நீங்கள் அதிகமாக பயணப்பட்டால் பல நகரங்களில் ஹோட்டல்காளில் தங்க வேண்டியது இருக்கும். எல்லா ஹோட்டல்களிலும் பணியாளர்கள் தினசரி அறைகளை சுத்தம் செய்வது உண்டு.
ஆனால் இதற்காக அவர்கள் கதவைத் தட்டுவது, தங்கியிருப்பவருக்கு பல சமயங்களில் தொல்லையாக முடியும்.
தூங்கிக்கொண்டிருக்கும் போதோ அறையிலேயே நேரத்தை செலவிடும் போதோ பணியாளர்கள் வருவதை நாம் விரும்ப மாட்டோம் தானே!
இதற்காக ஹோட்டல்களில் Do Not Disturb கார்டுகள் வழங்கப்படும். நாம் தூங்குவதற்கு முன் இவற்றை வெளிப்புற கைப்பிடியில் தொங்கவிட்டுக்கொள்ளலாம்.
இது நல்ல விஷயம் தானே? இதில் சிந்திக்க என்ன இருக்கிறது எனக் கேள்வி எழலாம்.
நாம் தொங்கவிடும் Do Not Disturb கார்டை நாம் எடுத்துவிட மறக்கக் கூடாது. நீண்ட நாட்கள் கார்ட் தொங்கவிட்டபடி இருந்தால் காவல்துறையினர் உள்ளே இருப்பவர்கள் நலமாக இருக்க இருக்கிறார்களா? என்ன நடக்கிறது என விசாரிக்க நேரிடும்.
வெளிநாடுகளில் இந்த நடைமுறை கொஞ்சம் தீவிரமாகவே பின்பற்றப்படும். அமெரிக்காவில் 72 மணி நேரம் உங்கள் அறையில் Do Not Disturb கார்டு தொங்கினால் காவல்துறையினர் வருகை நிச்சயம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust