துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்

முதலாம் உலகப்போருக்கு பிறகு துருக்கியை கிரீஸ் கைப்பற்றியது. பின்னர் துருக்கி சுதந்திரப்போர் நடைபெற்று துருக்கிய குடியரசாக உருவானது. மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலல்லாத துருக்கியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ...
துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்
துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்Canva

இன்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு சிதைந்த நிலையில் இருக்கும் துருக்கி உலகில் உள்ள அழகான நாடுகளில் ஒன்று.

மத்தியதரைக்கடல், கருங்கடல், ஏஜியன் கடல் என கடல்களால் சூழப்பட்டிருக்கும் இந்த நாடு ஒட்டாமன் பேரரசின் ஆட்சியில் இருந்தது.

கிரீஸ், பல்கேரியா, ஈராக், சிரியா, அஜர்பைஜான், ஜார்ஜியா, ஆர்மீனியா மற்றும் ஈரான் ஆகியன துருக்கியுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகள்.

முதலாம் உலகப்போருக்கு பிறகு துருக்கியை கிரீஸ் கைப்பற்றியது. பின்னர் துருக்கி சுதந்திரப்போர் நடைபெற்று துருக்கிய குடியரசாக உருவானது. மற்ற இஸ்லாமிய நாடுகளைப் போலல்லாத துருக்கியைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ...

இஸ்தான்புல்
இஸ்தான்புல்

ஒருநகரம் - இரண்டு கண்டங்கள்

துருக்கியில் உள்ள மிகப் பெரிய நகரமான இஸ்தான்புல் ஆசியா, ஐரோப்பா ஆகிய இரண்டு கண்டங்களிலும் இருக்கிறது. உலகில் வேறெந்த நகரும் இதுபோல இரண்டு கண்டங்களில் இல்லை.

ஒரு ஆசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல் ஐரோப்பியாவின் அழகான இடங்களில் ஒன்றாக பெயர்பெற்றிருக்கிறது.

உலகின் மிக பழமையான, பெரிய ஷாப்பிங் மால்

ஒரு ஊருக்கு பயணம் செய்தால் அங்குள்ள சிறப்புமிக்க பொருட்களை வாங்கி வருவோம். துருக்கியில் அப்படி சிறப்புமிக்க பொருட்களாக இருக்கும் அத்தனையையையும் கிராண்ட் மால் அல்லது கபலி கர்சி (Kapali Carsi) என்ற இடத்தில் வாங்கிவிட முடியும்.

இது உலகிலேயே மிகப் பெரியதும் பழமையானதுமாகும். இங்குள்ள 61 தெருக்களில் 4000த்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

துருக்கி மக்களும் தேநீரும்

துருக்கிய காபி மிகவும் பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் துருக்கி மக்கள் டீக்கு தான் அடிமையானவர்கள். 96% மக்கள் தினமும் ஒரு கோப்பையாவது தேநீர் அருந்துகின்றனர்.

துருக்கியில் நெளிவுசுழிவான கண்ணாடி டம்ளரில் வழங்கப்படும் டீ-க்கு அத்தனை ரசிகர்கள்!

துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்
உக்ரைன் போர்: நெருக்கமாகும் சவுதி அரேபிய - சீன நட்பு, தனித்துவிடப்படும் அமெரிக்கா

வைன்

துருக்கியில் வைன் உற்பத்தி மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது. ஆனால் உலகில் பலருக்கும் இது தெரியாது.

வரலாற்றில் மிகவும் முன்னதாக வைனை தயாரிக்கத் தொடங்கியவர்கள் துருக்கியர்கள். வைன் தயாரிக்கப்பயன்படும் திராட்சையும் துருக்கியில் தான் அதிகமாக வளர்கிறது.

கலாச்சார பாரம்பரியம்

துருக்கியில் பல வரலாற்று பாரம்பரியத் தளங்கள் உள்ளன. அதில் 13 இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனாலேயே உலகில் அதிகமாக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடுகளில் துருக்கி 6வது இடத்தைப் பிடிக்கிறது.

துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்
குங்குமப்பூ காபி முதல் மவுண்டெயின் டியூ வரை: ஓமன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
 சுல்தான்முகமது மசூதி
சுல்தான்முகமது மசூதி

மசூதிகள்

துருக்கியில் உள்ள 99% மக்கள் முஸ்லீம்கள். இதனால் அங்கு 82,693 மசூதிகள் உள்ளன. மிகவும் ஆன்மீகமான கலாச்சார விழுமியங்களைத் துருக்கி கொண்டுள்ளதற்கு அதிக மசூதிகளும் காரணம்.

நீங்கள் முஸ்லீமாக இல்லை என்றாலும் இந்த மசூதிகள் தரும் வைப்ரேஷனை அனுபவிக்கலாம், அவற்றின் அழகை ரசிக்கலாம். குறிப்பாக இஸ்தான்புல்லில் உள்ள சுல்தான்முகமது மசூதி மிகவும் பிரபலமானது. இதை நீல மசூதி என்றும் அழைக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா
கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தாவாக அறியப்படும் புனித நிக்கோலாஸ் துருக்கியின் பதரா என்ற இடத்தில் பிறந்தவர்.

புனித பால் தார்சஸ் என்ற துருக்கிய பகுதியில் இருந்து வந்தவர். தீர்க்கதரிசி ஆபிரகாம் சன்லிர்ஃபா (Sanliurfa) என்ற இடத்தில் பிறந்தவர். பெருவெள்ளத்துக்கு பிறகு நோவாவின் படகு அரராட் மலையில் வந்து நின்றதாகவும் கூறப்படுகிறது.

துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்
சுவீடன் : 110 மொழிகளுக்கு தாய்மொழிக் கல்வி வழங்கும் நாடு

துருக்கியில் மொழிகள்

துருக்கியில் வாழும் 90 விழுக்காடு மக்கள் துருக்கிய மொழியை தான் பேசுகின்றனர். ஆனால் அங்கு பல சிறுபான்மை மொழிகளும் இருக்கின்றன.

சசாகி, குர்மாஞ்சி, அரபி மற்றும் குர்து போன்ற மொழிகளை மக்கள் பேசுகின்றனர்.

கப்படோசியா
கப்படோசியாTwitter

கப்படோசியா

துருக்கியின் பண்டைய நகரமான கப்படோசியாவில் தான் பண்டைய கிறிஸ்தவர்கள் மறைந்து வாழ்ந்தனர். ரோமானிய அரசர்கள் படையெடுத்த போது இந்த மலையில் இருந்த குகைகளில் பதுங்கி வாழ்ந்தனர்.

இந்த ஆன்மிக அடையாளங்களை இன்றும் அங்கு காண முடியும். இப்போது இந்த நகரம் பறக்கும் பலூன்களுக்கு பிரபலமானதாக இருக்கிறது.

துருக்கி : நீல மசூதி முதல் பாரம்பரிய வைன் வரை - 10 ஆச்சரிய தகவல்கள்
ஈரான் நாடு குறித்த ஆச்சர்யமான இந்த 8 உண்மைகள் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com