நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் - இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு

இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் ஒன்று நாய் உணவை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
dog food
dog foodTwitter

இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் ஆம்னி என்ற நிறுவனம் தாங்கள் உற்பத்தி செய்யும் நாய்களுக்கான உணவை சாப்பிட்டு ரிவீயூ சொல்பவருக்கு சம்பளம் வழங்கி வருகிறது. ஆனால் நம்மில் சிலருக்கு நாய்க்கு தயாரிக்கும் உணவை எப்படி மனிதர் சுவைத்து கருத்து தெரிவிக்க முடியும் என்று குழப்பம் எழலாம்.

அந்த நிறுவனத்தில் தாவர வகையிலான உணவுப் பொருட்களையும், இனிப்பு உருளைக்கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்து தயாரிக்கப்படுகிறதாம்.இதனால் நாய் உணவை மனிதர்களை சுவைத்து விவரங்கள் தெரிவிக்கச் சொல்கின்றனர்.

dog food
dog foodTwitter

வேலைக்குத் தேர்வு செய்யப்படும் நபருக்கு விதிமுறை :

  • நாய் உணவைச் சாப்பிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் வேலை உறுதி

  • ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்

  • 5 நாட்களுக்கு நாய் உணவைச் சாப்பிட வேண்டும்

  • வேலைக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்

  • வேலைக்கு விண்ணப்பிப்போர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பது அவசியம்

dog food
நாயால் வளர்க்கப்படும் மூன்று புலிக் குட்டிகள் - சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம் | Viral Video

இதுபற்றி ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும்போது,

ஆம்னி உணவுப் பொருட்கள் மனிதர்கள் கூட உண்பதற்கு ஏற்றவை. எங்களது தயாரிப்புகளைச் சுவைத்துப் பார்ப்பதற்காகவும், அவை எவ்வளவு சுவை வாய்ந்தது மற்றும் ஆரோக்கியம் நிறைந்த தாவரம் சார்ந்த உணவு என்று நிரூபிப்பதற்காகவும், நாங்கள் மனிதர்களை பணிக்கு அமர்த்துகிறோம் என்றார்.

ஆனால், பிற நாய் உணவு தயாரிப்பு நிர்வாகிகள் பலர் அதனைச் செய்ய முடியாது என நாங்கள் உறுதி கூறுகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

dog food
பெயர்களை நினைவில் வைத்திருக்கும் பூனைகள் - ஆச்சரியமான ஆய்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com