நம் ஊரில் திருமணம் நடத்தப்படும் முறைகள் பல விதமாக மாறியுள்ளது.
ஒரு திருமணம் நடந்து முடிவதற்குள் வாழ்த்துகளும் பரிசுகளும் எந்த அளவுக்கு சேருகிறதோ அதை காட்டிலும் குப்பைகள் அதிகமாக சேருகிறது. காரணம் திருமணங்களில் ஆடம்பரங்களும் அலங்காரகளும் அதிகமாவதினால் தான்.
ஆனால், ஐரோப்பாவை சேர்ந்த ஒரு தம்பதி தங்களது திருமணத்தை Zero-waste திருமணமாக நடத்தியுள்ளனர். அதாவது இவர்களின் திருமணத்தில் குப்பையே சேரவில்லையாம்.
ஆன்னா மேசியெல்லோ-டியோகோ லினார்ஸ் தம்பதி சுற்றுச் சூழல் மீது அதித அக்கறை கொண்டவர்கள். தங்களது திருமணத்தால் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் அவர்களின் திருமணம் மூலம் பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தனர்.
இதன் படி இவர்கள் திருமணத்திற்கு recycle செய்யப்பட்ட ஆடையை அணிந்தனர். மற்றும் மேடை அலங்காரத்திற்குக் காய்ந்த இலைகள், மலர்களை கொண்டு அலங்காரம் செய்திருந்தனர். இதற்கு இவர்கள் செய்த செலவு சுமார் £3,000.
இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம். இது சராசரியாக இந்தியாவில் நடத்தப்படும் ஒரு திருமணத்திற்கு ஆகும் செலவிற்கு நிகரானது தான். ஆனால், இதை போன்ற முயற்சியில் ஈடுபடும் போது ஏதோ ஒரு சிறு அளவு சுற்றுசூழல் பாதுகாக்கப்படுகிறது. .
இவர்கள் நடத்திய இந்த திருமணம் சமூகவலைதளங்களில் பரவி பாராட்டுகள் பெற்றும், மக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றது.
திருமணத்தில் ஏன் இந்த புதுமை, புரட்சி? என நமக்கு கேள்வி வரலாம். ஆனால் நம் திருமண விழாக்களில் சேரும் குப்பைகளின் அளவை பற்றி அரியவேண்டுமெனில் அவற்றை சுத்தம் செய்யும் சுகாதார பணியாளர்களிடம் கேட்டால் தெரியும்
இப்படி ஏதாவது ஒரு முறையில் சுற்றுச் சூழலை பாதுகாக்க நம்மால் இயன்ற முயற்சிகளை செய்வது நம் கடமைகளுள் ஒன்றாக கருதவேண்டும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust