சீரியல் கில்லர்கள் குறித்து நாம் அதிகமாக சினிமாவில் தான் பார்த்திருப்போம். வெகு சில நேரங்களிலே நம் ஊர் பத்திரிகைகளில் சீரியல் கில்லர்களின் கதைகள் இடம் பெற்றிருக்கும்.
ஆனாலும் சீரியல் கில்லர்களின் கதைகள் பற்றி ஆர்வம் நமக்கு அதிகமாகவே இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன, ஒருவர் ஏன் தொடர்ச்சியாக கொலைகள் செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு பல நேரங்களில் மனச் சிக்கல்கள் காரணமாக இருக்கும். சைக்கோ கொலைகாரர்கள் பல கொலைகள் செய்வதை அறிந்திருப்போம்.
சைகோ கில்லர் என்றால் அவர் வாழ்க்கையில் எந்த மாதிரியான சம்பவங்கள் இடம் பெற்றிருக்கும்? அவர் மனதளவில் கடந்துவந்த பாதை கடினமானதாக இருந்திருக்கலாம்.
கச்சிதமாக கொலை செய்ய தெரியாத ஒருவர் 1,2 கொலைகளிலேயே பிடிபட்டுவிடுவார். ஒரு சீரியல் கில்லர் என்பவர் கொலை செய்வதில் ஜீனியஸாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.
திறமையாக கொலை செய்பவன் அடுத்த கொலை செய்வதற்குள் பிடிக்க வேண்டும் என்ற அழுத்தம் காவல்துறையினருக்கு ஏற்படும். பொதுமக்கள் பீதியடைவர்.
காவலர்கள் தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி எப்படி கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் த்ரில்லான விஷயம். இப்படி சீரியல் கொலையாளிகள் பற்றி பேசிக்கொண்டே போகலாம்...
பெரும்பாலான சீரியல் கில்லர் திரைப்படங்கள் என்னவோ அமெரிக்காவில் தான் எடுக்கப்பட்டுள்ளன. அங்குதான் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கிறார்களா? அல்லது அங்கு அதிக படங்கள் எடுக்கப்படுகின்றனவா? உலகில் அதிக சீரியல் கில்லர்கள் இருக்கும் டாப் 10 நாடுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அமெரிக்காவில் தான் அதிகமாக சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக 1970 - 2000 ஆண்டுகளில் சீரியல் கில்லர் செய்திகள் அடிக்கடி தலைப்பு செய்தியாகின.
இதுவரை 3,204 பதிவு செய்யப்பட்ட சீரியல் கில்லர்கள் இருந்திருக்கின்றனர்.
அமெரிக்கா போலில்லாமல் நிலையான பாரம்பரியத்தைக் கொண்ட நாடாக இருந்தாலும் இரண்டாம் இடம் பிடித்துள்ளது பிரிட்டன். ஆனால் முதலிடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் நீங்கள் நினைத்துப் பார்க்காத இடைவெளி இருக்கிறது.
இங்கிலாந்தில் 166 பதிவு செய்யப்பட்ட சீரியல் கில்லர்களே இருந்துள்ளனர்.
ரட்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அறிக்கையில் கூறுவதன் படி தென்னாப்பிரிக்காவில் 117 சீரியல் கில்லர்கள் இருந்திருக்கின்றனர்.
அமெரிக்காவுக்கு அண்டைநாடாக இருக்கும் கனடா இந்த பட்டியலில் எதிர்பார்க்கப்பட்டதுதான். கனடாவில் 106 பதிவு செய்யப்பட்ட சீரியல் கில்லர்கள் இருந்திருக்கின்றனர்.
5வது இடத்தில் இருக்கும் இத்தாலியில் இரண்டு இலக்கத்திலேயே சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை இங்கு 97.
மிகவும் அமைதியான நாடாக பார்க்கப்படும் ஜப்பானில் 95 சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர்.
வரலாற்றில் நாஜி அமைப்பையும், தீவிர சர்வாதிகாரத்தையும் கடந்துவந்துள்ள ஜெர்மனியில் 85 சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர்.
கிட்டத்தட்ட அமெரிக்காவைப் போன்ற வரலாறு கொண்ட ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இருக்கிறது. இங்கு 81 சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர்.
நம் நாடான இந்தியாவுக்கும் இந்த பட்டியலில் இடம் உள்ளது. பல மதங்கள், சாதிகள், இனங்கள், மொழிகளைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் நம் நாட்டில் 80 சீரியல் கில்லர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
சோவியத் யூனியனாக இருந்து ரஷ்யாவாக உருவான நாட்டில் பல அரசியல் குழப்பங்கள் எப்போதும் உண்டு. இயற்கை வளம் குறிப்பாக எண்ணெய் வளம் மிகுந்த நாட்டில் 73 சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர்.
இந்த டாப் 10 நாடுகளில் இரண்டு ஆசிய நாடுகள் மட்டுமே இருக்கின்றன. ஆசியாவிலேயே அதிக சீரியல் கில்லர்கள் உள்ள நாடு இந்தியாதான்.
மற்ற எல்லா நாட்டையும் சேர்த்தாலும் அமெரிக்காவில் உள்ள சீரியல் கில்லர்களை விட குறைவாகத்தான் இருக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust