குப்பை பையின் விலை ரூ.1.4 லட்சமாம் - ஏன் தெரியுமா?

Balenciagas எனப்படும் உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று, 1790 டாலர்களுக்கு Trash Pouch எனப்படும் குப்பை பை ஒன்றை உருவாக்கி உள்ளது. அதாவது அந்த குப்பை பையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாயாம்.
trash pouch
trash pouchTwitter
Published on

குப்பைகளைக் கொட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் குப்பை பைகள் விலை லட்சக் கணக்கில் இருப்பதைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குப்பைத் தொட்டியுடன் சேர்த்து குப்பை பைகளை வைப்பதற்கான காரணம், தொட்டி நிறையும் போது, நிரம்பிய பைகளை மட்டுமே எடுத்து மாற்றி விட்டு, புதிய பை ஒன்றை மாற்றிக்கொள்ளலாம்.

இதன் மூலம், குப்பைத் தொட்டியில் அவ்வளவு அழுக்கு சேராது. இந்த குப்பை கவரை தற்போது அனைவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்துகின்றனர்.

ஒரு குப்பை பையின் விலை மிஞ்சிப் போனால் 100 ரூபாய் வரை விற்கப்படும் அல்லது அதன் அளவை பொறுத்து விலை கூடவோ, குறையவோ விற்கப்படும்.

குப்பை பையின் விலை 1.4 லட்சம்

ஆனால் இந்த குப்பை கவரின் விலை, சுமார் ஒரு லட்சத்துக்கு ரூபாய்க்கு மேல் உள்ளது என அறிந்தால் உங்களுக்கு என்ன தோன்றும்.

அப்படி விலை மதிப்புள்ள குப்பை கவரை பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

Balenciagas எனப்படும் உலகின் முன்னணி நிறுவனம் ஒன்று, 1790 டாலர்களுக்கு Trash Pouch எனப்படும் குப்பை பை ஒன்றை உருவாக்கி உள்ளது. அதாவது அந்த குப்பை பையின் விலை இந்திய மதிப்பில் சுமார் 1.4 லட்சம் ரூபாயாம்.

trash pouch
ஒரு பக்கெட்டின் விலை இவ்வளவா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

குப்பை பை எப்படி உருவாக்கப்பட்டுள்ளது

உலகின் விலை உயர்ந்த குப்பை போடும் பையாகவும் இது பதிவாகி உள்ளது.

நம் வீட்டில் உள்ள வீணான பொருட்களை சேமித்து, அதைக் கொண்டு கொட்டுவதற்கு எதற்கு இத்தனை டாலர்கள் செலவு செய்து குப்பை பை வாங்க வேண்டும் என்று பலருக்கும் தோன்றலாம்.

ஆனால் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ள குப்பை பையானது, கன்றின் தோல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மிக மிகப் பளபளப்பான கோட்டிக்கும் இதன் மீது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

trash pouch
ஒரு ஓவியத்தின் விலை ரூ.4.9 லட்சமா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

மேலும் கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய நான்கு நிறங்களில் இந்த குப்பை பை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குப்பை கவரை உருவாக்கிய Balenciaga நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டர் Demna Gvasalia கூறுகையில்,

உலகின் மிக விலையுயர்ந்த குப்பைப் பையை உருவாக்கும் வாய்ப்பை என்னால் இழக்க முடியவில்லை, ஃபேஷனை யார் தான் விரும்ப மாட்டார்கள்? எனத் தெரிவித்திருக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com