Walking சென்றால் மின்சாரம் உருவாகும்! புதிய வகை நடைப்பாதை - எங்கே?

இதில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரோ மேக்னெடிக் ஜென்ரரேட்டர் மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 2.1 வாட் மின்சாரம் உருவாகிறது.
e generation pavement
e generation pavementTwitter
Published on

பிரிட்டனில் போடப்பட்டுள்ள நடைப்பாதை ஒன்று மக்கள் நடந்தால் மின்சாரம் உருவாகும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் அமைந்துள்ள டெல்ஃபோர்ட் என்ற நகரத்தில் புதிய வகை நடைப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஹை டெக்’ குதிக்கும் (bouncy) நடைப்பாதையின் மேல் மனிதர்கள் நடந்தால், அது மின்சாரத்தை உருவாக்குகிறது.

ஷ்ரோப்ஷையர் மாகாணத்தின் டெல்ஃபோர்ட் மற்றும் ரெகின் கவுன்சில் இணைந்து இந்த நடைப்பாதையை அமைத்திருக்கிறது. 6 மீட்டர் தொலைவிற்கு போடப்பட்டுள்ள இந்த நடைப்பாதையில் மக்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மின்சார சக்தியாக மாற்றப்படுகிறது. மேலும் மெட்ரோ யூகேவின் அறிக்கையின்படி இங்கு நம் மொபைல் ஃபோன் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த நடைப்பாதை ரப்பர் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டைல்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள எலெக்ட்ரோ மேக்னெடிக் ஜென்ரரேட்டர் மூலம் மின்சாரம் உருவாக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 2.1 வாட் மின்சாரம் உருவாகிறது.

e generation pavement
உலகின் மிக நீளமான பயணிகள் ரயில் : 100 பெட்டிகள்; 1.9 கி.மீ நீளம் - எங்கே?

இந்த நடைப்பாதையில் மக்கள் நடந்து சென்றாலோ அல்லது ஓடினாலோ அங்கு அமைக்கப்பட்டுள்ள சார்ஜிங் பாயிண்ட்களுக்கு தேவையான மின்சாரம் உருவாகும். அதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த சார்ஜிங் பாயிண்ட்களுக்கு அருகில் மக்கள் உட்கார வசதியாக பென்ச்களும் போடப்பட்டுள்ளன.

இந்த முயற்சி ஓரளவுக்கு மக்களின் அதிக மின்சார பயன்பாட்டை கட்டுப்படுத்தும் என்றாலும், இதற்காக கவுன்சில் சார்பில் 4 மில்லியன் பவுண்ட்கள் செலவிடப்பட்டுள்ளது. இது சற்று அதிகம் தான் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

மேலும் டெல்ஃபோர்டின் மத்திய ரயில் நிலையம் மற்றும் டவுன் சென்டரில் சூரிய சக்தி மூலம் இயங்கும் திரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் உருவாக்கிய மின்சக்தியின் அளவை தெரிந்துகொள்ளல்லாம். மாறி வரும் காலநிலையை எதிர்கொள்ள தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கவுன்சில் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

e generation pavement
தேனீக்களில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com