அழுகை சடங்கு முதல் எச்சில் துப்புவது வரை - உலகின் வித்தியாசமான திருமண கலாச்சாரங்கள்

உலகம் முழுக்க சில இடங்களில் விசித்திரமான முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்த திருமண நிகழ்ச்சியில் என்னென்ன நடைபெறுகிறது என்பதைக் காணலாம்.
bride
brideTwitter
Published on

உலகம் முழுக்க ஒவ்வொரு நாட்டிலும் திருமணம் என்றாலே ஒரு கொண்டாட்டம் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்..

ஒவ்வொரு திருமணமும் தங்களின் கலாச்சார முறைப்படி பல்வேறு மரபுகளைப் பின்பற்றுவார்கள்.

சிலர் தங்களின் கல்யாணம் இவ்வாறு தான் நடக்க வேண்டும் என்று வித்தியாசமான முறையில் அனைவரையும் திரும்பிப் பார்க்கும் வண்ணம் நடத்துவார்கள். இவ்வாறு உலகம் முழுக்க சில இடங்களில் விசித்திரமான முறையில் திருமணங்களில் சடங்குகள் நடைபெறுகின்றன. அப்படி திருமண நிகழ்ச்சியில் என்னென்ன நடைபெறுகிறது என்பதைக் காணலாம்.

ஜூதா சுப்பாய் ( Joota Chupai)

ஜூதா சுப்பாய் என்ற ஒரு வகையான வினோதமான சடங்கில் மாப்பிள்ளையின் காலணியை எடுத்து மறைத்து வைத்து பெண்ணின் சகோதரிகள் விளையாடுவர்.

பின் மாப்பிள்ளை தரப்பில் இருந்து மாப்பிள்ளையின் சகோதர சகோதரிகள் பேரம் பேசி மாப்பிள்ளைக்கு அதை வாங்கி கொடுப்பார்கள்.

மரத்தை திருமணம் செய்ய வேண்டும்

மணமக்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்தால் கெட்டது நடைபெறும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதற்காக முதலில் மரத்தைத் திருமணம் செய்தால் அவற்றைத் தடுக்க முடியும் என்பது பலரின் நம்பிக்கை. இதனை ஒரு வினோதமான சடங்காகவும் பின்பற்றுகின்றனர்.

அழுகை சடங்கு

திருமணங்களில் பெரும்பாலும் அழுகை ஒரு உணர்ச்சிகரமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. திருமணமாகும் பெண்கள் பிறந்த வீட்டை விட்டுப் போகிறோம் என்ற கண்ணீருடனும் திருமணம் நடைபெற்று தன்னவனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்கிறோம் என்ற ஆனந்தக் கண்ணீருடனும் ஒவ்வொரு திருமணம் நிகழ்வு இருக்கும்.

ஆனால் சீனாவின் துஜியா மக்கள் திருமண நாளுக்கு 30 நாட்களுக்கு முன்னர் அழுவதன் மூலம் திருமணத்திற்குத் தயாராகிறார்கள். மணமகள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அழுவார்களாம்.

bride
தவளை கால் முதல் செவ்வெறும்பு வரை: இந்தியாவிலிருக்கும் 10 வித்தியாசமான உணவுகள்

மணமக்களைக் கருப்பாக்கும் சடங்கு

மணமக்களின் மீது கருப்பு சாயம் பூசுவது என்பது ஸ்காட்லாந்தில் இருக்கும் ஒரு சடங்காகும். இந்த சடங்கில் மணமக்களை அவர்களின் நண்பர்கள் பல பொருட்களைக் கொண்டு அலங்கோலமாக்கவிடுகிறார். தீய சக்திகளை விரட்டுவதற்காக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது. ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் இது இன்னும் நடக்கிறது.

மீதி உணவு பரிமாறப்படும்

பிரஞ்சு பழக்கவழக்கங்களின்படி, எஞ்சிய உணவுகளை ஒரு பானையில் வைத்து புதுமணத் தம்பதிகளுக்குக் கொடுப்பார்களாம். இது தம்பதியருக்கு ஆற்றலைக் கொடுக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. தற்போது அந்த முறை மாறி அவர்களுக்கு சாக்லேட் மற்றும் மதுபானம் வழங்கப்படுகிறது.

bride
30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் - இந்த வினோத சடங்கு ஏன் ?

3 நாட்களுக்குக் குளியலறை இல்லை

திருமணம் முடிந்த மூன்று நாட்களுக்குத் திருமணமான தம்பதிகள் கழிவறை பயன்படுத்தக் கூடாது என்ற வினோத பழக்கம் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் நடைமுறையில் உள்ளது.

இந்த பழக்கத்தினை மீறும் தம்பதிகளின் திருமண வாழ்வில் முறிவு , தனது துணைக்குத் துரோகம் செய்வது, குழந்தைகள் பிறந்தால் உயிரிழப்பது போன்ற துயர சம்பவங்கள் நடக்கும் என நம்புகின்றனர்.

முத்த பாரம்பரியம்

திருமணத்தின் போது முத்தம் கொடுப்பது சாதாரணமானது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்த சடங்கு அப்படிப்பட்டதல்ல. இந்த சடங்கில் நீங்கள் விரும்பினால் மணமகன், மணமகள் யாருக்கு வேண்டுமென்றாலும் முத்தம் கொடுக்கலாம்.

திருமணத்தின் போது மணமகன் ஏதாவது ஒரு காரணத்திற்காக நகர்ந்து செல்ல நேர்ந்தால் திருமணமாகாத இளைஞர்கள் மணப்பெண்ணை முத்தமிடலாம். அதேபோல மணமகனுக்கும் திருமணம் ஆகாத பெண்களை முத்தமிடலாம். இது ஸ்வீடனின் தனித்துவமான பாரம்பரியமாகும்.

bride
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி

திருமண நாளில் சிரிக்கக் கூடாது

திருமண நாட்கள் உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாக இருக்க வேண்டும். காங்கோவின் சில பகுதிகளில் அப்படி இல்லை! காங்கோ திருமணங்கள் காதலைப் பற்றியது அல்ல, அவை இரண்டு குடும்பங்கள் மணமகளின் "விலை" பேரம் பேசிய பிறகு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். அந்த நாளில் மணமக்கள் சிரிக்கக் கூடாது என்பது அவர்களின் வழக்கம்.

kimkihong

மணமகனின் கால்களை அடிப்பது

தென் கொரியாவில் திருமண விழாவுக்குப் பிறகு "மணமகனின் கால்களை அடிப்பது" என்ற சடங்கு நடைபெறுகிறது. உண்மையில் இது ஒரு வேடிக்கையான பாரம்பரியம். இந்த வேடிக்கையான சடங்கு கொரிய திருமண கலாச்சாரத்தில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

மணமகள் மீது எச்சில் துப்புதல்

கென்யாவின் வினோதமான திருமண சடங்குகளில் ஒன்று இதுவாகும். துப்புவது பொதுவாக அவமானத்தின் அடையாளமாகும், ஆனால் மசாய் மக்கள் அதனை ஆசீர்வாதமாகப் பார்க்கிறார்கள். மணமகளின் தந்தை மகளின் தலை மற்றும் மார்பகங்களில் எச்சில் துப்பி ஆசீர்வதிக்கிறார்.

bride
எரித்ரியா : ஒரு ஆண் இரு பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் - இது உண்மையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com