இந்த கடற்கரைகளில் இருந்து மணல் சேகரித்தால் 2 லட்சம் அபராதம் - எங்கு தெரியுமா?

லான்சரோட்டின் கடற்கரைகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ஒரு டன் எரிமலைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இது தீவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக பாதிக்கிறது என்பதை அதிகாரிகள் எடுத்துக்காட்டுகின்றனர்.
This country imposes INR 2 lakh fine for collecting sands and pebbles from beaches
This country imposes INR 2 lakh fine for collecting sands and pebbles from beachesTwitter

பலர் கடற்கரைகளுக்குச் செல்லும்போது, ​​கடற்கரைகளில் இருந்து பவளப்பாறைகள், கூழாங்கற்கள் மற்றும் பிற நினைவுச்சின்னங்களை நினைவுப் பொருட்களாகவும் சேகரிப்பதைக் காணலாம்.

சாதாரண விஷயமாக இதனை பலர் செய்கிறார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட கடற்கரையில் இருந்து அவ்வாறு மணல், பாறைகள் அல்லது கற்களை எடுத்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.

வடமேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள கேனரி தீவுகளின் கடற்கரைகளில் இருந்து இயற்கை பொருட்களை அகற்றும் நபர்களுக்கு 13,478 ரூபாய் முதல் 2.69 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவுக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அதிகரிப்பது நல்ல விஷயமாக இருந்தாலும் இது இயற்கை வளங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

அதாவது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மணல், கற்கள் அல்லது கூழாங்கற்களை அகற்றும் எவருக்கும் அபராதம் விதிக்கப்படுவதன் மூலம், இயற்கை வளம் மீது அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

லான்சரோட்டின் கடற்கரைகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் ஒரு டன் எரிமலைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. இது தீவின் நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்பை கணிசமாக பாதிக்கிறது என்பதை அதிகாரிகள் எடுத்துக்காட்டுகின்றனர்.

This country imposes INR 2 lakh fine for collecting sands and pebbles from beaches
உலகின் அழகான கடற்கரை குகையை பற்றி தெரியுமா? எங்கே இருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com