சில வாரங்களுக்கு முன்புதான் உலகின் நம்பர் 1 பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக தளமான ட்விட்டரை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
அப்போது, அக்கருத்தை ட்விட்டர் பங்குதாரர்கள் குழு பெரிதாக வரவேற்றதாகத் தெரியவில்லை. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க விரும்பியதைத் தொடர்ந்து, பாய்சன் பில் என்கிற ஒரு கார்பப்ரேட் தடுப்பு முறையை கையில் எடுத்தது ட்விட்டர்.
யாராவது ஒருவர் ட்விட்டரில் 15 சதவீதத்துக்கு அதிகமாக பங்குகளை வாங்கினால், புதிதாக வாங்குவோரைத் தவிர, ஏற்கனவே ட்விட்டர் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், சுமார் 50 சதவீத தள்ளுபடி விலையில் புதிய ட்விட்டர் பங்குகளை வாங்கலாம் என்பது தான் பாய்சன் பில் யுக்தியாக கூறப்பட்டது.
இதனால், புதிதாக ட்விட்டர் நிறுவனத்தை வளைத்துப் போட விரும்புவோர், அதிக பணம் கொடுத்து, கூடுதலாக வெளியாகும் பங்குகளை வாங்கியே, தங்களின் பெரும்பான்மையை நிறுவி, நிறுவனத்தை வளைத்துப் போட முடியும்.
ஆனால், இன்று (ஏப்ரல் 25, திங்கட்கிழமை) ட்விட்டர் பங்குதாரர்கள் மற்றும் எலான் மஸ்க், ட்விட்டர் விற்பனை டீல் தொடர்பாக சமாதானமாக அமர்ந்து விவாதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு தான், எலான் மஸ்க் தன் சொந்த பணமாக 21 பில்லியன் டாலர், டெஸ்லா பங்குகளை அடமானம் வைத்து 12.5 பில்லியன் டாலர் கடன், மார்கன் ஸ்டான்லி நிறுவனத்திடமிருந்து 13 பில்லியன் டாலர் கடன் என மொத்தம் 43.5 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும், ட்விட்டரை வாங்க தான் தயாராக இருப்பதாக மறைமுகமாகச் கூறியது, இணையவாசிகளின் புருவத்தை உயர்த்தச் செய்தது.
ஒருவேளை, ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின் டீலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், முரட்டுத்தனமாக சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்து, நிறுவனத்தைக் கைப்பற்றும் ஹாஸ்டைல் டேக்ஓவர் முறையும் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com