நாம் மனதில் நினைப்பதை தெளிவாக சொல்ல மொழி எப்படி ஒரு முக்கிய கருவியோ அப்படி தான் நமது பேசும் திறனும்.
பள்ளிகளில் எல்லாம் நமக்கு கம்யூனிகேஷன் கிளாஸ் எடுத்திருப்பார்கள் நினைவிருக்கிறதா? அப்போது தூங்கி வழிந்திருப்போம். ஆனால் நம்மை, நமது திறனை வெளிப்படுத்த கம்யூனிகேஷன், அதாவது தகவல் தொடர்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.
நாம் வேலைக்காக ஒரு நேர்காணலுக்கு செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். கேட்கபடும் கேள்விகளுக்கு பதில் தெரியும், ஆனால் வாய் திறந்து சொல்லுகையில் உளறுவோம்.
இது நம் மீது நமக்கே தைரியம் இல்லாத நிலையை குறிக்கும். இதனால் வேலை கிடைக்காமல் போகலாம்.
நம் கம்யூனிகேஷனை வலுபடுத்த என்ன செய்யலாம்? சில டிப்ஸ்
எந்த ஒரு இடத்தில் நம் வாய் வழிச் சொற்களை விட உடல்மொழி நம் மன நிலையை உரக்க சொல்லிவிடும். நம்முடன் இருப்பவரின் நிலையையும் நமது உடல்மொழி இன்ஃப்ளுயென்ஸ் செய்யலாம். அதனால் உற்சாகமாக, தைரியமாக இருங்கள்.
பயம், தயக்கம் இருந்தாலும், அதனை வெளியில் சொல்ல தயங்கவேண்டாம்!
நாம் சொல்ல நினைக்கும் விஷயத்தை எப்போதும் சரியாக சொல்லவேண்டும். தெளிவாக தங்கு தடையின்றி பேசினால், நாம் சொல்வதை கவனிப்பார்கள்.
பேசப்போகும் விஷயம் குறித்த நல்ல ஞானம் நமக்கு இருத்தல் அவசியம். தெரிந்ததை தெளிவாக பேசினாலே, பாதி கான்ஃபிடன்ஸ் நமக்கு வந்துவிடும்.
தவறாக பேசுகிறோமோ என்ற ஒரு வினாடி சிந்தனையும் நம்மை அப்செட் செய்துவிடும்.
அதற்கு இடம் கொடுக்கவேண்டாம்
நம் மனதை ஒரு நிலைப்படுத்தி தெரிந்துகொள்ள நினைக்கும் விஷயத்தை முழுதாக கவனிக்கவேண்டும். எவ்வளவு நாம் மற்றவரை கவனிக்கிறோமோ, அவ்வளவு ஆழமாக நம் புரிந்துகொள்ளும் திறன் மேம்படும். எப்போதும் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிக்க கவனிக்காமல், என்ன விஷயத்தை ஒருவர் சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள கவனிக்கவேண்டும்.
நேராக கண் பார்த்து கதைப்பது நம் உறுதியை ஒருவருக்கு உரக்கச் சொல்லும். நாம் பேசும் விஷயம் குறித்த சரியான புரிதல் நம்மிடம் இருக்கிறது, மேலும் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கவும் இது வழிவகுக்கிறது.
ஒருவரோடு பேசுகையில், குறைந்தது 5 வினாடிகளாவது அவர்களுடன் ஐ கான்டாக்ட் வைப்பது அவசியம். இது மற்றவரின் கவனத்தையும் பெற இயலும்.
எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசும்போதும், இப்படி இருக்கலாம் என்கிற ஊகத்துடன் பேசாதீர்கள். அது நிலையற்ற தன்மையை குறிக்கும்.
எந்த ஒரு விஷயத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட தரப்புகள் இருக்கும். உங்களுக்கு தெரிந்தது மட்டும்தான் சரி என்ற மனநிலை வைக்கவேண்டாம்.
நாம் கான்ஃபிடன்ட் ஆக இருப்பதற்கும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று அடம் பிடிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது.
மற்றவரின் கருத்துகளை கேட்கும் மனநிலை வைத்திருப்பது அவசியம்