மாநகரங்களின் அன்றாட அத்தியாவசிய பணிகளைப் பார்க்கும் மக்கள் இங்கேதான் வாழ்கிறார்கள். வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ-டாக்சி ஓட்டுநர்கள், எலக்டிரிசியன்கள், பிளம்பர்கள், கடை ஊழியர்கள், பாதையோர வியாபாரிகள், துப்புறவு பணியாளர்கள் மற்றும் பிற முறைசாராத தொழிலாளிகள் அனைவரும் இங்கே வாழ்வதன் மூலம்தான் நகரம் இயங்குகிறது. குடிசைப் பகுதிகள் இல்லையென்றால் மாநகரங்களின் அன்றாட பணி ஸ்தம்பித்து விடும்.
ஐக்கிய நாடுகள் சபையானது, நகரத்திற்குள் சுத்தமான நீர், சுகாதார வசதிகள், போதுமான வாழ்க்கை இடம், தற்காலிக வீடுகள் மற்றும் பாதுகாப்பு இல்லாத வீடுகளைக் கொண்ட நெருக்கமான பகுதிகளை சேரிகளாக வரையறுக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ள கனடா ரியல் கலியானா சேரிப்பகுதி அல்லது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ரோசின்ஹா போன்ற சேரிகள் வன்முறை, வறுமை போன்றவற்றிக்கு பிரபலமாக இருந்தாலும் சேரிப்பகுதிகளை வைத்து சிறு குறு தொழில்களும் நடக்கின்றன. இங்கே உலகின் மிகப்பெரிய சேரிகளையும் அங்கே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் பார்ப்போம்.
"குப்பை நகரம்" என்று அழைக்கப்படும், தென்கிழக்கு கெய்ரோவில் உள்ள மொக்கட்டம் மலைகளின் அடிவாரத்தில் உள்ள இந்த சேரியானது ஜப்பலீன் அல்லது குப்பை சேகரிப்பாளர்களாக பணிபுரியும் காப்டிக் கிறிஸ்தவர்களின் தாயகமாக உள்ளது. எனவே இது பயன்படுத்தப்பட்ட பொருட்களை பிரித்து மறுசுழற்சிக்கு தயார்படுத்தும் ஒரு மையம். மற்றும் எகிப்திய தலைநகரின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. பெரும்பாலான வீடுகளில் சாக்கடைகள், மின்சாரம், குடிநீர் இல்லை.
2009 இல் பன்றிக்காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து அனைத்து பன்றிகளையும் படுகொலை செய்தது மன்ஷியத் குடியருப்பாளர்களை கடுமையாக பாதித்தது. ஏனெனில் அவர்கள் பன்றிகளை அதிகம் உட்கொள்கிறார்கள், பன்றி இறைச்சியை விற்று வாழ்கிறார்கள். இவ்வளவு வறுமைக்கிடையிலும் மன்ஷியத் சேரிக்கட்டிடங்களின் சுவர்களில் பிரம்மாண்டமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இந்த சேரியில் கிரிமினல் கும்பல்கள் அதிகம் உள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகள் குறைவு, தரமற்றவை. 2017 ஆம் ஆண்டில் இப்பகுதி ஆயுதமேந்திய சிப்பாய்களால் ஹைட்டியின் தலைநகரிலிருந்து பிரிக்கப்பட்டது.
கடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டில் இந்த மரக்கட்டைகள் மற்றும் இரும்பிலான குடிசைகளில் வாழும் மக்கள் தொகை 4,00,000 ஆக இருந்தது. ஆனால் சமூகஆர்வலர்கள் உண்மையான குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். தென்னாப்பிரிக்காவில் 1980-களில் வெள்ளையின நிறவெறி அரசு நிலவிய காலத்தில் வேலைதேடி கேப்டவுனுக்கு வந்த கருப்பின தொழிலாளிகளுக்கான குடிசைப் பகுதியாக இத அமைக்கப்பட்டது. 1994 நிறவெறி ஆட்சி முடிவுற்றதும் இப்பகுதி வேகமாக வளர்ந்தது.
மக்கள் நீருக்காக வரிசைகளில் பலமணிநேரம் நிற்க வேண்டும். இரண்டு பக்கெட் நீரில் அன்றாடப் பணிகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. வேலையின்மை 70% உள்ளது. குற்றக் கும்பல் மற்றும் பிற வன்முறைகள் காரணமாக ஒவ்வொரு வாரமும் நான்கு கொலைகளை நடப்பதாக போலீசார் கூறுகிறார்கள்.
