"King Soloman போல தான் நானும்" 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்

அரசர் சாலமனை பார்த்து இன்ஸ்பையர் ஆனதாக கூறும் டேவிட், அவரை பின்பற்றி தான் இத்தனை திருமணங்கள் செய்துகொண்டதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்
15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்Twitter
Published on

ஒருவனுக்கு ஒருத்தி என நம் நாட்டில் திருமணபந்தம் குறித்து பெரியோர்கள் சொல்லுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இங்கு ஒருவர் 15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் சந்தோஷமாக, ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்.

மேற்கு கென்யாவை சேர்ந்த 61 வயதான டேவிட் சகாயோ கலுஹானா என்பவரை பற்றி தான் பேசுகிறோம்.

அரசர் சாலமனை பார்த்து இன்ஸ்பையர் ஆனதாக கூறும் டேவிட், அவரை பின்பற்றி தான் இத்தனை திருமணங்கள் செய்துகொண்டதாகவும், குழந்தைகள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்
Sologamy: ஹனிமூனுக்கு கோவா செல்கிறார் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட பெண்

அரசர் சாலமனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனைவிகள், குழந்தைகள். தன்னையும் அரசர் சாலமனாகவே கருதுவதாக கூறிய டேவிட் இன்னும் பல திருமணங்கள் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இப்போது 15 ஆக இருக்கும் இவரது திருமண எண்ணிக்கை, 20 ஆக உயர்ந்தாலும் தனக்கு பிரச்னை இல்லை எனவும் தெரிவித்தார் டேவிட்

மேலும், "என்னைப் போல அறிவு திறன்கொண்ட ஒருவனை ஒரு பெண்ணால் மட்டும் பார்த்து, கவனித்துகொள்ள முடியாது. அவரால் தாங்கிக்கொள்ளக் கூடியதை விட அதிக பாரத்தை அது கொடுக்கும். அதனால் தான் நான் நிறைய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்" எனவும் தெரிவித்தார்.

இவரது மனைவிகள் அனைவரும் இவரை அளவு கடந்து காதலிப்பதாகக் கூறிய டேவிட், மனைவிகளுக்குள்ளும் அளப்பறிய ஒற்றுமை இருக்கிறது எனவும் கூறினார். மேலும் இவர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் சண்டைபோட்டுக்கொள்ளாத வண்ணம் இவர் கையாள முறைகள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இவரது மனைவிகளுள் ஒருவரான ஜெசிக்கா கூறுகையில், " நான் என் கணவர் மற்ற பெண்களைத் திருமணம் செய்து அழைத்து வருகையில் பொறாமைக் கொண்டதில்லை. அவர் பொறுப்பான மனிதர். ஒரு செயலை செய்யும் முன்பு நன்கு ஆலோசித்த பின்னரே அதை நடைமுறைப் படுத்துவார்" எனக் கூறினார்.

இவரது மற்றொரு மனைவி ரோஸ், "நாங்கள் அன்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறோம்...பல காலங்களுக்கு முன்பு எங்களுக்குள் சிறு பொறாமை இருந்தது. ஆனால் இப்போது இல்லை" எனக் கூறினார். ரோஸுக்கும் டேவிடுக்கும் பிறந்த குழந்தைகள் மொத்தம் 15.

15 மனைவிகள், 107 குழந்தைகளுடன் வாழும் ஆஃப்ரிக்க நபர்
ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற அப்பா; மணப்பெண்ணை காப்பாற்றிய குழந்தைகள்- அதிர்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com