உலகின் விசித்திரமான சிரிப்பு இது தான்- இணையத்தை கவர்ந்த டிவி ஷோ! | Video

டிவி சேனல் ஒன்று "இட்ஸ் மை சாய்ஸ்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. உலகத்தில் விசித்திரமாக சிரிப்பவர்களை பங்கேற்க வைத்து மக்களை என்டெர்டெய்ன் செய்வது தான் அதன் நோக்கம்.
உலகின் விசித்திரமான சிரிப்பு இது தான்!
உலகின் விசித்திரமான சிரிப்பு இது தான்! Canva
Published on

வித்தியாசமான சிரிப்புகளை கொண்டவர்களை வைத்து நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோ ஒன்று ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது.

தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சமில்லை. ஒரே கான்சப்ட்டில் நிகழ்ச்சிகளை நடத்தினால் மக்கள் மனதை கவர்வது கடினம். இருக்கும் ஆடியன்ஸை தக்கவைக்க, மேலும் ரசிகர்களை வரவேற்க நிறைய வித்தியாசமான ஐடியாக்களை முன்னிருத்தி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

பிக் பாஸ், நகைச்சுவையான வினா விடை போட்டி, ஜாக்பாட் போன்ற நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.

உலகின் விசித்திரமான சிரிப்பு இது தான்!
Cannibalism : தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்; 7 விசித்திர உண்மைகள்

அந்த வகையில் பிரஞ்சு டிவி சேனல் ஒன்று "இட்ஸ் மை சாய்ஸ்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. உலகத்தில் விசித்திரமாக சிரிப்பவர்களை பங்கேற்க வைத்து மக்களை என்டெர்டெய்ன் செய்வது தான் அதன் நோக்கம்.

வழக்கமாக சிரிப்பவர்கள் போல அல்லாமல், விலங்குகள், பறவைகள் என இதுவரை நாம் கேட்டிராத சப்தங்களை எழுப்பி சிரிக்கின்றனர். பங்கேற்பாளர்களின் தலைக்குமேல் ஒரு ஸ்க்ரீனில் இந்த விலங்குகள், பறவைகள் பொருட்களின் புகைப்படம் தோன்றுகிறது. அதற்கேற்றார்போலும் இவர்கள் சிரிக்கின்றனர். இது அங்கு கூடியிருக்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இதன் வீடியோ ஒன்று டிவிட்டரில் பகிரப்பட, நெட்டிசன்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன் 2016ல் ஒரு முறை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப பட்டபோதும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போதும் இதை டிவிட்டரில் பார்த்துவிட்டு ரசிகர்கள் அவர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு டிவிட்டர் பயனர், "ஆம்புலன்ஸை வரவழைக்க வேண்டும். சிரித்து சிரித்து என் விலா எலும்புகள் நொறுங்கிவிட்டன. இதுவரை நான் பார்த்ததிலேயே மிக அற்புதமான நகைச்சுவை நிகழ்ச்சி இது தான்" என பதிவிட்டிருந்தார்.

உலகின் விசித்திரமான சிரிப்பு இது தான்!
அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com