மணிலா மாநகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் கட்டப்பட்டிருக்கிறது டோண்டோ சேரிப்பகுதி. ஒரு சதுர கிலோ மீட்டரில் 80,000 மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அசுத்தமான நீர் மற்றும் பிற சுகாதாரப் பிரச்சினைகள் காரணமாக நோய் பரவுதல் அதிகம். மேலும் விற்கக்கூடிய பழைய பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்றால் ஒரு குடிசைவாசிக்கு ஒரு நாளைக்கு 175 ரூபாய் கிடைப்பதுஅதிர்ஷடம். இதுதான் ஒரே வருமான ஆதாரம். குப்பையிலிருந்து கோழிக் குப்பைகளைச் சேகரித்து, வேகவைத்து "பேக் பேக்" என்ற உணவை ஆதரவற்ற குடிசைவாசிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஆஸ்கார் விருது பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" திரைப்படத்தில் தாராவியை ஒரு ‘மகிழ்ச்சியான’ பகுதியாக காட்டியிருப்பார்கள். உண்மை அதுவல்ல. குறுகிய பாதைகள், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட குடிசைகள், நாற்றத்தோடு ஓடும் சாக்கடைகள், பொதுக் கழிப்பறைகள், குப்பை மேடுகள் இவைதான் தாராவி. மற்றும் இங்கே மக்கள் வாழ்வது ஒரு அறை கொண்ட வீட்டில்தான். குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் இருந்தாலும் ஒரு அறையில்தான் வாழ்க்கையை ஓட்டவேண்டும். மேலும் பல்வேறு சிறு குறு தொழிற்சாலைகள் இங்கே இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு தேசிய இன மக்கள் இங்கே குவிந்து வாழ்கின்றனர். குடியிருப்பாளர்கள் குயவர்கள், தோல் பதனிடுபவர்கள், நெசவாளர்கள் மற்றும் சோப்பு தயாரிப்பாளர்களாக சேரியின் திறந்த வடிகால்களுக்கு மத்தியில் வேலை செய்கிறார்கள்; சில மதிப்பீடுகளின் படி தராவி சிறு தொழிற்சாலைகளின் ஆண்டு விற்பனை 70,000 கோடி என கூறுகிறது.
இந்தச் சேரி மற்றுமொரு சேரிப்பகுதியின் புறநகர்ப் பகுதியாக உருவானது. இங்கே பல்லாயிரக்கணக்கான குடிசைப் பகுதிகளுக்கு மத்தியில் ஆங்காங்கே சிற்சில செங்கல் வீடுகள் காணப்படுகின்றன. மேலும் போதைப் பொருள் போரால் பாதிக்கப்பட்ட மெக்சிகோ வரலாற்றின் படி இப்பகுதியும் அக்கம் பக்கம் பகுதிகளும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. குப்பை சேகரிப்பு மற்றும் சில முக்கிய உட்கட்டமைப்புகளை உருவாக்க அரசு முயல்கிறது. இந்தச் சேரியின் 70% மக்கள் அருகாமை நகராட்சிகளில் வேலை செய்கிறார்கள்.
கென்ய தலைநகரில் மூன்றில் இரண்டு பங்கு குடியிருப்பாளர்கள் நகரின் 6% நிலப்பரப்பில் கூட்டமாக மூன்று சேரிகளில் வாழ்கின்றனர். உதாரணமாக, கிபேரா என்பது 15 பகுதிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மண் குடிசைகள் மற்றும் தகரக் குடிசைகளைக் கொண்ட ஒரு பரந்த சமூகமாகும். குழாய் நீர், தார் சாலைகள் மற்றும் தெருவிளக்குகள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் கிபேரா மற்றும் பிற நைரோபி சேரிகளில் வாழ்க்கையை சற்றே மேம்படுத்துகின்றன.எனினும் குற்றக் கும்பல்கள், அரசியல் வன்முறை மற்றும் சட்டத்திற்குப் புறம்பான போலீஸ் கொலைகள் இன்னும் கடுமையான பிரச்சனைகளாக இங்கே உள்ளன.
பாகிஸ்தானின் மேற்குக் கடற்கரையில் கராச்சியின் புறநகர்ப் பகுதியில் 113 குடியிருப்புகளைக் கொண்ட இந்தப் பகுதி சுமார் 8,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குறைந்தது 15 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் பல மதிப்பீடுகளின்படி மொத்த எண்ணிக்கை 24 இலட்சம் பேர் வாழ்வதாக கூறப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று அறைகளில் எட்டு முதல் 10 பேர் வாழ்கின்றனர். கான்கிரீட் தொகுதிகளால் செய்யப்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். அரசாங்க உதவி இல்லாமல், உள்ளூர் மக்களே நிதியுதவி செய்து அதன் சொந்த கழிவுநீர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். உள்ளூர்வாசிகள் அதை பராமரிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறார்கள். மேலும் பல குடியிருப்பாளர்கள் தரைவிரிப்பு, தோல் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகமான மக்கள்தொகை காரணமாக சுத்தமான தண்ணீர் (அல்லது எந்த தண்ணீரும்) கிடைப்பதில்லை. இதனால் மலேரியா, மருந்து எதிர்ப்பு டைபாய்டு மற்றும் மூளையை அழிக்கும் அமீபா போன்ற தண்ணீரால் பரவும் நோய்களான நெக்லேரியா ஃபோலேரி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் அதிகமாக இருக்கின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust