இலங்கை : "தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு மட்டும் மாறாது" - நாடு கடந்த தமிழீழ அரசு

ஏப்ரல் 23 ல் தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டுத் தளத்திற்குச் சென்ற போது, பௌத்த துறவி ஒருவர் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
Sri Lanka
Sri Lanka Twitter
Published on

இலங்கையில் எவ்வகை மாற்றம் நிகழ்தாலும் தமிழர் தேசத்தின் மீதான அபகரிப்பு நீங்காது என்பதனையே மூதூர் சம்பவம் வெளிக்காட்டுவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈழத்தமிழர்களின் பண்டைய அடையாளங்களில் ஒன்றாகத் திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள இராஜவந்தான் மலையில் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு வருவதோடு பௌத்த சின்னங்களை நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 23 ல் தமிழ்மக்கள் மற்றும் சைவ குருமார்கள் பண்டைய வழிபாட்டுத் தளத்திற்குச் சென்ற போது, பௌத்த துறவி ஒருவர் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ளது நாடுகடத்த தமிழீழ அரசாங்கம்.

இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு, ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம், அரசியலமைப்பு மாற்றம், 21ம் திருத்தச்சட்டம் எனப் பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் தாயக மக்களையும் தென்னிலங்கை போராட்டத்தோடு பயணிக்குமாறு அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதும், தமிழ்மக்கள் மௌனமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Sri Lanka
சீன கடன் வலையில் சிக்கிய பாகிஸ்தான், இலங்கை - எப்படி நடந்தது?

இந்நிலையில் மூதூர் சம்பவமானது, பொருளாதார நெருக்கடியினால் சிக்கியுள்ள தென்னிலங்கை, அதிலிருந்து மீளுவதற்கு பல மாற்றங்களை முன்வைத்திருந்தாலும், அதன் அரச இயந்திரம் (கட்டமைப்பு) தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பு, அபகரிப்பு ஓயாது என்பதையே வெளிக்காட்டுகின்றது.

தொல்பொருள் செயலணி, வனஜீவராசிகள் இலக்கா எனத் தனது பல்வேறு திணைக்களங்கள் ஊடாக தமிழர் தாயகத்தின் மீதான பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, இதற்குத் துணையாகத் தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவமே இருக்கின்றது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிங்கள தேசம், இதற்கு முதன்மைக் காரணமாக உள்ள தனது இராணுவச் செலவீனங்கள் பற்றி மூடிமறைத்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தைக் கட்டிக்காத்து, தொடர்ந்தும் தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பையும், கட்டமைப்பு சார் இன அழிப்பையும் மேற்கொள்ளவே என்பது மூதூர் சம்பவத்தின் மூலமாக மீண்டும் வெளிப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Sri Lanka
இலங்கை : “நடக்கக் கூடாத ஏதோ நடக்கப் போகிறது” - அச்சம் தெரிவித்த முக்கியப் புள்ளி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com