சுவிட்சர்லாந்தில் உள்ள இந்த 'கார் இல்லாத நகரம்’ பற்றி தெரியுமா?

இந்த பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் பனி மூடிய மலைகள், வசீகரமான கிராமங்கள் மற்றும் அழகிய ஏரிகளின் பரந்த காட்சிகளால் பிரமித்து போகலாம். குதிரை வண்டி சவாரிகள் குழந்தைகளுக்கு மட்டும் வேடிக்கையாக இருக்காது பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
This town in Switzerland is car-free and super famous
This town in Switzerland is car-free and super famousTwitter

இன்று பெரும்பாலான வீடுகளில் பயணிக்க கார் என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. நகரபுறங்களில் 70% கார் என்பது அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

அதே சமயம் உலகில் உள்ள மக்கள் கார்களை அதிகமாக பயன்படுத்துவதால் அதில் இருந்து வெளியாகும் புகை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே கார் பயன்படுத்துவதை முடிந்த அளவு குறையுங்கள் என்று பல்வேறு சமூக ஆர்வம் கொண்ட அமைப்புகள் அறிவுறுத்தி வருகின்றன. தற்போது மின்சார கார்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .

உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள காரை ஒரு இடத்தில் மட்டும் நம்மால் பயன்படுத்த முடியாது, சுவிட்சர்லாந்தில் தான் இந்த தடை. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஆல்ப்ஸின் மையத்தில் உள்ள Zermatt நகரம் சுற்றுலாவாசிகளுக்கு பிடித்த இடமாகும் .

இந்த பகுதியில் உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளின் மூலம்தான் செல்ல முடியும்

இது நகரத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்த அழகான இடத்தை குதிரை வண்டிகள் மூலமாகவும் உங்களுக்கு பிடித்த இடத்திற்கு போகலாம்

This town in Switzerland is car-free and super famous
Range Rover கார் டு கடற்கரை பங்களா: Virat - Anushka தம்பதியின் 11 விலை உயர்ந்த சொத்துகள்!

பனிமலைகளும் ஊசியிலை காட்டு மரங்களும் உங்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். Zermatt இல் எரிபொருட்கள் மூலம் இயங்கும் கார்களுக்கு தடை உள்ளது.

இதனால் வழக்கமாக மற்ற நாடுகளில் வாகனங்களால் ஏற்படும் புகை இங்கு இல்லை. இதனால் இங்கு ஒலி மாசுபாடு மற்றும் கார்பன் உமிழ்வை கணிசமாகக் குறைத்துள்ளது.

அதிக பரிச்சயமான கார்கள் இல்லாத நிலையில் குதிரை வண்டிகள் மற்றும் மின்சார பேருந்துகளை அதிகம் காணலாம். இவை எதுவும் உரத்த ஒலிகளை உருவாக்குவதில்லை.

இந்த பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் பனி மூடிய மலைகள், வசீகரமான கிராமங்கள் மற்றும் அழகிய ஏரிகளின் பரந்த காட்சிகளால் பிரமித்து போகலாம். குதிரை வண்டி சவாரிகள் குழந்தைகளுக்கு மட்டும் வேடிக்கையாக இருக்காது பெரியவர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும்.

This town in Switzerland is car-free and super famous
நாய்கள் ஏன் சிறுநீர் கழிக்க மின்கம்பம் அல்லது கார் டயரை தேர்தெடுக்கின்றன? சுவாரஸ்ய காரணம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com