உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுகள் நடந்த ஆய்வில் பதில்!

தரவு பகுப்பாய்வு ( Data Analysis ), கணக்கியல் (Accountant), வரி அல்லது காப்பீட்டில் பணிபுரிதல் (Tax or Insurance), சுத்தம் செய்தல் மற்றும் வங்கிப்பணி (Banking) ஆகியவை சலிப்பான வேலைகளாக கருதப்படுகிறது.
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுக்ள் நடந்த ஆய்வில் பதில்!
உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுக்ள் நடந்த ஆய்வில் பதில்!Twitter
Published on

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை எது தெரியுமா?நீங்கள் செய்துகொண்டிருக்கும் வேலை தான் என எல்லாருக்கும் தோணலாம். ஆனால் அது உண்மையில்லை!

நவீன உலகில் நமக்கு பல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. தரவு பகுப்பாய்வு ( Data Analysis ), கணக்கியல் (Accountant), வரி அல்லது காப்பீட்டில் பணிபுரிதல் (Tax or Insurance), சுத்தம் செய்தல் மற்றும் வங்கிப்பணி (Banking) ஆகியவை சலிப்பான வேலைகளாக கருதப்படுகிறது.

உண்மையாகவே மகிழ்ச்சியற்ற வேலை என்பதற்கான இலக்கணத்தைத் தேட நாம் 85 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வைப் பார்வையிடலாம்.

அந்த ஆய்வுகள் தனிமையான வேலைகள் தான் உலகிலேயே மகிழ்ச்சியற்ற வேலைகள் எனக் கூறுகின்றன. குழுவாக இணைந்து செய்ய முடியாத, உடன் பணிபுரிபவர்களுடன் அர்த்தமுள்ள உறவுகள் இல்லாத வேலைகள் தான் மகிழ்ச்சியற்ற வேலைகள் எனக் குறிப்பிடுகின்றனர்.

1938ம் ஆண்டு முதல் 700 பங்கேற்பாளர்காள் இந்த ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஆழமான கேள்விகள் கேகப்பட்டு தரவுகள் பெறப்பட்டன.

இந்த தரவுகளின் அடிப்படையில் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் கூடிய வாழ்க்கைக்கு பணமோ, ஆரோக்கியமான உணவோ, உடற்பயிற்சியோ அல்லது தொழில் வெற்றியையோ விட நேர்மறையான உறவுகளே முக்கியம் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுக்ள் நடந்த ஆய்வில் பதில்!
வெடிக்கும் எரிமலையில் ஆபத்தான வேலை ஆனால், சம்பளம் இவ்வளவு தானா?

"சக ஊழியர்களுடன் அதிகமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்பவர்கள் தங்கள் வேலை குறித்து திருப்தியாக இருக்கின்றனர்"

வேலை-வாழ்க்கை திருப்தியின் மிக பழமையான வழிமுறை

ராபர்ட் வால்டிங்கர், ஹாவர்ட் மருத்துவ பள்ளியில் மனநல பேராசிரியராக இருக்கிறார். மிக நீண்ட காலம் நடந்துவரும் வேலை-வாழ்க்கை சமநிலை ( work-life balance ) மற்றும் மகிழ்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளைக் கூறியுள்ளார்.

குழுவாக இணைந்து பணியாற்றுவது என்பது நிறுவனத்தின் உற்பத்தி திறனைப் பெருக்க மட்டுமல்ல ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நேர்மறை உறவுகள் ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும்

சக ஊழியர்களுடன் அதிகமாக தொடர்புகொள்ளத் தேவையில்லாத வேலையில் இருப்பவர்கள் மிகவும் பரிதாபகரமானவர்கள் என்கிறது இந்த ஆய்வு.

"சக ஊழியர்களுடன் அதிகமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்பவர்கள் தங்கள் வேலை குறித்து திருப்தியாக இருக்கின்றனர்" என்கிறார் ராபர்ட் வால்டிங்கர்.

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுக்ள் நடந்த ஆய்வில் பதில்!
பெங்களூரு : அதிகரிக்கும் Work Hard - Party Hard கலாச்சாராம் - இளைஞர் உயிருக்கு ஆபத்து!

எனவே அதிகமாக சக ஊழியர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் வேலைகள் மற்றும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுங்கள் என பரிந்துரை செய்கிறது அந்த ஆய்வு.

"நேர்மறையான உறவுகள் நாம் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் போது மன அழுத்தமும் குறையும்" என வால்டிங்கர் விவரிக்கிறார்.

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியற்ற வேலை என்ன தெரியுமா? - 85 ஆண்டுக்ள் நடந்த ஆய்வில் பதில்!
உலகில் மிக போரான நபர் யார் தெரியுமா? - இங்கிலாந்து பல்கலைகழக ஆய்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com