பாஸேஜ் டு கோயிஸ் என்பது பிரான்சில் உள்ள ஒரு பிரபலமான சாலையாகும். இது ஒரு வினோதமான இயற்கை நிகழ்வுக்கு பெயர் பெற்றது.
4.15 கிமீ நீளமுள்ள இந்த சாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீருக்கு அடியில் மறைகிறது.
அதிக அலை காரணமாக இது நிகழ்கிறது. இந்த சாலையை பார்க்க உலகம் முழுவதிலும் இருந்து ஆர்வமுள்ள சுற்றுலா பயணிகள் இங்கு குவிகின்றனர். அவர்கள் இயற்கை நிகழ்வைக் காண வருகை தருகின்றனர்.
இந்த தனித்துவமான சாலை பர்ன்யோஃப் வளைகுடாவை நோயர்மூட்டியர் தீவுடன் இணைக்கிறது. என்ன தான் இது பார்க்க அழகானதாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானது.
அதிக அலையின் காரணமாக, சாலை கிட்டத்தட்ட 13 அடி தண்ணீருக்கு அடியில் மறைகிறது. கண பொழுதில் மறையும் இந்த நிகழ்வு ஒரு நாளைக்கு இரண்டு முறை நிகழ்கிறதாம்.
சாலையில் செல்லும் ஓட்டுநர்கள், கண்ணுக்குத் தெரியாத அலை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால், மக்கள் பல மணி நேரம் சாலையில் தவிக்கின்றனர். இங்கு அதிகாரிகள் உயரமான கோபுரங்களை அமைத்துள்ளனர்.
மக்கள், இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கினால் கோபுரங்களை உதவியாக இருக்கும்.
நீர்வரத்து குறைந்தவுடன், சாலையில் கடல் பாசி படர்ந்து, சாலையில் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. இந்த இடத்திற்கு செல்லும் போது மக்கள் கவனத்துடன் செல்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust