Google : 2022 -ல் உலகம் முழுவதும் அதிகம் தேடிய வார்த்தை Wordle - டாப் 5 வார்த்தைகள் என்ன?

கோவிட்-19 காலக்கட்டத்தின் போது ஜோஷ் என்ற மென்பொருள் பொறியாளர் அவரது நண்பரான பாலக் ஷாவிற்காக இந்த கேம்மை உருவாக்கினார்.
wordle
wordleTwitter
Published on

2022ல் கூகுளில் அதிகம் தேடிய பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆண்டு முழுவதும் கூகுளில் மக்கள் அதிகம் தேடியவற்றின் ரீகேப்தான் இந்தப் பட்டியல்.

அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், Wordle என்ற ஆன்லைன் வார்த்தை விளையாட்டு 2022 இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக உள்ளது.

பட்டியலின்படி, வேர்டில் என்ற ஆன்லைன் வார்த்தை விளையாட்டு உலகளவில் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. குறிப்பாக இது இந்த ஆண்டு பிப்ரவரியில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகும்.

கோவிட்-19 காலக்கட்டத்தின் போது ஜோஷ் என்ற மென்பொருள் பொறியாளர் அவரது நண்பரான பாலக் ஷாவிற்காக இந்த கேம்மை உருவாக்கினார்.

2020 ஆம் ஆண்டில் கேம் வெளியிடப்பட்டாலும், விளையாட்டு குறித்த சீரான கலர் கரெக்‌ஷனுக்கு பின்னர் இது உலகளவில் வைரலானது.

வைரலான ஆன்லைன் வார்த்தை விளையாட்டை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே விளையாட முடியும்.

ஒரு பிளேயர் அன்றைய வார்த்தையைச் சரியாகக் யூகிக்க ஆறு வாய்ப்புகளைப் பெறுகிறார். ஒரு நபர் வார்த்தையை எப்படி கணிக்கிறார் என்பதை பொறுத்து கேம்மின் நிறம் மாறுகிறது.

பச்சை நிறமாக மாறினால், எழுத்து சரியாக வைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.

மஞ்சள் நிறமாக இருந்தால், சரியான எழுத்து தவறாக வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது.

பிரிட்டன் ராணி எலிசபெத்
பிரிட்டன் ராணி எலிசபெத்NewsSense

கடைசியாக, அது சாம்பல் நிறமாக மாறினால், அந்த எழுத்து வார்த்தையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.

வேர்டில் "டாப் 5" பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கிரிக்கெட் போட்டிகள் நடந்ததால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் "இந்தியா vs இங்கிலாந்து" இரண்டாவது இடத்தில் உள்ளது.

"உக்ரைன்" என்பது கூகுளில் மூன்றாவது அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக உள்ளது.

“ராணி எலிசபெத்தை” உலகளவில் மக்கள் தேடியுள்ளனர். இது நான்காவது இடத்தில் உள்ளது.

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் “Ind vs SA”, உள்ளது.

இந்த ஆண்டு கூகுளில் இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றைத் தேடினீர்களா?

wordle
Squid Game : “ஸ்க்விட் கேம்” வெற்றியடைய காரணம் என்ன? - விரிவான அலசல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com