வேலையே இல்லாமல் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?

சிலருக்கு வேலையே இருக்காது அவர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவார்கள். உலகெங்கிலும் இதுபோன்று இருக்கும் வேலை குறித்து, அதன் சம்பளம் குறித்தும் தான் பார்க்க போகிறோம்.
வேலையே இல்லைமால் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?
வேலையே இல்லைமால் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?Twitter
Published on

இன்றைய நவீன உலகில், நம் அன்றாட தேவைக்காக ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதில் முக்கியமான ஒன்று வேலை.

சிலர் நாள் முழுக்க வேலை செய்துவிட்டு குறைவான சம்பளம் வாங்குவார்கள். சிலருக்கு வேலையே இருக்காது அவர்கள் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவார்கள்.

உலகெங்கிலும் இதுபோன்று இருக்கும் வேலை குறித்து, அதன் சம்பளம் குறித்தும் தான் பார்க்க போகிறோம்.

சாக்லேட்டை சுவைப்பது

சாக்லேட் சாப்பிடுவது எல்லாம் ஒரு வேலையா என்று புருவத்தை மேலே தூக்குகிறீர்களா?

ஆம் இப்படியும் வேலை இருக்கிறது. சாக்லேட்டின் மணம், சுவை, நிறம் ஆகியவற்றைப் பார்த்து சொல்வது தான் வேலை

கோடிவா சாக்லேட் தயாரிக்கும் நிறுவனம் அந்த வேலைக்கு பணியாளர்களுக்கு 30 முதல் 60 ஆயிரம் டாலர்கள், அதாவது 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரையிலான சம்பளம் கொடுக்கிறது.

தண்ணீரில் டைவிங் அடிப்பது

இந்த வேலைக்கு, 30 ஆயிரம் டாலர்களுக்கு மேல் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 25 லட்சம் ஆகும்.

இது வாட்டர் ஸ்லைடு டெஸ்டர் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது.

இதில், செயற்கை நீர் ஊற்றுகளில் உள்ள சரிவை பரிசோதித்து, நீரின் தரத்தை சரிபார்க்க வேண்டும். சர்ஃபிங் ஆர்வலர்களுக்கு இது சிறந்த வேலை.

தூங்குவது

ஆடம்பர படுக்கைகள் தயாரிக்கும் நிறுவனமான சிமோன் ஹார்ன் லிமிடெட், தயாரிக்கும் படுக்கைகளை விற்பனை செய்யும் முன்பு அதன் தரத்தை சரிபார்க்க பணியாளர்களை நியமிக்கின்றனர்.

படுக்கையில் படுத்து உறங்கும் வேலைக்கு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

உடைகள் அணிவது

சீனாவின், பல நிறுவனங்கள் தாங்கள் ஒரு பெரிய நிறுவனம் என்று காண்பித்துகொள்வதற்காக அதிகாரிகளைப் போல உடை அணிய வேலைக்கு ஆள் எடுக்கின்றன.

நிறுவனத்தைப் பற்றி பிரோமோட் செய்வது மட்டுமே இவர்களின் வேலை. இந்த வேலைக்கு லட்சக்கணக்கான ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.

வேலையே இல்லைமால் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுகள் நடந்த ஆய்வில் பதில்!

பாண்டாவை பார்த்துகொள்வது

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மையத்தில் பாண்டா கரடியைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு ஆள் எடுக்கின்றனர்.

இந்த வேலைக்கு 32 ஆயிரம் டாலர்கள் அதாவது 26-27 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது.

வேலையே இல்லைமால் லட்சங்களில் சம்பளம் - உலகெங்கிலும் அப்படி இருக்கும் வேலை பற்றி தெரியுமா?
உலகிலேயே அதிக சம்பளம் கொடுக்கும் நாடு எது? இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com