சொந்த பெற்றொரிடம் ”மகள் வேலை” : மாதம் 47,000 ரூபாய் சம்பாதிக்கும் இளம்பெண் - என்ன காரணம்?

காலையில் பெற்றோருடன் ஒரு மணிநேரம் நடனமாடுவது, மளிகை சாமான்கள் ஷாப்பிங் செய்வது, வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பது என பல்வேறு வீட்டு வேலைகளை அவர் கவனித்துக்கொள்கிறார்.
This Chinese Woman Quits Job to Become Full-Time Daughter, Gets Rs 47,000 Monthly
This Chinese Woman Quits Job to Become Full-Time Daughter, Gets Rs 47,000 MonthlyTwitter

பெற்றோர்கள் தங்களின் குழந்தைளின் பருவகாலம் வரை அவர்களை கவனித்து கொள்வார்கள்,நேரம் செலவிடுவார்கள்.

ஆனால் குழந்தைகள் வளர்ந்து, அவர்களின் அன்றாட வாழ்வில் ஈடுபடும்போது பெற்றோர்கள் தனித்து விடப்பட்டதாக உணருகிறார்கள்.

சீனாவில், பெற்றோர்கள் இந்த சிக்கலை தீர்க்க ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

15 ஆண்டுகளாக ஒரு செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த 40 வயதான நியானன் என்ற பெண்மணி, "முழு நேர மகளாக மாறுவதற்கு 4,000 யுவான் ($570) மாத சம்பளமாக பெற்றோர் வழங்கியதை அடுத்து, வேலையை விட்டு விலக முடிவு செய்திருக்கிறார். "

நியானன் தனது வேலையினால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இந்த சவாலான காலகட்டத்தில், அவரது பெற்றோர்கள் அவருக்கு ஆதரவை வழங்க முன்வந்தனர்.

வயதான பெற்றோரின் உணர்ச்சிபூர்வமான இந்த முயற்சியால் உந்துதல் பெற்ற நியானன், "முழுநேர மகளாக" வேலை செய்ய முடிவை எடுத்தார்.

This Chinese Woman Quits Job to Become Full-Time Daughter, Gets Rs 47,000 Monthly
கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உலகம் முழுக்க பயணம் செய்யும் இந்திய பெண் - யார் இவர்?

காலையில் பெற்றோருடன் ஒரு மணிநேரம் நடனமாடுவது, மளிகை சாமான்கள் ஷாப்பிங் செய்வது, வீட்டில் உள்ளவர்களுக்கு சமைப்பது என பல்வேறு வீட்டு வேலைகளை அவர் கவனித்துக்கொள்கிறார். நியானன் தனது பெற்றோரின் டிரைவராகவும் பணியாற்றுகிறார்.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, "முழுநேர மகள்" என்ற கருத்து சீனாவில் இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ளது.

இந்த வாழ்க்கை முறை மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது அதிக சுதந்திரத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.

This Chinese Woman Quits Job to Become Full-Time Daughter, Gets Rs 47,000 Monthly
எச்சிலை விற்று சொந்தமாக வீடு வாங்கிய 22 வயது பெண் - மாத வருமானம் ரூ.41 லட்சமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com