கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி - என்ன காரணம் தெரியுமா?

முட்டைகளை எடுத்து குப்பையில் போடும் போது கோழி குஞ்சின் குரல் கேட்டிருக்கிறது. அதை கையில் எடுத்த மார்ஸி, முட்டையிலிருந்து அந்த கோழி குஞ்சை எடுத்து, சுத்தம் செய்து கூண்டுக்குள் வைத்து வளர்த்து வந்துள்ளார். இப்போது அந்த கோழிக்கு தான் 21 வயதாகிறது.
கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி - என்ன காரணம் தெரியுமா?
கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி - என்ன காரணம் தெரியுமா?Twitter

ஒரு கோழியின் ஆயுட்காலம் பொதுவாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை இருக்கும்.

சில நேரங்களில், வெவ்வேறு இனங்கள் மற்றும் பிற காரணிகளால் ஆயுட்காலம் மாறுபடலாம். உலகின் மிகப் பழமையான கோழி 20 வயது 272 நாட்களை எட்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், கோழி பண்ணை வைத்துள்ளனர்.

இதில், பீனட் என்ற கோழி, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அறிக்கைகளின்படி, கோழியின் உரிமையாளர் மார்சி பார்க்கர் டார்வின் ஒரு நேர்காணலில், சராசரியாக கோழி ஐந்து முதல் எட்டு ஆண்டுகள் வரை வாழ்கிறது ஆனால் இது 20 வயதை தாண்டி சாதனை படைத்துள்ளது என்றார்.

பீனட்டின் தாய், முட்டைகளை இட்டு சென்றது. தற்செயலாக அந்த பக்கம் சென்ற மார்ஸி எனும் பெண், அந்த முட்டைகளை எடுத்து குப்பையில் போடும் போது கோழி குஞ்சின் குரல் கேட்டிருக்கிறது.

அதை கையில் எடுத்த மார்ஸி, முட்டையிலிருந்து அந்த கோழி குஞ்சை எடுத்து, சுத்தம் செய்து கூண்டுக்குள் வைத்து வளர்த்து வந்துள்ளார்.

கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி - என்ன காரணம் தெரியுமா?
அதென்ன நெருப்புக் கோழி முதலீட்டாளர்கள்? - முதலீட்டாளர்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

இப்போது அந்த கோழிக்கு தான் 21 வயதாகிறது.

ஒரு கோழியை நீண்ட காலம் வளர்ப்பதற்கான மார்ஸியின் அறிவுரை என்னவென்றால், போதுமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, தயிரில் நொறுக்கப்பட்ட வைட்டமின் டி மாத்திரைகளை சேர்த்து, பழங்கள், காய்கறிகளுடன் உணவளிக்க வேண்டும் என்றார்.

21 வயதான கோழி, நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற மற்ற விலங்குகளுடன் ஒரே அறையில் வாழ்கிறது.

கின்னஸ் உலக சாதனை படைத்த கோழி - என்ன காரணம் தெரியுமா?
கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com