இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால் உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன?

இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த நகரத்திலிருந்து விடுபட்டுள்ள 30 தீவுகளை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தீவுகளுக்கு செல்ல பாலங்களோ சாலைகளோ கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த தீவுகள் சிலவற்றில் தற்போது 160க்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால்  உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன?
இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால் உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன? twitter
Published on

உலகநாடுகள் சில அந்த நாட்டுக்கு மக்களை குடியேற வைக்க பணம் தருகிறதா சமீப காலங்களில் நிறைய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், மற்றோரு நாடு தங்கள் நாட்டில் குடியேருபவர்களுக்கு ரூ.71 லட்சம் தருவதாக அறிவித்திருக்கிறது

அயர்லாந்து தான் இந்த புதிய அறிவிப்பை விடுத்துள்ளது. அயர்லாந்திலுள்ள கடற்கரை நகரங்களுக்கு குடிபெயர பணம் தருவதாக அந்நாடு தெரிவித்திருக்கிறது

அயர்லாந்து அரசு தங்கள் நாட்டின் தீவுகளை மேம்படுத்தும் விதமாக, மக்கள் தொகையை அதிகரிக்க 'Our Living Islands' கொள்கையின் கீழ் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது என யூரோ நியூஸ் அறிக்கை கூறியுள்ளது.

"கடற்கரை மற்றும் தீவு நகரங்களில் ஒரு நிலையான மற்றும் திடமான சமூகத்தை இதன் மூலம் உருவாக்குவதே எங்கள் நோக்கம்" எனவும் அயர்லாந்து அரசு தெரிவித்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்த நகரத்திலிருந்து விடுபட்டுள்ள 30 தீவுகளை அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த தீவுகளுக்கு செல்ல பாலங்களோ சாலைகளோ கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த தீவுகள் சிலவற்றில் தற்போது 160க்கும் குறைவான மக்களே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால்  உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன?
ரூ.1.5 கோடிக்கு விலைக்கு வரும் ஆளில்லா தீவு - எங்கே? என்னென்ன வசதிகள் உள்ளன?

ஆகையால் இங்கு குடியேற முன்வரும் புதிய மனிதர்களுக்கு 80,000 யூரோக்களை வழங்க முடிவெடுத்துள்ளது அயர்லாந்து அரசாங்கம். இது இந்திய மதிப்பில் 71 லட்சம் ரூபாய். குடியேறுபவர்கள் இங்குள்ள சொத்துக்களை வாங்கிக்கொள்ளலாம். 1993க்கு முன் கட்டப்பட்ட, குறைந்தது 2 ஆண்டுகள் காலியாக இருக்கும் வீடுகளை இவர்கள் வாங்கவேண்டும்

மேலும் தீவுகளில் உள்ள சிதைந்த மற்றும் கைவிடப்பட்ட கட்டிடங்களை மீட்பத்தும் இந்த அத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் பணத்தை வைத்து வீடுகளை சீரமைக்கும் பணிகளை இவர்கள் செய்துகொள்ளலாம்

அயர்லாந்துக்கு குடிபெயர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த நாட்டுக்கு நீங்கள் குடிபெயர்ந்தால்  உங்களுக்கு 71 லட்சம் ! - கண்டிஷன்ஸ் என்ன?
41 லட்சம் பணமும் கொடுத்து, குடியேற இடமும் தரும் நாடு குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com