இனி 10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அனுமதிக்கமாட்டோம் என அறிவித்துள்ளது நியூ ஜெர்சியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று.
குழந்தைகள் சேட்டை செய்தால் என்னதான் அழகு என்று நாம் சொன்னாலும், ரசித்தாலும், சில நேரங்களில் அது சற்று தொந்தரவாகத்தான் இருக்கும். குறிப்பாக தியேட்டர்கள், உணவகங்களில் இருக்கும்போது.
மற்றவரின் தனிப்பட்ட நேரத்தை இது பாதிக்கும்படியாக இருப்பதால், சில திரையரங்கங்களில் குழந்தைகளை அழைத்துவர அனுமதியிருக்காது.
அதுபோல நியு ஜெர்சி மாகாணத்திலுள்ள ஒரு உணவகம் இனி 10 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அழைத்து வர அனுமதியில்லை என்று கூறியுள்ளது.
வரும் மார்ச் 8 முதல் நியூ ஜெர்சியில் அமைந்திருக்கும் நெட்டிஸ் ஹவுஸ் ஆஃப் ஸ்பெகட்டி என்ற உணவகத்தில் தான் இந்த புதிய கண்டிஷன் போடப்பட்டுள்ளது.
குழந்தைகள் அதிகமாக சத்தமிடுவது, குறும்புத்தனம் செய்து மற்றவரை சங்கடத்திற்கு உள்ளாக்குவது, இடம் பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உணவகம் தெரிவித்திருக்கிறது.
”எங்களுக்கும் குழந்தைகளை பிடிக்கும். ஆனால், உணவகத்திற்கு வரும் எந்தவொரு வாடிக்கையாளரும் மன நிறைவுடன் திரும்பவேண்டும் என்பதை நாங்கள் உறுதி செய்துகொள்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள். அதனால் தான் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டது.” என்று உணவகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அவர்கள், அமைதியான குழந்தைகளும் தான் உணவகத்திற்கு வருகிறார்கள். அவர்களை இந்த நடவடிக்கை பாதிக்கலாம், எனினும், இது தவிர்க்கமுடியாதது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
உணவகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவும் கிடைத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust