நமக்கு ஏற்படும் பல அனுபவங்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ளவும், அதை விட அதிகமான சில அனுபவங்களை நினைவிலிருந்து நீக்கவேண்டும் எனவும் நினைப்போம். ஆனால், அந்த நினைவு நமக்கு இனிமையானதோ, கசப்பானதோ, இருந்தே தீரும், மறக்கவே மறக்காது என்றால்?
”மறதி ஒரு தேசிய வியாதி” என்று கமல் சொன்னது ஜில் பிரைஸ் என்ற இந்த 42 வயது பெண்ணுக்கு பொறுந்தாது. ஏனென்றால், இவருக்கு எதுவுமே மறக்காது. மறதி என்ற ஒரு விஷயமே இல்லாமல் அனைத்து விதமான நினைவுகளுடனும் வாழ்ந்து வருகிறார் இவர்.
இது வரமா சாபமா என அவரிடம் கேட்டால், இரண்டுமே இல்லை என்கிறார்.
அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணததை சேர்ந்தவர் ஜில் பிரைஸ். இவருக்கு தனது குழந்தை பருவம் முதல், கடந்த ஒரு நிமிடம் வரை தனது வாழ்வில் என்ன நடந்தது என்று அச்சு பிசராமல், துல்லியமாக நினைவில் இருக்கும்.
“எனது தோள்களில் ஒரு வீடியோ கேமராவுடன் நான் அலைந்துகொண்டிருக்கிறேன்” என்று தன் நிலையை விவரிக்கிறார் ஜில்.
இவரது இந்த கண்டிஷனுக்கு ஹய்பர்தைசீமியா சிண்ட்ரோம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவரது இந்த நிலைக்காகவே உருவாக்கப்பட்ட பதம் (term) இது என டைம்ஸ் நவ் தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை Highly Superior Autobiographic Memory - HSAM எனவும் கூறுகின்றனர்.
வழக்கமாக மனிதர்களுக்கு இருக்கும் ஞாபக சக்தி போல அல்லாமல், அசாதாரணமாக ஒருவருக்கு இருக்கும் நினைவாற்றல் நிலையை இது குறிக்கிறது
கடந்த 2000மாம் ஆண்டு முதல் பல விதமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் ஜில். தனது 14 வயது முதல் என்ன நடந்தது, எப்படி, எங்கு என அனைத்துமே அவரது நினைவில் இருக்கிறது. அவரது வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்கள் தொடங்கி, அதே நேரத்தில் உலகளவில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் அவர் நினைவுக்கூருகிறார்
இந்த கண்டிஷன் உள்ள முதல் நபராக அறியப்படுகிறார் ஜில். ஆனால், அவர் குறித்த தகவல்கள் வெளியாக தோடங்கியதிலிருந்து, கடந்த 2021 ஆம் ஆண்டு கணக்குப்படி தற்போது வரை 60 பேர் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
அவரது வாழ்க்கைக்கு நெரடியாக தொடர்பில்லாத எந்த ஒரு விஷயத்தையும் அவரால் சரியாக நினைவுக்கூர முடியவில்லை என்றாலும், மகிழ்ச்சியான நினைவுகளுடன் சேர்ந்து, அவர் சிறுவயதில் எதிர்கொண்ட கசப்பான, அச்சமூட்டக் கூடிய சம்பவஙளையும் அவர் நினைவுக்கூருவதாக அவர் சொல்கிறார்
”எனக்கு 8 வயது இருக்கும்போது நியூ ஜெர்சியிலிருந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். அதன் விளைவாகக் கூட இந்த நிலை எனக்கு ஏற்பட்டிருக்கலாம்”.
சராசரியாக மனித நினைவாற்றல் என்பது, காலம் மாற மாற, ஒரு சில நினைவுகளை இழக்கும் அல்லது மாற்றியமைக்கும் திறன் உள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் ஜில்லின் வாழ்வில் அப்படி இல்லை.
தனது நினைவுகள் அதிகமாக வரத்தொடங்கி, அவரை மன உளச்சலுக்கு ஆளாக்கும் சமயத்தில், அவர் தனது மன எண்ணங்களை தன் டைரியில் எழுதத் தொடங்கியுள்ளார். அப்படி எழுதுவதனால் மன அமைதி கிடைப்பதாக கூறுகிறார் ஜில்.
ஜில் தனது இந்த அனுபவங்களை ”The Woman Who Can't Forget: The Extraordinary Story of Living with the Most Remarkable Memory Known to Science in 2008” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust