அமெரிக்கா : 1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?

அவ்வப்போது காணாமல் போவது பாட்ரிசியாவின் இயல்பு தான், தானாக திரும்ப வந்துவிடுவார் என அவரது கணவர் பாப் காவல்துறையினரிடம் கூறிவிட்டார். பல மாதங்கள் கழித்தும் அவர் திரும்பாததால் காணாமல் போன அவரைத் தேடத் தொடங்கியுள்ளார் பாப்.
1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?
1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?Twitter
Published on

30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்ணை குடும்பத்தினர் இறந்துவிட்டார் என்றே கருதியிருக்கின்றனர்.

ஆனால் அவர் மீண்டும் அவர்கள் கண் முன் தோன்றியது அதிர்ச்சியளிப்பதாக இருந்திருக்கிறது.

அமெரிக்காவின் ரோஸ் என்ற நகரத்தைச் சேர்ந்த அந்த பெண் திரும்பி வந்ததை கடந்த வாரம் குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாட்ரிசியா கோப்தா என்ற அந்த பெண்ணுக்கு இப்போது 52 வயது.

1992ம் ஆண்டு கோடையில் பென்சில்வேனியா அவசரகால பதில் மையத்தில் இவர் காணாமல் போனதாக புகார் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"ஒரு நாள் மாலை நான் வீட்டுக்கு வரும்போது அவர் அங்கு இல்லை. யாருக்கும் எதுவுமே தெரியவில்லை" என பாப் செய்தி நிறுவனங்களிடம் பேசும்போது கூறியிருக்கிறார்.

ஆனால் அவ்வப்போது காணாமல் போவது பாட்ரிசியாவின் இயல்பு தான், தானாக திரும்ப வந்துவிடுவார் என அவரது கணவர் பாப் காவல்துறையினரிடம் கூறிவிட்டார்.

பல மாதங்கள் கழித்தும் அவர் திரும்பாததால் காணாமல் போன அவரைத் தேடத் தொடங்க்கியுள்ளார் பாப்.

பாட்ரிசியா போர்ட்டோ ரிக்கோ என்ற நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் 1999ம் ஆண்டு முதல் வசித்து வருவது தெரியவந்துள்ளது.

தெருவில் வீடில்லாமல் தங்கியிருந்த பாட்ரிசியாவுக்கு பாதுகாப்பு வழங்க அந்த இல்லத்தில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

ஆரம்பத்தில் அந்த முதியோர் இல்லத்தில் உள்ள எவரிடத்திலும் தனது கடந்த கால வாழ்க்கை குறித்து எதுவும் பகிர்ந்துகொண்டதில்லையாம்.

1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?
”18 வயது இளைஞர் போல தோற்றமளிக்க வேண்டும்” : 16 கோடி செலவழித்த 45 வயதான நபர் - எங்கே?

வயதான பிறகு தான் தன்னைப் பற்றியும் தனது நினைவில் இருக்கும் மனிதர்கள் பற்றியும் பேசத் தொடங்கியிருக்கிறார் பாட்ரிசியா.

தொடர்ந்து பாட்ரிசியாவுக்கு நெருங்கிய நபர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பாட்ரிசியா தெருக்களில் மேரி மாதா பற்றியும் உலகின் அழிவு பற்றியும் போதனைகளை மேற்கொண்டு புகழ்பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது.

1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?
72 வயதில் 3300 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த மூதாட்டி - என்ன சொல்கிறார்?

ஆனால் அவருக்கு மனநலம் சார்ந்த பிரச்னைகளும் இருந்ததாக பாப் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் ஆசை பாட்ரிசியாவுக்கு இருந்ததாகவும் சில நேரங்களில் அவர் போர்ட்டோ ரிக்கோவுக்கு சென்றும் வாழ விரும்பியதாக பாப் நினைவு கூறுகிறார்.

காணாமல் போன பாட்ரிசியா குறித்து போர்ட்டோ ரிக்கோ செய்திதாள்களிலும் தான் விளம்பரம் அளித்ததாகவும் பாப் கூறியுள்ளார்.

1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?
இறந்த மூதாட்டி மீண்டும் வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரிழந்த அதிசயம் - எங்கே?

இறுதியாக பாட்ரிசியா குடும்பத்துடன் இணைந்துவிட்டார். அவரது முகத்தை வைத்தே குடும்பத்தினர் அடையாளம் கண்டு பிடித்திருந்தாலும் காவல்துறையினர் டி.என்.ஏ சோதனை மேற்கொண்டு உறுதிபடுத்தினர்.

பாட்ரிசியாவை மீண்டும் பார்ப்போம் என்று கனவில் கூட எண்ணிடாத குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

தனியாக தெருக்களில் திரியும் பலருக்கு பின்னும் இப்படியான ஒரு கதை இருக்கிறது.

1992-ல் காணாமல் போன பெண் 30 ஆண்டுகள் கழித்து மீட்பு - என்ன நடந்தது?
"என் பிணத்தை கூட கொடுக்காதீர்கள்" - 1.5 கோடி சொத்தை அரசுக்கு எழுதி வைத்த முதியவர் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com