழுப்பட்டனர். இந்தியர்கள் தான் தங்களை தாக்குவதற்காக படையெடுத்து வந்துவிட்டனர் என, ஆண்கள் அறிவாள், கத்தி, கம்பு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டைவிட்டு வெளியேறினர்.

ஆனால், எதனால் இந்த விநோத சத்தம் வருகிறது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விடிந்த பிறகு அதற்கான காரணம் தெரிந்தது. மலைப்பகுதியில் அமைந்திருந்த விண்டாம் நகரத்தில் அப்போது கடும் வறட்சி நிலவியது. மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த ஒரே ஒரு குளத்தில் மட்டும் தான் அப்போது தண்ணீர் இருந்தது.

நகரத்தின் மற்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டதால், தவளைகள் இந்த குளத்தை நோக்கி படையெடுத்தன. இடம் பற்றாக்குறையால் இந்த தவளைகளுக்குள் சண்டை மூண்டது. இதன் விளைவாக ஏற்பட்ட சத்தம் தான் விண்டாம் ஊர்மக்களை ஒரு இரவு முழுவதும் கதிகலங்கச் செய்துள்ளது.

கரன்சி முதல் பாலம் வரை - தவளையை சின்னமாக கொண்ட நகரம் - எங்கே? என்ன காரணம்?
நேபாளத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் "நாய் திருவிழா" குறித்து தெரியுமா?

ஊர் சின்னமாக மாறிய தவளை

இந்த காரணம் காட்டுத்தீயாக பக்கத்து ஊர்களில் பரவ, கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகினர் விண்டாம் மக்கள். ஆனால், இவர்களோ இந்தக் கதையை மாற்றி எழுத நினைத்தனர்.

தவளையை தங்களது அடையாளமாக ஏற்றனர். விண்டாம் நகர கரன்சி, நகரத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை, வணிகங்களின் பெயர்கள், சுவற்றில் தவளைகளின் கிராஃபிட்டிக்கள் என அனைத்திலும் தவளைச் சின்னங்கள் இடம்பெற்றன.

இந்த தவளைகள் ஒன்றுகூடி சண்டையிட்ட ஃபாலெட் குளம், தவளைக் குளம் என பெயர்மாற்றப்பட்டது. ஊர்மக்கள் இந்த தவளைப் போரை மையமாகக் கொண்டு பாடல்கள், கவிதைகள் எழுதினர், முதியவர்கள் தங்களது பேரக் குழந்தைகளுக்கு கதைகள் வாயிலாக இந்த வரலாற்றை கூறினர்.

2000ஆம் ஆண்டு ஒரு தவளை பாலமும் திறக்கப்பட்டது. இந்த பாலத்தின் இரு பக்கங்களிலும் 11 அடி உயரத்தில் வெண்கலத்தால் ஆன தவளை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன

ஆனால், இந்த தவளைப் போர் கதையை சிலர் நம்பக்கூடியதாக இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். தவளைப் போர் நடந்ததாக கூறப்படும் காலக்கட்டத்தில் வறட்சி எதுவும் இல்லை எனவும், ஆண் தவளைகள் பெண் தவளைகளை ஈர்ப்பதற்காக இந்த சத்ததை எழுப்பியிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது.

கரன்சி முதல் பாலம் வரை - தவளையை சின்னமாக கொண்ட நகரம் - எங்கே? என்ன காரணம்?
Bera : மனிதர்களும் சிறுத்தைகளும் ஒன்றாக வாழும் இந்திய கிராமம்- அசரடிக்கும் தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com