Turkey hit by another 6.4 magnitude earthquake
Turkey hit by another 6.4 magnitude earthquake Twitter

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்: தொடரும் மரணங்கள்; அச்சத்தில் மக்கள் - என்ன நடக்கிறது?

நேற்று துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Published on

பிப்ரவரி 6 ஆம் தேதி காலை துருக்கி மற்றும் சிரியா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதில் துருக்கியின் 10 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

குறிப்பாக காஜியன்டப், சன்லிஉர்பா, தியார்பக்கிர், அடியாமன், மலாட்யா, உஸ்மானியா, ஹதே, கில்லிஸ் ஆகிய மாகாணங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

Twitter

இதனால் துருக்கியில் 45,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதி, மீண்டும் துருக்கி மற்றும் சிரியாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Turkey hit by another 6.4 magnitude earthquake
துருக்கி நிலநடுக்கம் : குர்து இன மக்களை அழிக்க செயற்கையாக உருவாக்கப்பட்டதா? உண்மை என்ன?

இந்த நிலையில் நேற்று துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள்கூட இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், மீண்டும் மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்படுவது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Turkey hit by another 6.4 magnitude earthquake
”இந்தியாவில் நிலநடுக்கம் வரும்” துருக்கி பூகம்பத்தை முன்பே கணித்த நபரின் அடுத்த ட்வீட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com