”வீடியோ கேம் வாங்கணும்” - பணம் சேமிக்க வேலையில் சேர்ந்த 8 வயது சிறுவன் - எங்கே?

நாஷிற்கு அவனது பெற்றோர் வாரம் 5 டாலர் பணம் தருகின்றனர். அது அவன் Xbox வீடியோ கேம் வாங்க போதாது என்று அவனுக்கு தெரிந்திருந்தது. வேலைக்கு சென்றால், பணம் சம்பாதிக்கலாம். அதை சேமித்து வைத்து வீடியோ கேம் வாங்கலாம் என நினைத்துள்ளான் சிறுவன்
”வீடியோ கேம் வாங்கணும்” - பணம் சேமிக்க வேலையில் சேர்ந்த 8 வயது சிறுவன் - எங்கே?
”வீடியோ கேம் வாங்கணும்” - பணம் சேமிக்க வேலையில் சேர்ந்த 8 வயது சிறுவன் - எங்கே?canva

வீடியோ கேம் வாங்க தன்னிடம் தேவையான தொகை இல்லாததால், வேலைக்கு விண்ணப்பித்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 8 வயது சிறுவன்.

வீடியோ கேம் விளையாட நம் எல்லோருக்கும் பிடிக்கும். நிறைய அனிமேட்டட் விளையாட்டுகளின் கேசட்டுகளை நாம் சேகரித்திருப்போம். அந்த வீடியோ கேம் என்பது, தொழில்நுட்பம் வளர வளர அதிக வசதிகளுடன் கூடியதாக மாறியது. அதற்கேற்றார் போல அதன் விலையும் அதிகரித்தது.

இந்நிலையில், தான் விரும்பிய வீடியோ கேமை வாங்க போதிய பணம் இல்லாததால், அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாகாணத்தை சேர்ந்த நாஷ் ஜான்சன் என்ற 8 வயது சிறுவன் வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறான்.

நாஷ் வாங்க நினைத்தது Xbox வீடியோ கேம் கிட். இதன் விலை இந்திய மதிப்பில் 11 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குகிறது

நாஷிற்கு அவனது பெற்றோர் வாரம் 5 டாலர் பணம் தருகின்றனர். அது அவன் Xbox வீடியோ கேம் வாங்க போதாது என்று அவனுக்கு தெரிந்திருந்தது. வேலைக்கு சென்றால், பணம் சம்பாதிக்கலாம். அதை சேமித்து வைத்து வீடியோ கேம் வாங்கலாம் என நினைத்துள்ளான் சிறுவன்

”வீடியோ கேம் வாங்கணும்” - பணம் சேமிக்க வேலையில் சேர்ந்த 8 வயது சிறுவன் - எங்கே?
”சாகப்போறேன்னு அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டாம்” நெகிழ வைத்த 6 வயது சிறுவனின் கோரிக்கை

வேலை தேடி அலைந்த சிறுவன், தனது பாட்டியின் வீட்டுக்கு அருகில் ஒரு உணவகத்தில், பாத்திரம் கழுவ ஆள் தேவைப்படும் விளம்பரத்தை கவனித்தான். அந்த வேலையில் சேர முடிவெடுத்தான்.

“எனக்கு தெரிந்த வரை அது மிகவும் எளிதான வேலை. மேலும், நான் நன்றாக பாத்திரங்கள் கழுவுவேன். ஒரு Xbox வீடியோ கேம் வாங்கி எனது நண்பர்களுடன் நான் அதை விளையாடவேண்டும்” என்கிறான் நாஷ்.

ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.

அந்த உணவகத்தில் பணியில் சேர 16 வயதை அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பத்தில் வயது பற்றிய கேள்விகள் ஏதும் இல்லாததால், நாஷ் தன் வயதை ’18க்கு கீழ்’ என குறிப்பிட்டு வேலையில் சேர்ந்தான்.

ஆனால், அவனது உண்மையான வயதை அறிந்த உணவகம் சிறுவனை பணியமர்த்தவில்லை. மாறாக, அவனது எண்ணத்தை பாராட்டி ஒரு விழா நடத்தினர். அந்த விழாவில், நாஷ் ஆசைப்பட்ட Xbox வீடியோ கேமை அவனுக்கு பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் செய்தது உணவகம்!

”வீடியோ கேம் வாங்கணும்” - பணம் சேமிக்க வேலையில் சேர்ந்த 8 வயது சிறுவன் - எங்கே?
கனடா : வளர்ப்பு நாய்களுடன் வேலைக்கு வரலாம் - Pet Lovers-க்கு குட் நியூஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com