வட கொரியா: தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர் - என்ன நடந்தது?

மீறி மக்கள் பார்த்து, அவர்கள் பிடிபட்டால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை, அல்லது எந்த அளவிற்கு அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பொறுத்து அவர்களுக்கு மரண தண்டனைக் கூட வழங்கப்படும்.
தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர்
தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர் canva
Published on

வட கொரியாவில் தடை செய்யப்பட்ட தென் கொரிய K-Drama, அமெரிக்க படங்கள், சீரீஸ்களை பார்த்ததற்காக இரண்டு பள்ளி சிறுவர்களை தூக்கிலிட்டுள்ளது வட கொரிய அரசு.

கிம் ஜாங் உன் தலைமையில் இருக்கும் வட கொரியா நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் போன்றவை கிடையாது. குறிப்பிட்ட டிவி சேனல்களை மட்டும் நிறைய கட்டுப்பாடுகளுடன் மக்களின் பயன்பாட்டுக்கு அரசு அனுமதித்துள்ளது.

மேலும் சினிமா வெப் சீரீஸ்களின் சிடிக்களை பார்ப்பதற்கும், விற்பதற்கும் அங்கு தடை உள்ளது.

இதனால் சட்டவிரோதமாக மக்கள் சீரிஸ்கள், படங்களினை வாங்கி பார்ப்பது அங்கு பெருகியிருக்கிறது.

சட்டத்தை மீறி இவற்றை பார்த்து பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது எந்த அளவிற்கு அவர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது பொறுத்து அவர்களுக்கு மரண தண்டனைக் கூட வழங்கப்படும்.

இதை கண்காணிக்க தனிக்குழு அமைத்துள்ளது கிம் ஜாங் உன் அரசு.

தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர்
வட கொரியா : அணு ஆயுதங்களைக் களமிறக்கத் தயார் - என்ன சொல்கிறார் கிம் ஜாங் உன்?

இந்நிலையில், இரண்டு பள்ளி சிறுவர்கள் கடந்த அக்டோபர் மாதம் கொரியன் சீரீஸ் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள், வெப்சீரீஸ்கள் பார்த்ததாக கூறப்படுகிறது.

16 மற்றும் 17 வயதினுடைய இவர்கள் இருவரும் வட கொரியாவின் ரியான்காங் என்ற பள்ளியில் சந்தித்துக்கொண்டுள்ளனர். அப்போது இருவருக்குமே இந்த கொரியன் சீரீஸ்கள், ஹாலிவுட் திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமாக இருப்பது, இருவருக்குள்ளும் நட்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் படங்கள், சீரீஸ்களை பார்த்துள்ளனர்.

இதனை அறிந்த அரசு இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு சிறுவர்களும் நகரத்தில் உள்ள ஒரு விமான ஓடுதளத்தில் தூக்கிலிடப்பட்டனர். இந்த சம்பவம் அக்டோபர் மாதம் நடந்த நிலையில், கடந்த வாரம் தான் வெளிவந்தது.

வட கொரியா:  கிம் ஜாங் உன் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவது ஏன்?
வட கொரியா: கிம் ஜாங் உன் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்துவது ஏன்?Twitter

இப்படி மற்ற நாடுகளின் படங்களை பார்ப்பதனால், பாடல்கள் கேட்பதானால் அந்நிய நாட்டு கலாச்சாரம் வட கொரியா மக்களின் மனதில் வேரூன்றிவிடும், இதனால் மக்கள் அரசுக்கு எதிராக திரும்ப வாய்ப்பிருப்பதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல் மறைவுக்கு 11 நாட்கள் நாடு முழுக்க துக்கம் அனுசரிக்கப்படும் என கிம் அறிவித்திருந்தார். அந்த சமயத்தில் மக்கள் ஷாப்பிங் செய்யக் கூடாது, மது அருந்த கூடாது, சிரிக்கக் கூடாது என்ற கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

சமீபத்தில் கிம் ஜான் உன், வெளிநாட்டு உடைகள், இறுக்கமான ஜீன்ஸ், மற்ற நாட்டு கலாச்சரத்தை போற்றும் அலங்காரங்கள் ஆகியவற்றை செய்துகொள்ளவும் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த செய்தியை அறிந்த உலக மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

தென் கொரிய சீரீஸ் பார்த்த சிறுவர்கள்; மரண தண்டனை விதித்த அதிபர்
வட கொரியா: ”குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என பெயர் வைங்க” அதிபர் உத்தரவு; ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com